தேசம் மீட்க ஒளியானோம்
தேசம் மீட்க ஒளியானோம்
விதையாய் வீழ தயாரானோம்
நிலம் காக்க புலியானோம்
நித்திரை மறந்த உயிரானோம்
எதிரி உயிருக்கு எமனானோம்
வல்லூறை வீழ்த்த வன்னி
மண்ணுக்கு உரமானோம்
கரிகாலன் அவர் உயிர்
காக்க கரும்புலியாவோம்.
தேசம் எங்கள் உயிராகும்
அடிமை விலங்கொடிக்க தயாரானோம்
தாயாக மண்ணுக்கு உரமானோம்
அகதி என்று அலைக்கழிக்க பட்டோம்
ஆயுதம் கொண்டு அதை துடைத்தோம்
உயிர் கொடுத்த அன்னையரே
உயிர் துறக்க போகின்றோம்
உயிரான நம் நிலம் காக்க
வேங்கை கண்ட வெள்ளாடாய்
சிதறட்டும் எம்மின எதிரி கூட்டம்
சோழன் கொற்றவைத்தேவன்