கண்ணீரின் மாதம் இது…!
கண்ணீரின் மாதம் இது
கனவுகளின் மாதம் இது,
கந்தகத்தில் தீக்குளித்தவர்
கல்லறை மாதம் இது
பொன்னான மாதம் இது
புலிவீரர் மாதமிது
கண்ணாண மாதமிது-எம்
காவலர்கள் மாதமிது
மண்ணுக்காய் உயிர்நீத்த
மணிவீரர் மாதமிது
மானத்தை பறைசாற்றிய
மாவீரர் மாதமிது
எண்ணாமல் இவர் நாமம்
என்நாளும் இல்லையே
இன்நாளை எவர் மறர்ப்பினும்
அவர் தமிழர் இல்லையே.
த.யாளன்