நான் அவளை விதைத்தேனா – புதைத்தேனா..?

In வரலாற்று சுவடுகள்

நான் அவளை விதைத்தேனா – புதைத்தேனா..?

(எனது கவசத்துடனான களச் சுவடுகள்…)

அவள் பெயர் அன்பழகி பெயர் மட்டும் அழகல்ல அவளும் தமிழன்னை பொறாமை கொள்ளும் அழவிற்கு அழகு. முல்லை சமரின் பின்னர் தமிழீழத்தின் தலைநகரிலிரிந்து புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதிக்கு இடம்பெயர்ந்தது அவளது குடும்பம். எனக்கும் அவளுக்குமான நட்பு தரம் எட்டில் இருந்து ஆரம்பமாகியது. அவளின் குடும்பத்தில் அப்பா திருமலையில் வைத்து சிங்கள ஊர்காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார், மூத்த அண்ணன் மணலாறு சண்டையில் மாவீரராக தமிழீழ விடிவிற்காய் விதையானார், இளைய அண்ணன் தலைமை செயலக போராளி இவள் வீட்டில் கடைக்குட்டி படிப்பில் பயங்கர கெட்டிக்காறி விளையாட்டிலும் இவளை அடித்துக்கொள்வதற்கு ஆட்களே இல்லை. புதுக்குடியிருப்பு மகாவித்தியாளையத்தில் இவளை வெடியரசி என்று செல்லப்பெயரால் அழைப்பார்கள் சக மாணவ நன்பர்கள் அந்தளவுக்கு கெட்டிக்காறி இவளின் வீட்டில் வறுமை கூரையை கிளித்துக்கொண்டு குசுனி அடுப்பங்கரை வரை வந்தாலும் அவளின் முகம் எப்போதும் பிரகாசமாகவே சுடர்விட்டு எரிந்தது.
எப்பொழுதும் இவளின் ஒரே ஆசை “எங்களுக்கு தமிழீழம் கிடைசவுடன எங்கட பள்ளிக்கூடத்திலையே வரலாறு படிப்பிக்கிற ரீச்சரா வந்து எங்களுக்கு பிறகு வாற தலைமுறைக்கு நான் கண்ணால பாத்த வரலாற்றை படிபிக்க வேணுமடா அம்மாவையும் நல்ல வடிவா பாக்கணும்..” இது அவள் எப்போதும் கூறும் வார்த்தைகள்

அதிகாலை 4 மணியானவுடன் “அம்மா நான் தம்பிக்கு பாடம் சொல்லி குடுக்கோணும் தம்பி வீட்ட போயிற்று வாறன் என…” அம்மா சரி புள்ள போயிற்று கெதியா வா என்று அன்பாக வழி அனுப்பி வைப்பாள் அந்த தாய் ( அந்த தாய் எனக்கும் தாய்தான் கடவுளின் உருவம் அந்த தாய்) அதிகாலை சூரியன் மட்டுமல்ல சேவல் எழுவதுக்கு முதலே அவள் எனது வீட்டுக்கு வந்து என்னை தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவாள் தம்பி டேய் நேரமாச்சுது எழும்படா வேளைக்கு எழும்பி படிச்சாதானே நீ பெரியாளா வந்து அக்காவுக்கு உழைச்சு குடுப்பாய்… என்று பக்குவமாய் தாயைப்போல் அரவனைத்து பாடம் சொல்லி தருவாள் இந்த நேரத்தில் தூக்கத்தில் எனது தாயின் அனுங்கல் சத்தம் உந்த கோதாரி விழுவான் “ஏழு கழுதை வயசாகுது பாயில மூத்திரம் போறான் இவனோ உணக்கு உழைச்சு தரப்போறான்…” என்று அன்பாக திட்டுவாள் இவ்வாறு காலம் உறுண்டு ஓடியது.

உயர்தரம் படிக்கும் வேளையில் நான் அப்போது மாணவர் அமைப்பில் பணிபுரிந்த காலகட்டம். அன்பழகி அக்கா தனது படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்புக்காக யாழ்பல்கலைக்கழகத்துக்கு கிடைத்தும் சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகள் ஆரம்பமாகியதால் அவளின் தாய் அவளை அனுப்ப மறுத்துவிட்டாள் அனால் அவள் பகுதிநேர தொண்டர் ஆசிரியராக தான் படித்த புதுக்குடியிருப்பு வித்தியாலையத்திலையே பணி புரிந்து வந்தாள். இதேவேளை பாடசாலை முடிந்ததும் பாடசாலை ஆசிரியர் விடுதியில் உடைகளை மாற்றிக்கொண்டு எனது புத்தக பையை அவளிடம் குடுத்துவிட்டு மாணவர் அமைப்பு அலுவலகம் சென்று விடுவேன்.

