அப்படியென்றால் நீங்கள் யார்.?
உங்கள் பெயர் என்ன.?
எங்கள் ஆயுதங்களை கீழே போடச்சொன்னீர்கள் அப்படியென்றால் எங்கள் ஆதங்கங்களை எங்கே போடச்சொல்கிறீர்கள்.
எங்களை வன்முறையாளர்கள்
என்கிறீர்கள் அப்படியென்றால்
எங்களுக்கு வலிகளை ஏன் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
எங்களை அறம்மீறியவர்கள்
என்று
அடையாளப்படுத்துகிறீர்கள் அப்படியென்றால்
எங்களை ஏன்
அடிமையாய் நடத்துகிறீர்கள்.
எங்களை அன்பற்றவர்கள் என்று
அடித்துக்கூறுகிறீர்கள்
அப்படியென்றால் எங்கள்
அடிப்படை அரசியல் உரிமைகளை
ஏன் தர மறுக்கிறீர்கள்.
எங்களை மனிதாபிமானமற்றவர்கள் என்கிறீர்கள் அப்படியென்றால்
ஏன் நீங்கள் மனித
உரிமை மீறுகிறீர்கள்.
எங்களை மனிதக் படுகொலையாளர்கள் என்கிறீர்கள் அப்படியென்றால்
ஏன் எங்கள் உயிரிலும் மேலான
மண்ணை களவாடிக்கொள்கிறீர்கள்.
எங்களை சுடுகலன்களோடு
சுற்றித் திரியும்
பயங்கரவாதி என்கிறீர்கள்
அப்படியென்றால்
எங்கள் சுதந்திரத்தை
ஏன் பறித்து வைத்துள்ளீர்கள்.
எங்கள் ஆசைகள்
எங்கள் உரிமைகள்
எங்கள் நிலங்கள்
எங்கள் வளங்கள்
எங்களுக்கான எல்லாவற்றையும் பறித்துக்கொள்கிறீர்கள்
எங்களை மட்டும்
ஏன் குறைகூறுகின்றீர்கள்…?
அடிப்படை உரிமைக்காய்
உயிர்நீத்த
எங்கள் மாவீரர்கள்
மகத்தானவர்கள்..
அவர்களை பயங்கரவாதிகளாக்கும்
நீங்கள் யார்.?
உங்கள் பெயர் என்ன.?
த.யாளன்