முள்ளிவாய்க்கால் முடிவல்ல முடங்காதே..
கண்ணீர்
துயரத்தின்
மவுன பாஷை
கண்ணீர்
ஆற்றாமையின்
வெளிப்பாடு
கண்ணீர்
துயரங்களின்
சங்கமம்
கண்ணீர்
இயலாதவனின்
இருப்பிடம்
கண்ணீர்
சாதிக்க
இயலாதவனின் சாபம்
கண்ணீர்
வீரமற்றவனின்
விருப்பு
கண்ணீர்
சோம்பேறியின்
நண்பன்
கண்ணீர்
துன்பசுமையை தூக்கி
சுமப்பதன் கூலி
கண்ணீர்
சாவுக்கு
பயந்தவனின் ஆயுதம்
கண்ணீர்
வீரத்திற்கு
எதிரி
கண்ணீர்
துன்பத்தின்
துணைவன்
கண்ணீர்
கோழைகளின்
ஆயுதமாம்
அதையெப்படி
தமிழர் நாம்
ஏந்த முடியும்
முள்ளிவாய்க்கால் முடிவல்ல முடங்காதே..
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.