அழிவின் நினைவிலிருந்து மீழும்வரை உயிரில் உயிரில்லை

In தாயக கவிதைகள், முள்ளிவாய்கால் கவிதைகள்

அழிவின் நினைவிலிருந்து மீழும்வரை உயிரில் உயிரில்லை…….

ஒவ்வொரு நூற்றாண்டுக்கு
ஒருமுறை
மாற்றம் வந்து கொண்டுதான்
இருக்கின்றது…இது
வரலாறு
கொடிய அரசுகள் அழிவதும்
கொரோனா போன்ற நோய்கள்
வருவதும் ஒன்றும்
புதிதல்ல
காலமும் இயற்கையும் ஒரு
கணக்கு வைத்திருக்கிறது
கடல் தரையாவதும் தரை
கடலாவதும்
இயற்கையின் சட்டவரைவில்
எப்பவோ எழுதப்பட்டு விட்டது……

குமரிக்கண்டம் அன்று
அழிவடையாமல் இருந்திருந்தால்
முருகனின் குடிகளே…இன்று
முழு உலகையும் ஆண்டு கொண்டு
இருந்திருப்பார்கள்……..

தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக
தரப்படுத்தல் தொடங்கி
கொதிக்கும் தாரில் போடும் வரை
பொறுத்துக்கொண்டு தானே
இருந்தோம்
எல்லைமீறிப்போய் எங்கள்
இனத்தைக் கொன்றொழித்து
பெண்களையும் குழந்தைகளையும்
தின்று ஏப்பம் விட்டவர்களிடம்
அன்பைக்காட்ட முடியுமா……..

எந்த நிலையிலும் எமது இனம்
பேராசை கொண்டதில்லை
சொந்த மண்ணை மீட்கப்
போராடியதே தவிர
சிங்கள பூமியைச் சிதைக்க
நினைக்கவில்லை…..

முதன் முதலில்
வெங்காய லொறியில்
கொழும்புக்குச் சென்றதையே
ஏதோ
செவ்வாய் கிரகத்திற்குச்
சென்று திரும்பியதைப்போல
சந்தோசப் பட்டவன் நான்
அளவுகடந்த ஆசையோ
ஆக்கிரமிப்பு எண்ணமோ
எமது இனத்துக்கு இருந்ததில்லை
அனைத்து உரிமைகளும்
மறுக்கப்பட்ட போதுதான்
தவிர்க்க முடியாமல் தமிழினம்
போராடத் தொடங்கியது……..

எங்கேயோ பிறந்து வளர்ந்த
சே குவேரா
கியுபாவுக்கும் பொலிவியாவுக்குமாக
போராடிச் சாகும்போது
சொந்த மண்ணுக்காய்
துப்பாக்கி எடுத்ததில் என்ன
தப்பு?

இனத்தின் இருப்பைக் தக்க
வைப்பதற்காக…எமது இனம்
சினங்கொண்டெழுந்ததில்
சிங்களத்துக்கு மட்டுமல்ல
சர்வதேச சண்டியர் களுக்கும்
என்ன பிரச்சனை?

இலங்கை வேந்தன்
இராவணனால் ஆளப்பட்ட
பூர்வகுடித்தமிழர்களின்
புனித பூமியே
இலங்கைத்தீவு
பூர்வகுடித்தமிழர்களிடமிருந்து
வந்தேறிய
புத்தனின் வாரிசுகளால்
திருடப்பட்ட நிலப்பரப்பே
சிங்கள தேசமாகியது…
எனினும்
வெள்ளைக்காரன் வரும்வரை
எல்லைகள் வகுத்து நாம் ஆட்சி
செய்து கொண்டுதானே
இருந்தோம்
இழந்த மண்ணை மீட்கத்தானே
இன்று வரை போராடிக்
கொண்டிருக்கின்றோம்
ஆசையும் கோபமும்அதிகம் இருந்திருந்தால்
சிங்கள தேசத்தையும் இனத்தையும்
சிதைப்பதில் எமக்கு
எந்தச் சிக்கலும்
இருக்கவில்லையே………

பழிக்குப்பழி என்று தலைவன்
நினைத்திருந்தால்
இந்நேரம்
புத்தர் கோயில் எங்கும்
புலிக்கொடி பறந்து கொண்டு
இருந்திருக்கும்
அறப்போரில் இருந்து
ஒரு அணு அளவும் விலகாததனால்
இன்று
அலரிமாளிகை எமது இனத்தின் மீது
அதிகாரமும் அராஜகமும்
செய்து கொண்டிருக்கிறது……

பணக்கார தேசத்தில்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
மனதளவில் கொஞ்சம் கூட
மகிழ்ச்சி இல்லை
இனத்தின் இழப்பை இறுதிவரை
பார்த்ததும்….தமிழ்
உறவுகளின் பிணங்களின் மேல்
பிணங்களைப் போட்டு புதைத்த
என் நினைவுகளில் இருந்து
மீளமுடியாத
நெஞ்சம் நிறைந்த வலிகளோடு
வாழ்வு
நகர்ந்து கொண்டிருக்கிறது……

பன்னிரெண்டு கோடி தமிழர்கள்
பரந்து வாழ்ந்தும்…..வெறும்
ஒன்றரைக் கோடியை
ஒன்றும் செய்யமுடியாமல்
உணர்விழந்து கிடக்கின்றோம்
காலம் எமக்காகக் கனிந்து
வராது
கனிகின்ற காலத்தை
வாழும்போதே உருவாக்கவேண்டும்…….

கவிஞர் ஆவூர்க்குமரன்
தமிழீழம்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.