தமிழீழ போர்க்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். 03

In பகிரப்படாத பக்கங்கள்

உறவை அணைத்த விழிகள்…

வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந் இராணுவம், கட்டைக்காட்டுத் தேவாலயத்துக்கருகில் தரித்து நின்றது. இராணுவத்தை இடைமறித்து எமது போராளிகள் நிலைகளை அமைத்து கண்விழித்துக் காத்திருந்தனர். எமது கண்மட்டும் விழித்திருக்கவில்லை; எமது துப்பாக்கிகளும் விழித்திருந்தன.

உன்ன உணவும், குடிக்க நீரும் இருந்தும் நேரம் இல்லாத நிலையில் எம்மவர், வரும் எதிரிக்கு அவ்விடத்தில் வைத்தே சமாதி கட்டுவோம் என்று மிக உறுதியாக நின்றனர்.

01.07.1991 அன்று, நித்திரை இலாத சிவந்த கண்களுடன் இருந்த போராளிகள் மீது எதிரியாவணன் கொடூரத் தாக்குதலைத் தொடுத்து, முன்னேறிக் கொண்டிருந்தான். எமது போராளிகளின் துப்பாக்கிகளும் சீறத் தொடங்கின. இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் “அக்கா !” ஒரு குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். ஒரு ஆண் போராளி. நான் ‘என்ன?’ என்று கேட்க முதல் எனக்கருகில் இருந்த கோகிலாக்கா உற்று நோக்கிவிட்டு, ‘தம்பி!’ என்று அழைத்தார். இருவரும் கலங்கிய கண்களுடன் ஏதோ கதையைப் பரிமாறும் ஏக்கத்துடன், ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால் அந்த அரக்கர்களின் அசுரக் குண்டுகளும் ‘பொம்மர்’ தாக்குதலும் விடவில்லை. கோகிலாக்கா ஏமாற்றத்துடன் தன்னுடைய ஆர்.பி.ஜி எல்.எம்.ஜியை அரக்கர்களுக்கு எதிராகப் பாவித்தாள்.

மீண்டும் அதே குரல், ‘அக்கா’ எதிரி முன்னேறிக்கொண்டிருந்ததனால் அவள் தன்னுடைய ஆர்.பி.ஜி எல்.எம்.ஜியின் ‘ரிகறில்’ இருந்து கைவிடாது, ‘தம்பி’ என்று கூப்பிட்டுவிட்டு, மீண்டும் எதிரியை வீழ்த்த்ஹும் முடிவில் இருந்தாள். ஒருகணம் ‘அக்கா’ என்றவன் ஏங்கிநிற்க அவளின் நெஞ்சைத் துளைத்துச் சென்றது ஒரு குண்டு. ஓடிவந்து தூக்கி, ‘அக்கா’ என்றான். அவளும் ஏதோ சொல்ல முனைந்தாள். என்னவென்று அறிய முதல் அவன் கால்களில் சாய்ந்து தமிழ் அன்னையின் மடியை முத்தமிட்டாள்.

அவள் வேறு யாருமில்ல, அந்த ஆண் போராளியின் (சகோதரி) அக்காவேதான். அவளை அவன் கண்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. அவள் இயக்கத்தில் இணைந்து 4வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவள். அவளின் அன்பு வார்த்தை கேட்க வந்து ‘அக்கா’ என்றவன் அவள் தனக்கு முன்னே மடிந்ததைக் கண்டு அவளுகாகச் சில நிமிடம் தலை குன்னது மீண்டும் நிமிர்ந்து தனது துப்பாக்கியை இறுகப் பற்றிக்கொண்டான்.

தமிழீழ போர்க்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்.

இப்படிப்பட்ட வீரவரலாறுகளை படைத்த எம் காவல் தெய்வங்களின் இலட்சியம் நிறைவேறும் வரை அவர்களின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

குறிப்பு : இந்தப் பதிவை பார்வையிடும் எம் உயிரிலும் மேலான எமது தளபதிகளே போராளிகளே மற்றும் எம் போராளிகளோடு இணைந்து பணியாற்றிய எமது மக்களே.. நீங்கள் நின்ற களங்களில் மறக்க முடியாத எமது மண்ணுக்காய் விதையாகிய எமது போராளிகளின் வீர வரலாறுகளை அழிய விடாது எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். மற்றும் நீங்கள் குரல் பதிவு செய்தும் எமக்கு அனுப்பி வைக்கலாம். எமக்காய் வித்தாகிய எமது வீரர்களின் வரலாறுகளை எமது சந்ததியிடம் கொடுப்பது எமது கடமை…

எமது மின்னஞ்சல் – eelapparavai@gmail.com

நன்றிகள்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.