தவமின்றி தமிழர்க்கு கிடைத்த பெருவரம் பிரபாகரன்

In தலைவர் கவிதைகள், தாயக கவிதைகள்

தவமின்றி தமிழர்க்கு கிடைத்த
பெருவரம் பிரபாகரன்…!

தவமின்றி தமிழர்க்கு கிடைத்த
பெருவரம் பிரபாகரன்
தமிழன் தலைகுனிந்து நிலைகுலைய
நிமிர்த்தி நிறுத்தியது பிரபாகரம்
இனப்பகை எரிக்க பிறந்த
தீ பிரபாகரன்
இனவிடுதலைக்காய் உறுதியோடு
உயர்ந்து நின்றதும் பிரபாகரம்
விலங்குடைக்க விடுதலை வேங்கையாய்
பிறந்தது பிரபாகரன்
தப்பென அறிந்ததும் தட்டிக்கேட்க
உயர்ந்ததும் பிரபாகரம்
தமிழரின் அகம் என்பதே
பிரபா முகம்
தன்னின விடுதலை ஒன்றே
பிரபா அகம்
தாய்முகம் போன்றது
பிரபா முகம்
தாய்மையையும் வென்றது
பிரபா அகம்
தமிழரின் போர்முகம்
பிரபா முகம்
தமிழரின் கருணைமுகம்
பிரபா அகம்
தமிழரின் அறிவியல் பிரபாகரம்
தமிழரின் வாழ்வே பிரபா அகம்
மொழி ஒளி பிரபாமுகம்
புலி மொழி பிரபாகரம்
உறுதியின் பிறப்பிடம் பிரபாஅகம்
உரிமைப் போர்முழக்கம் பிரபாகரம்
தமிழின அடையாளம் பிரபாமுகம்
தமிழின வல்லமை பிரபாகரம்
பலதலைமுறை தாண்டியும் வாழும் பிரபாகரம்
என்றுமே இறவாவரம் பிரபாகரம்

தலைவா_66
ஈழப்பிரியன்✍️

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.