மாவீரம் எம் வீரங்கள்.
மாவீரம் எம் வீரங்கள்…!
மாவீரன் வீழ்வதுமில்லை
மாவீரம் இறப்பதில்லை
மண்ணில் வீழ்வதுமில்லை
மண்ணை முத்தமிடுபவர்
மாவீரம் உறங்குவதில்லை
உறக்கத்திலும் விழித்திருப்போர்
விடியலின் வித்துக்கள்
விதையான விருட்சங்கள்
மண்ணின் மைந்தர்கள்
வரலாற்றின் நாயகர்கள்
வரலாற்றை படைத்தவர்கள்
வரலாறாய் வாழ்பவர்கள்
வீரத்தின் விடுதலைகள்
விடுதலை தரும் வீரப்புலிகள்
மாசற்ற மாண்பியங்கள்
மண்ணின் மறவர்கள்
எங்கள் மன மாவீரங்கள்
தமிழீழ மான மாவீரர்கள்
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.