எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

In தாயக கவிதைகள்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்
*******************************************

எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும்
எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து….

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய்
தொன்று தொடும் சுதந்திர விருப்பாய்
தொடரும் எம் விடுதலைப் பயணம்…….

முற்று புள்ளி இட்ட இடத்தில் தான்
மூச்சுக்கள் அடங்கியது
ஆனாலும்.
முளைப்போம் எனும் அசரீரி
அங்கே முறையாய் கேட்கிறது

ஒளியாக நின்று எம் பாதைக்கு உரமிட்ட
உங்கள் பாதங்கள் ஓய்ந்தே போகாது
உளியாக நின்று எம் தேசத்தை செதுக்கிய உங்கள் கனவுகள் சாய்ந்தே வீழாது.

உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கும் வரை எங்கள் கடமைகள் தூங்காது
நீங்கள் நம்பிய தலைவனையே
நாங்கள் நம்புகிறோம்
நீங்கள் வேண்டிய ஈழமதையே
நாங்களும் வேண்டுகிறோம்
அதனால்…..
உருக்குலைந்த உங்கள் சிதை மீது ஒரு சத்தியம் பகர்கிறோம்
பாதி வழியில் எங்கள் பாதைகள் வளையாது
பகை தின்ற பூமியில் எங்கள் பயணம் தொடரும் ..

…கவிப்புயல் சரண்….

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..... முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது சொல்லி அழுதிடவோ எழுதிடவோ முடியாத பெருந்துயரத்தின் உச்சம் அது ஓரினத்தின் உயிரெடுத்து உதிரம் குடிப்பதற்காய் பேரினவாத பேய்கள் நடாத்தி முடித்த கோரத்தாண்டவம்........ நந்திக்கடல் சிவந்த நீரால் பொங்கி வழிந்தது சிங்களம் அதில் படகேறி சிரித்து மகிழ்ந்தது எங்கள் இனத்தின்

Read More...

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது 

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது கானகம் கடல் தரை ஆறென ஓடும் மானினம் மயிலோடு வரை தனில் மேயும் காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும் கவி புனை கைகளில் எழுது

Read More...

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம்

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம் அறிவை அங்கே கொலுவிருத்தி அறம் தனை நிலை நிறுத்தி வீரம் விண்ணில் கொடி ஏற்றி ஈழமதை ஒருவன் ஆண்டிருந்தான் சோழன் அங்கே அரசிருந்து சொர்க்க நகர்

Read More...

Leave a reply:

Your email address will not be published.