வழமைபோல் ஒருநாள் பாடசாலை முடிந்ததும் டேய் தம்பி இண்டைக்கு அக்கா என்ர நன்பிகளோட முக்கியமான இடத்துக்கு போறன் நான் வர நேரமாகும் அம்மாவ நல்லா பார் என்று கூறிய அவள் எனக்காக வாங்கி வைத்திருந்த கடாபி ரொபியை தந்தாள். நானும் எனது வழமையான பணிகளை முடித்துக்கொண்டு  மாலை 4.30 மணியிருக்கும் அவளின் வீடு சென்றேன். அம்மா அக்காச்சி வர நேரமாகுமாம் எங்கையோ வெளிய போறாளாம் எனக்கு பசிக்குது என்னனே சாப்பாடு செய்து வைச்சிருக்கிறாய் என்றவுடன் அந்த தாய் டேய் தம்பி இண்டைக்கு உணக்கு பிடிச்ச சூடை கருவாடும் கத்தரிக்காயும் போட்டு குளம்பு வைச்சிருக்கிறன் கால்மோத்த கழிவிட்டுவா சாப்பாட்ட போட்டு வைக்கிறன் என்றார். நானும் முத்தை கழுவி விட்டு அக்கா விரும்பி முகத்திற்கு விரும்பி பூசும் பொண்ட்ஸ் பவுடரை பூசிக்கொண்டு  அந்த தாய் தந்த சாப்பாட்டையும் வயிறு முட்ட கட்டிவிட்டு எனது வீட்டை அடைந்தேன் அன்று எனது மனதில் இனம்புரியாத உணர்வு தோன்ற எனது தாயிடம் கோப்பி கேட்டு வாங்கி அருந்திவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டேன்.

இரவு பதினொரு மணியிருக்கும் அந்த தாய் கண்ணில் நீர் கசிய எனது வீட்டு கதவை தட்டினார் திடுக்கிட்டு எழும்பினேன் அந்த தாய் வெம்பியபடி அக்காவ இன்னும் கானல என்றார் எனது மனம் பதைபதைத்தது எமது வீட்டிற்கு அருகாமையில் ராதா வான்காப்பு பேஸ் இருந்தது அங்கு சென்று விசாரித்துவிட்டு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல் துறை பணிமனைக்கு வாக்கிடோக்கி மூலம் தொடர்பு கொண்டிருந்தேன் உடனே தொடர்பாளர் விசாரித்து விட்டு சொல்லுவதாகவும் 30 நிமிடங்கள் காத்திருக்கும்படி கூறியிருந்தார் அரைமணி நேரம் கழித்து தொடர்பு வந்தது புகழ் ஓம் அவர் அமைப்பில சேர்ந்திட்டார் முத்தையன்கட்டு பயிற்சி முகாமுக்கு கொண்டு போயிற்றினம் அவரோட சேர்த்து ஐந்து பிள்ளைகள் சேர்ந்திருக்கினம் என்று கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனை அந்த தாய் கேட்டதும் தள்ளாடி நின்றால் பின்னர் நெஞ்சை நிமிர்த்திய படி எனது அம்மாவிடம் புள்ள ஒரு கோப்பி போட்டுதாவன் என்று கோப்பியை வாங்கி குடித்துவிட்டு மவன் என்னை வீட்ட வாவன்ரா என என்னையும் அழைத்து சென்றார். அன்றிரவு முழுக்க என்க்கு நித்திரை வரவில்லை பாசமான தம்பியிடம் கூட சொல்லாமல் சென்றுவிட்டாளே என்று அவளுக்கு நன்கு தெரியும் தம்பியிடம் சொன்னால் விடமாட்டான் என்று. அந்த தாய் தனது மூன்று செல்வங்களையும் நாட்டுக்காக அனுப்பிய இறுமாப்போடு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள் உறக்கமில்லாமல். இப்படி ஓரிரு நாள் கழிய பழகிக்கொண்டது.

சிறிது காலத்தின் பின்னர் நானும் போராளியாக இணைத்துக்கொண்டேன் கணினிப்பிரிவில் இணைந்து கொண்ட நான் பயிற்சிகள் முடிந்த பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலையே பணிவிடை வழங்கப்பட்டது அந்த நேரத்தில் ஒரு சந்தோசமான செய்தி வோக்கிடாக்கி வழியாக ஆம் அது எனது நன்பி, நன்பி என்று சொல்லுவதை விட அக்காவின் குரல் நான் கிளிநொச்சியில நிக்கிறன் என்றார். அவளும் எனது படையணியில் தான் இருக்கிறால் என்பது எனக்கு மேலும் சந்தோசத்தை கொடுத்தது.

