உங்கள் வீரம் நினைத்து விடுதலை உணர்வால் மேனி சிலிர்க்கும்…!

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

உங்கள் வீரம் நினைத்து விடுதலை உணர்வால் மேனி சிலிர்க்கும்…!

இரவின் முழுநீளம் விலக்கியும் இரவியின் ஆட்சியின்றிப் பரவிக்கிடக்கும் நீலவானின் எல்லையில்லா முடிவுகளைத் தொடர்ந்தும் தேடிச்செல்கின்ற மேகத்திரள்களால் நிறைந்திருந்த கார்த்திகைக்காலம்…

துறவிபோல் தவம்புரிந்து தூயவரம் பெற்றதனால் பனியிலே சிலிர்த்தபடி பூக்களெல்லாம் புன்னகைத்து புண்ணிய நிலம்போகக் காத்துக்கிடக்கின்றன…

குருவியொன்றின் உச்சாடனத்தில் குளிர்விடுவித்துக்கொண்டபடி மனக்கதவுகளை அகலத்திறந்துவைத்து ஆழ்ந்த சிந்தனைச் சிதறல்களைப் பெருமூச்சில் சுமந்தபடி, கவியெழுதத் துளிர்விட்ட பேனாவும் பெருமிதம் கொண்டது…

அருவிபோல் மடைதிறந்து வார்த்தைகளால் முண்டியடிக்கும் கவிதைப்பூவைக் காணிக்கையாக்கிட அறம் நின்ற காவல்தெய்வங்களின் கமலத்தாள் பணிகின்றது நெஞ்சம்….

வாழைமரம், தோரணம், வரிப்புலியில் சீருடை, வரிசையாய் வீரர் நடை, வீதிநெடுக இருமருங்கும் விழிநீர் சொரிந்தபடி எம்மக்கள்…, விண்ணையும் கசிந்துருகச்செய்யும் விடுதலை கானங்கள்… , ஆழநேசித்த வீரத்தலைவனையும், மண்ணையும் நெஞ்சில் சுமந்தபடி இந்தச்சந்தனப் பேழைகள் எங்கே ஏகின?

நீங்கள் வீழ்ந்த இடத்தில் படர்ந்த குருதியில் வேர்முளைத்தது அதனால் விடுதலை விருட்சம் இன்னும் வீறுகொண்டெழுந்து விழுதெறிந்தது…

தோள்களில் சுமந்த தோழர்கள், தோழியர் நீங்கள் காத்துக்கிடக்கும் கல்லறைக் கோயில்களைக் காணத் தவம்கிடந்து கோடிபுண்ணியம் செய்தன எம் கண்கள்…தேடிவந்து உங்களிடம் வரம்பெறும் நாளுக்காய்த் தினம் தினம் தவித்தது மனது… நினைவுக்கற்களும், நீண்டவரிசையில் கல்லறைக் கோயில்களுமாய்க் கொண்ட தரிசனங்களால் வரம் தரும் வல்லவர் நினைவுகள்…

எந்த நொடியும் மழைவரலாம் போல் மடைதிறக்கக் காத்திருக்கும் கண்ணீரை இமைஇடுக்குகளில் தாங்கியபடி, அவரவரை நினைந்து அவரவரவர்க்காய்ச் செய்தெடுத்த பட்சணங்களையும், பாசத்தையும் கையோடு எடுத்தபடி, தூயவர் நின் உருப்பளிங்கு மேனிகள் தாங்கி நில்துயிலும் நிலம்நோக்கி விரைந்தன உறவுகள் கால்கள்…

ஆங்கே!

பட்டொளிவீசிப் பறந்த கொடிகளில் உங்கள் புன்னகை தெரியும்… பாசமாய் உறவுகள் கூவியழைக்கையில் கல்லறை அசையும்… நெய்விளக்கேற்றி நெஞ்சமுருகையில் விட்டென மழைபோல் விழிநீர் சொரியும்… உங்கள் வீரம் நினைத்து விடுதலை உணர்வால் மேனி சிலிர்க்கும், கல்லறைப்பாடல் காதை நிறைக்கும் காவல்தெய்வங்களைப் போற்றிப் புகழும்…

உங்கள் கல்லறைமேனிகளைக் கண்களில் ஒற்றிக்கொண்ட நாம் ஒற்றை மலர்ச்செண்டைக் காணிக்கையாய் அணிவித்துவிட்டு ஒருபெரும் தேசத்தையல்லவா யாசிக்கிறோம்…

-காந்தள்-

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.