இது எம் ஈழ தேசத்தின் கறுப்பு மாதம்…!
இது எம் மக்களுக்கு பல கொடுமைகள் நடந்த மாதம்
இது மானமே உயிரென வாழ்ந்த எம்மின மங்கைகள் கற்புகள் பறிபோன மாதம்
இது துரோகிகளின் துரோகம் வென்ற மாதம்
இது பல நாடுகளின் உண்மை முகம் வெளி வந்த மாதம்
இது சிங்கள பேரினவாதம் அதன் ஈவிரக்கமற்ற கொலை வெறி ஆடிய மாதம்
இது எம் அப்பாவி மக்கள் லட்சம் மாண்ட மாதம்
இது எங்கள் இனம் வாழ பாடுபாட்ட உத்தமர்கள் பலர் மாண்ட மாதம்
இது முப்பது ஆண்டு கால உரிமைப் போர் முடிவின்றி முடிந்த மாதம்
இது நந்திக்கடல் மர்மம் நிறைந்த மாதம்
இது உலகில் கடைசி ஈழத்தமிழன் இருக்கும் மட்டும் மறக்க முடியாத மாதம்
இது முள்ளிவாய்க்கால் மாதம்
மகிழை
டினேஸ்