வீழ்த்தவே முடியாத வரிப்புலி வீரன்!
வீழ்ந்த புலிவீரன் அல்ல அவர்
வீழ்த்தவே முடியாத வரிப்புலி வீரன்
பிரபாகரன்
கிழக்கே உதிக்கும் தினம் சூரியன்…
உலகிற்கு ஒரு விளக்காய்
திரு விளக்க சூரியன்…
தெற்கே உதித்த போராட்ட சூரியன்
பிரபாகரன்…
நீர்க்குடம் உடைந்து போர்கடலாய் மாற
சிறுத்தை வீரன் பிறந்தான்…
தெற்கே உதித்த சூரியனாய்
வல்வையில் உதித்த
போராட்ட சூரியன்…
ஈழம் அடிமை
நாடாக இருக்க…
சுதந்திரம் இல்லையேல் வாழ்வு இல்லையென
தமிழீழ தேசம் படைத்தவன்…
லட்சியமா வாழ்க்கையா…
தொடங்கப்பட்டது போராட்டம்
வானில் உயர்ந்து புலிக்கொடி…
அடிமை தமிழனுக்கு விலங்குடைத்து
விடுதலை புரட்சி வேட்கை
அமைத்த தேசிய தலைவன்…
எங்கள் பிரபாகரன்…
பதவிகள் பல வந்தும் உதறிய
கொள்கைக்காரன்…
நாற்காலில் அமர்ந்து அறையில்
கோப்புகளை பார்க்க மறுத்த தமிழின் தலைமகன்…
எப்படை வரினும் இப்படை வெல்லுமென
சங்கத்தமிழை கலியுக தமிழில் உணர்த்திய
உணர்ச்சியின் உச்சம் #பிரபாகரம்
ஈழம் புகழ் மாறன்