எப்போது வருவீர்கள்…….
நீங்கள்
எப்போது வருவீர்கள்
எப்போது வரவீர்கள்
நாங்கள்
இப்போது காத்திருக்கிறோம்
தப்பாது நீங்கள்
வந்துவிட வேண்டும்
கனவுகள் சுமந்தபடி
கண்ணோரம்
நீர் சொரிய காத்திருக்கிறோம்
வந்துவிடுவீர்கள்
என்ற ஆவல் நெஞ்சை
ஆழத்துளைக்கிறது
உங்கள் கம்பீரம் காண
காவல் நிக்கிறோம்
வீதிகள் எங்கும்
எங்கள் வீரர் அணிநடை
போக
இது எங்கள் படையென்றே
மார்தட்டி
நிமிர்வு கொள்ள
நீங்கள் வேண்டும்
வீரர்களே எப்போது வருவீர்கள்
எல்லைகள் இல்லா
வலிகளை
நெஞ்சியில் தாங்கியே
நிற்க்ககிறோம்
எப்போது வருவீர்கள்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.