என் உயிருக்கு இன்று பிறந்த நாள்…!!
உயிரற்ற ஜடமாக ஏங்குகிறேன் இங்கே..!
உன்னை அள்ளி அணைத்து முத்தமிட்டு வாழ்த்துச் சொல்ல ஆசை அண்ணா….!!
உன் புகைப்படத்தின் முன்னால்
நின்று புலம்புகின்றேன் இங்கே……!!
என் புலம்பல் உன் செவிகளில்
வந்து விழுகிறதா அண்ணா…………!!
ஒரு கணம் கலங்கினாலும் மறு கணம்
உறுதி கொள்கிறேன் அண்ணா………!!
உன் வளர்ப்பில் வீரத்தையே எமக்கு
ஊட்டி வளர்த்தாய், அதனால் தான்
என்னவோ துயரமும் தூளாகிறது……!!
ஒரு நாள் உன் மடியில் தலை சாய்த்து
உனக்கு வாழ்த்துப் பாடுவேன்……!!
அதுவரை உன் வரவை எண்ணிக்
காத்திருப்பேன் என் உயிர் அண்ணா…!!
பிறந்த நாள் வாழ்த்துக்களோடு
உன் அன்புத் தங்கை………………!!
எஸ். றதன் கார்த்திகா.