தோல்விகளை சேர்த்து வேள்வி செய்தவன் ..!
இருள் மூட இருள்மூட
நீ விரிந்தாய்
இளம்சூரியனாக
இடர்கூட இடர்கூட
நீ எதிர்த்தாய்
இனசூரனாக
வலிகூட வலிகூட
நீ புலியானாய்
புதுவாலிபனாக
மொழி சாக மொழிசாக
நீ முழங்கினாய்
இடி மின்னலாக
இழிபேச இழிபேச
நீ எழுந்தாய்
இன்னும் இரட்டிப்பாக
பகைமோத பகைமோத
நீ வளர்ந்தாய்
பரந்தாமனாக
தடைபோட தடைபோட
நீ உடைத்தாய்
உயிர் தமிழ்வாழ
சதிசெய்ய சதிசெய்ய
நீ புதுவிதிசெய்தாய்
சர்வேஸ்வரனாக
நீ துயரங்கள் சேர்த்து
உயரம் அடைந்தவன்
தோல்விகளை சேர்த்து
வேள்வி செய்தவன்
அயராது உழைத்து
எங்கள் அண்ணணாணவன்
அடிபணியாது தணித்து நின்று
தமிழன் அடையாளம் ஆனவன்.
த.யாளன்