வலிமைகள் புதைந்த
நெரிசலில்
வாழ்விடம் இன்றி நகர்ந்தோம்,
வாழ்விடம் பற்றி எரிந்திட
வாசலில் பிணமாய்
வீழ்ந்தோம்,
நிணங்களில் மத்தியில்
புரண்டே
விடியலை காண விளைந்தோம்,
தொலைவில் சூரியன்
அழவே
தொலைந்து போயுமே
அலைந்தோம்,
விரிசலில் வாழ்ந்திடும்
தமிழினம்,
விடியலை காணும்
விரைவாய்,
அதுவரை பொறுப்பாய்
தமிழா
அழிவுகள் உனது
துடுப்பே,
தேசப்பிரியன்