காலங்கள் உறுண்டோடியது சிங்கள படைகளோடு உலகப் படைகள் எம்மிதான பயங்கரவாத போரை தொடுத்தது. பல முணைகளிலும் களங்கள் அதிர்ந்தது பேரினவாத படைகள் பாரிய இழப்புக்களுடன் சுதந்திரபுரம் வரை வந்துநின்றது அது எனது முதல் களம் முதலாவது விழுப்புண்ணை உடலில் பெற்றுக்கொண்டேன். 15 நாட்கள் மருத்துவத்தில் இருந்தேன் பின்னர் வல்லிபுனம் இப்படியே மாத்தளன் வரை வந்துவிட்டோம்.

நாட்கள் நகர எனது தோழியும் நானும் ஒரே களமுனையின் பன்பகுதியில் இருந்து முற்றுகையை தகர்ப்பதற்காக அந்தமுனை தான் ஆனந்தபுரம் இந்த களமுனை எனக்கு பயத்தை கொடுப்பதற்கு பதிலாக எனக்கு சந்தோசத்தை கொடுத்தது எனது தோழியே எனக்கு செக்சன் லீடராக வந்தாள் இந்த களத்தில்தான் தமிழீழத்தின் மாபெரும் தளபதிகளையும் பல நூறு வீரவேங்கைகளையும் நாட்னுக்காக விதைத்து உலக நாடுகளுக்கு ஒரு பெயரிய செய்தியை சொல்லி நின்றோம் இந்திலையில் இம் மாவீரச்செல்வங்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொண்டு தொடர்கின்றேன். இந்த களத்தில் அழகான மலராக இருந்த எனது தோழியை புயலாக பார்த்திருந்தேன் எனது கவசமாகவும் திகழ்ந்துருந்தாள் இந்த சமரில் இருவரும் சிறிய விழுப்புண் அடைந்திருந்தோம்.

இவ்வாறு நாட்கள் நகர ஒன்றாகவே பயணித்தோம். சிங்கள படைகள் இடைக்காடு வழியாக மாத்தளனை கைப்பேற்றிய படி இரட்ட வாய்க்காலை நோக்கி நகர்ந்தது இதேவேளை கணினி பிரிவில் ஒரு பிரிவினர் தளபதி ஜெணார்த்தனன் தலமையிலான ஜேந்தன் படையணியுடன் இணைக்கப்பட்டது இந்த படையணியில் ஜெணார்த்தனன் அண்ணாவின் நேரடி கண்காணிப்பில் எனது தோழியும் நான் ஜெனார்தனன் அண்ணாவின் கீழ் இருந்த கட்டளை தளபதியான அயந்தன் (five one) கீழும் செயற்பட தொடங்கினோம் நாட்கள் நகர சிங்கள படைகளும் உலக வல்லாதிக்க படைகளும் இரட்டைவாய்க்காலை கடந்து முள்ளிவாய்க்கால் தொடக்கம்வரை வந்திருந்தது இந்திலையில் எமது படையணி விசேட தாக்குதல் ஒன்றிற்கு தயாராகி வந்த வேளையில் எதிர் பாராத விதமாக எமது படையணி களமுணைக்கு செல்லவேண்டிய நிலமை.

ஆம் அந்த நாள் 14.05.2009 எனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் இடம்பெற்ற நாள் முள்ளிவாய்க்கால் கடற்கரை பிள்ளையார் கோவில் வரை எதிரி படைகள் முன்னேறியிருந்தார்கள் அவசர அவசரமாக அந்த களத்தை நோக்கி ஜெனார்த்தன் அண்ணா தலமையில் விரைந்தோம் தாக்குதல் உக்கிரம் பெற்றது பிள்ளையார் கோவிலை தாண்டி இறுதியா நாம் அமைத்து வைத்திருந்த வண்டுவரை சென்றிருந்தோம் பாரிய இழப்பை எதிரி படை சந்தித்தது எமது படையணியோடு சால்ஸ் அன்ரனி படையணியும் களம் இறங்கியிருந்தது. இந்திலையில் எதிரி படைகள் மீண்டும் பாரிய சூட்டாதரவுடன் முள்ளிவாய்க்கால் நடுப்பகுதிவரை வந்து நின்றது நாமும் உயிர் இழப்புகளை சந்தித்திருந்தோம் இந்த தாக்குதல் வெட்டைவெளி பகுதியில் இருந்ததால் எதிரி பரியளவிலான ஸ்நைப்பர் படையையும் இறக்கி விட்டிருந்தது.

