கார்த்திகை – 27
மாவீரர் கருக்கொள்ளும் கருவறைகளே!
எனது உறவுகள் துயிலும் கல்லறைகளே!
சற்று கொஞ்சம்
விழி திறவுங்கள்
முற்றுமுழுதாய் உங்களை நம்பிய
பித்துப்பிடித்த தாயவள் வந்துள்ளாள்
அவள் மடியில் துயிலுங்கள்
மீண்டும் ஒரு முறை
கார் மொழியும் மழைத்துளியே!
போதும் கொஞ்சம் நிறுத்திடு
மாவீர உறவுகள்
விழி நீரின் வலியையும் கேளு
தமிழினத்தின் வீரவேர்கள்
தரணியில் ஊன்றிய வீரக்குழந்தைகளே!
மீண்டும் உங்கள்
கல்லறைகளை தேடி தேடி
நெஞ்சறை ஞாபகங்களை கொட்டுகிறோம்
நீங்கள் துயிலும் இல்லத்தை இடித்து அழித்தவன்
இன்றோ!
அனுமதித்திருக்கின்றான்
இதில் இருக்கும் அரசியியல் ரகசியத்தை
மக்களுக்கு கனவிலேனும் உரைத்திடுங்கள்
தமிழர் தாயகம்
மீண்டும் சிவப்பு மஞ்சள் நிறங்களால்
உங்கள் நினைவுகளை சுமந்தே
அந்த தென்றல் வலம்வர
மக்களின் வீரவணக்கம் ஓசை
எங்கும் பரவட்டும்
காந்தளும் கல்லறை அலங்கரிக்க
கார்த்திகை தீபமேந்தி
வழிபடுகிறோம்
வீரவணக்கம் செலுத்துகிறோம்