சிங்கள தலைமைக்கு சிறு வாழ்த்து

In தாயக கவிதைகள்

சிங்கள தலைமைக்கு சிறு வாழ்த்து

சிங்களத்தின் சிறு நரிகளே
சிறுகச் சிறுகச் சேமித்த தமிழினத்தின்
வெற்றியையும் வேர்வையையும் பெருமெடுப்பில் படை நடத்தி பங்கு போட்டு கொண்டவர்களே 
எங்கள் கண்ணீரின் ஆற்றல் புரியும் நாள் கன காலம் இல்லை 
இன்று காலம் வேலையை கவனித்து கொள்கிறது

நேற்று வரை சிங்களத்தின் சிம்மாசனத்தில் நீ சிங்கம்
இன்று அதே இனத்தில்
வாழத் தகுதி அற்ற
வரலாற்று அசிங்கம்

காலம் எப்படி கனதியானது
கவனித்தாயா ?

வந்து பார் உன் வாசலில்
அன்று வரவேற்று நின்றவர்கள்
இன்று வருகை தந்துள்ளார்களாம்
வரவேற்க அல்ல வழியனுப்பி வைக்க

காலம் தன் கடமையை காட்டுகிறது பார்த்தாயா..

முள்ளி வாய்க்காலில் புலி முடிப்பதாய் பலி எடுத்து முடித்தாயே
நினைவில் இருக்கிறதா ?
கஞ்சிக்கு வழியனுப்பி விட்டு காத்திருந்த பிள்ளைகளின் கனவுகளை கொன்றாயே
கருவேந்திநின்ற தாய் மாரில் கந்தகத்தைக் கொட்டி நின்றாயே
ஒன்றா இரண்டா ஓராயிரம் செய்தாய்
நன்று நீ வாழ நம் இனத்தை அழித்தாய்.

சில்லறை நாய்களின் கிளுகிளுப்பில்
சில காலம் சிங்கள நாய்களும் குளிர்காய்ந்தன
சீலை சுற்றிய ஓநாய்கள் ஒரு நாள் முள்ளில் மாட்டும் என முழித்தே நாம் இருந்தோம்

இன்று தான் உன் அம்மணத்தை உலகம் பார்க்கிறது
ஓடி ஓடிப் பொய் சொல்லி ஓராயிரம் தடை போட்டு ஓரினத்தை அழித்த பேரினத்தின் பெருமகனே..
காலம் எப்பிடி கனதியானது பார்த்தாயா

ஈழத்தை அழித்தானாம் அடேய்.ஈனப்பிறவியே..
ஈழம் என்பது எம் கனவு அல்ல
ஈழம் எங்கள் வாழ்க்கை முறை

நாங்கள் வலி கண்டு ஒதுங்கவில்லை
சாவு கண்டும் சலிக்கவில்லை அதற்குள்ளே வாழ பழகி கொண்டோம்

எதையும் தாங்கும் இனமாய்
பகையும் அழிக்கும் சனமாய்
எம்மை புடம் போட்டான் ஒருவன்
கட்டமைப்புகள் உருவாக்கி காலத்தை நிர்வகித்தான் ஒருவன் .
ஆயிரம் தடை எனினும் தகர்க்கும் படி அமைத்தான் ஒருவன் .
தமிழரை தமிழராய் தரணியில் மாற்றினான் ஒருவன் ..

யார் அவன்?
நீ அழித்ததாய் சொன்ன எம் மாதவன்
அவன் அழிவில்லாத ஆதவன்
வாய் வீரம் காட்டி நின்ற சிங்கள சிறு
நரிகளை கொல்ல பிறந்த சிறுத்தை
அவன்

விலாசமில்லா விந்தணுவிற்கு பிறந்தவனே
அறிவாய் ஒரு நாள் நாம் ஈழம் அடைந்தோம் எனும் சேதி
அப்போது தான் அறியும் உலகு
இந்த ஆயுதத்தின் மௌன மொழி

நான் நெடு நாளாய் சிங்களவர்களை ஒன்று கேட்க வேண்டும் என்றே காத்திருந்தேன்
காலம் கிட்டவில்லை
இன்று கேட்கிறேன்
.உண்மையிலே நீங்கள் சோற்றையா உண்கிறீர்கள் அல்லது ??????

…கவிப்புயல் சரண்…..

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.