போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..

In தாயக கவிதைகள், முள்ளிவாய்கால் கவிதைகள்

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம்
எங்கள்
ஊர்புகுந்தழித்தது…..

முள்ளிவாய்க்கால் பேரவலம்
என்பது
சொல்லி அழுதிடவோ எழுதிடவோ
முடியாத
பெருந்துயரத்தின் உச்சம் அது
ஓரினத்தின் உயிரெடுத்து
உதிரம் குடிப்பதற்காய்
பேரினவாத பேய்கள் நடாத்தி
முடித்த
கோரத்தாண்டவம்……..

நந்திக்கடல் சிவந்த நீரால்
பொங்கி வழிந்தது
சிங்களம் அதில் படகேறி
சிரித்து மகிழ்ந்தது
எங்கள் இனத்தின் அழிவும்
அழுகையும்
வங்கக் கடலுடன் கரைந்நு
போனது…எம்
சொந்த தேசம் சிங்கள வெறியில்
சிதைந்து போனது………..

போர்வெறிகொண்ட புத்தனின்
தேசம்…. எங்கள்
ஊர் புகுந்தழித்தது
வேர் முதல் கிளை வரை
வேறுபாடின்றி வெட்டி எறிந்து
வீரம் பேசியது…உலகம்
வேடிக்கை பார்த்தது
பாவப்பட்ட உலகத்தின் கோரமுகத்தில்
ஏகப்பட்ட சந்தோசம்…….

எரிந்து கொண்டிருந்த
தேசத்தில்
விழுந்து கருகிக்கொண்டிருந்தது
எம் இனத்தின் எண்ணற்ற
உயிர்கள்
பல்லாயிரம் ஆண்டு பழம்பெருமை
கொண்ட பெரு விருட்சம்
மெல்ல மெல்ல சரிந்து
வேரறுந்து சாய்ந்தது ……..

மனிதம் பேசிய தேசங்கள்
அனைத்தும்
புனிதம் தொலைத்து பொறுமை
காத்தது
குருதிக் கடலில் குளித்துக்
கொண்டிருந்த..எமது இனத்தின்
அழிவில்
விழித்துக் கொண்டே தூங்கின……

சிந்திய குருதியும் கண்ணீரும்
எங்களை உசுப்பேற்றும்..கொடிய
சிங்களம் ஒருநாள் நிட்சயம்
பதில் கூறும்
காலம் மிகவும் கனதியானது
கையறு நிலையில்
எமது இனம் விட்ட கண்ணீர்
ஆழிப் பேரலையாக ஆர்ப்பரித்து
அரக்க்களைத்தேடி
ஊழித்தாண்டவம் ஆடத்தொடங்கி
விட்டது….எம்மை
ஓட ஓட விரட்டிக் கொன்றவன்
இன்று
உயிருக்குப் பயந்து
ஓடி ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறான்…..

இறந்து போன என் இனத்து
உறவுகளின்
சிரிப்பின் ஒலி ..இன்று என்
செவிகளில் கேட்கிறது
வலிகள் தாங்கி வாழும் உயிர்களின்
காதில் ஒருவகை
கானம் கேட்கிறது……..

கவிஞர் ஆவூர்க்குமரன்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13ம் ஆண்டு நினைவாக….

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம்

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம் அறிவை அங்கே கொலுவிருத்தி அறம் தனை நிலை நிறுத்தி வீரம் விண்ணில் கொடி ஏற்றி ஈழமதை ஒருவன் ஆண்டிருந்தான் சோழன் அங்கே அரசிருந்து சொர்க்க நகர்

Read More...

Leave a reply:

Your email address will not be published.