இந்நிலையில் மாலை நேரம் இரண்டு மணி இருக்கும் சாப்பிடுவதற்காக எனது பையில் இருந்த வெட்டு பலகாரமும் மாயரின்னும் மீன்ரின் மற்றும் மாட்டுறச்சி ரோலும் எடுத்தோம் 37 பேர் களத்திற்கு வந்திருந்தோம் நாம் சாப்பிடும்போது இருந்தவர்கள் வெறுமென 8 பேர்கள் மட்டும்

நாம் அப்போது இருந்த இடம் எழுத்தில் சொல்ல முடியாதவை எம்மை சுற்றி எமது உறவுகளின் பிணங்கள் எமது மேனிகள் தோழர்களின் குருதியாள் சிவந்திருந்தது இதனிடையே நச்சு புகைக்குண்டுகளின் மணம் கைகள் முழுவதும் தோழர்களின் இரத்தம் கட்டிகளாய் உறைந்திருந்தது அணைத்தையும் தாங்கியவர்களாய் உடலில் வலுவிருக்கும்வரை போராடுவோம் என்ற இறுமாப்போடு நின்றிருந்தோம். சண்டை மூண்டது சாப்பிட ஆரம்பித்தோம் ஆனால் அதற்கு கூட நேரம் இல்லை ஸ்நைப்பர் தாக்குதல் பலமுணைகளிலிருந்தும் எம்மை நோக்கி பாய்ந்தன அப்போது ஜெனார்த்தன் அண்ணா சொன்னார் கவனமா நிலை எடுத்து நல்லுங்கடா அவன் சினைப்பரை மழைமாதிரி அடிக்கிறான் அவர் சொல்லி முடிப்பதற்குள் எனது கவசம் சுறுண்டு கீழே விழுந்தால் ஆம் எனது தோழி அன்பழகி விதையாக வீழ்தால் ஸ்நைப்பர் ரவை அவளின் கண் வழியாக நூழைந்து மூளையோடு பிடரி வழியாக வெளியேறியது அவளை அணைத்தபடி கதறினேன் அந்த சத்தம் எம்மை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை அவளின் உடலை நானே கோரோலில் இழுத்து சென்று முள்ளிவாய்க்காலில் பச்சை வீட்டிற்கு பக்கத்தில் ஒழுங்கமைத்திருந்த புனித விதைகுழியில் விதைத்தேன் எல்லாம் முடிந்து விட்டது என என்னியவனாக மீண்டும் ஜெணார்த்தன் அண்ணா இருந்த இடத்தை நோக்கி கோரோலில் திரும்பினேன் “ஸ்க்” ஒரு சத்தம் வயிற்றின் மேல் வழியாக ஸநைப்பர் ரவை என்னை பதம்பார்த்து சென்றது நினைவிழந்தேன் என்னோடுவந்த சக தோழன் நினைவிழந்த என்னை பச்சை வீட்டில் கொண்டே சேர்த்தான்….

நான் கண் முளிக்கும்போது நாள் 18.05.2009 அனுராதபுர மருத்துவமனையில் என்னை சுற்றி சிங்களத்தில் கதைப்பது கேட்டது தலை அசைத்து கண்களை மெல்ல திரந்தபோது எல்லாம் முடிந்திருந்தது ( சில நம்மவர்கள் என்னை பார்த்ததும் கேட்கும் கேள்வி நீங்க நிண்ட நிலைக்கு குப்பி கடிச்சிருப்பாய் எண்டு நினைச்சன்ரா இந்த பதிவு அவர்களுக்கு விளங்கப்படுத்தும்) ஒரு தமிழின துரோகி வந்தான் என்னை பார்த்து சொன்னான் எல்லாம் குளோஸ் தம்பி என்றான்….

காலங்கள் உறுண்டோடினாலும் என்னை பார்த்து நானே கேட்கும் கேள்வி என் கவசமாக இருந்த தோழியை நான் விதைத்தேனா புதைத்தேனா? விதைத்திருந்தால் அவள் வருட்சம் பெற உரம் போட்டிருக்க வேண்டும் உரம் போட்டிருந்தால் ஈழத்தாயவள் எதாவது சிறிய மாற்றமாவது அடைந்திருப்பாள் ஆனால் நான் எனது தோழியை புதைத்து விட்டே வந்தேன் இதற்கு சாட்சி என் ஈழத் தாயவள்…

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.