அந்தோ எரிகிறது தேசம் காதல் செய்ய வா.
இசை மண்ணில் இயல்பாகத்
திசையாவும் காடு
வசை பாடாத் திறம் கொண்ட
ஈழத்து நாடு
உடல் வெந்து உணர்வின்றி
உரு மாறிப் போயும்
உனை எண்ணில் மனம்
காதல் கொள்ளும்
வயல் கொண்டு வளம் தந்து
வரலாறும் ஆனாய்
கடல் சூழப் படகேறித்
திசை யாவும் வென்றாய்
கடல் சூழ்ந்த கன்னிக்கு
காவல்கள் எதற்கு -அவள்
உடல் கூறு பட எண்ணில்
இனவாத நெருப்பு
பற்றி இங்கு எரிகிறது -பகை
பற்ற வைத்த நெருப்பு
சுற்றி இங்கு சிங்களத்தால்
சிதைகிறது இருப்பு
கற்றுணர்ந்து கொள்ள இன்னும்
காலம் இல்லை உன்னில்
முற்றம் இன்றிப் போன பின்னும்
காதல் இந்த மண்ணில்
…….கவிப்புயல் சரண்……