தண்டனையில் எனக்கும் ஓர் பங்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மூத்த மகன் சாள்ஸின் வேண்டுகோள்.

In பகிரப்படாத பக்கங்கள்

தண்டனையில் எனக்கும் ஓர் பங்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மூத்த மகன் சாள்ஸின் வேண்டுகோள்.

விடுதலை புலிகள் அமைப்பில் பல ஒழுங்கங்களும் – கட்டுபாடுகளும் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்.

எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை.

நிர்வாக பொறுப்பாளர்கள் – அணித்தலைவர்களால் சில தண்டனைகளை வழங்கப்படுவதும், அதை குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யங்கள் நிறைந்த அனுபவத் பகிர்வாக அனைவர் மனங்களிலும் ஆட்க்கொள்ளலாம்.

கடற்புலிகளின் பாசறையில் நடைபெற்ற ஓர் சம்பவத்தை பகிர்கிறேன்….

இம்ரான் – பாண்டியன் படையணியில் (0) இருந்து கடற்புலிகளின் பாசறைக்கு சில கடல் சார் பயிற்சிகளுக்காக சில போராளிகள் அதில் கணணிப்பிரிவிற்கு பொறுப்பான தீபன் (இவரே சாள்ஸ்சுக்கு வலது பக்கத்தில்) மற்றும் 2000ம் ஆண்டு வெற்றிலைக்கேணியில் அப்பாச்சி எனும் குறியீட்டு பெயர் தாங்கிய கனரக ஆயுதத்தால் சிறிலங்கா கடற்படை அதிவேக “டோறா” கலத்தினை தாக்கியழித்த தமிழரசன், மணிவண்ணன் உட்பட பல போராளிகளுடன் தம்பி என எங்களால் அன்புடன் அழைக்கப்படும் சாள்ஸ் கூட வந்திருந்தார், அதிலிருந்த போராளிகளுக்கு சாள்ஸ்சும் மிக நீண்ட நாள் நெருக்கம்….

நீச்சல் மற்றும் கடல் சார் இயந்திரங்கள் என நீடித்த பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது கடல்சார் சண்டைப் படகு இயந்திரத்தை கற்பிக்கும் பொறுப்பு விமல் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டது. அவரும் தன் கடமையை செய்தார்.

இயந்திரத்தை கற்பித்து அதை ஒரு நாள் முழுவதும் எல்லோரும் படகு ஒட்டப் பயிற்சிவித்து தொடர் பயிற்சிக்காக ஓர் படகும் வழங்கப்பட்டது. கடலிலிருந்து படகு கரைக்கு ஏற்றியவுடன் நண்ணீரில் இயந்திரத்தை சுத்திகரித்து விடவேண்டும் அல்லது உப்பு படியும் என றிவுறுத்தல் கூறிவிட்டு விமல் வாத்தி வேறு ஓர் அலுவலாக சென்றிடுந்தார்.

நாள் முழுவதும் கடலில் பயிற்சிகளை முடித்துவிட்டு மாலை ஆனதும் படகு கரையில் ஏற்றப்பட்டது. இவர்கள் நண்ணீரில் இயந்திரத்தை சுத்திகரிக்க மறந்து விட்டார்கள்.

வெளியிணைப்பு இயந்திரம் தொடர் இலத்திரனியல் இணைப்புக்கள் உள்ளமை என்பதால் அவதானம் மிக முக்கியம். அனைவரின் தவறினாலும் இயந்திரத்தின் மேல் பாகங்கள் உப்பு படிந்து இருந்தது.

அவர்களின் தவறுகளுக்கு உரிய காரணத்தை இலகுவில் புரிந்துகொண்டார் விமல் மாஸ்ரர். உப்புக் காற்றின் சுவாசமும், கடலுக்கு புதியவர்களாக நீண்ட நாட்களின் பின் கடல் பயிற்சி என்பதினால், சூடு மணலின் வாட்டும் வெயிலின் உடல் களைப்பு அடைய செய்தமையும், கடல் அலையில் மூழ்கி விழுந்து குளித்து வந்தமையினாலும், உப்புக் காற்றின் சூழல் மேலும் பசியை அதிகரித்தமையுமே காரணமாக மேலும் உடலின் களைப்பை அதிகரித்து சோர்வடைய செய்தது.

அனைவர் முன்னிலையிலும் இயந்திரத்தை பார்த்தது விட்டு அவர்களின் பிழைகளை கூறினார் பின் இயந்திரத்துக்கு அதனால் ஏற்படும் விளைவுகளை விளங்கபடுத்தினார்.

தண்டனைகள் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த பிழைக்கு என்ன தண்டனை செய்ய என அனைவரும் ஒருமித்து கேட்டார்கள்.

இயந்திரந்திரத்தில் படிந்த உப்பை நாவினால் தொட்டுக்கொள்ளவும் என கூறினார்.

பின்பு ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து ஒவ்வொருவராக செல்லும் வேளை தம்பி சாள்ஸ் இடையில் நின்றார். அதைப் பார்த்த விமல் மாஸ்ரர் தம்பி நீங்கள் இங்கு வாருங்கள் என அழைத்து…

நீங்கள் வேண்டாம் என கூறினார்.

மன்னிக்கவும் மாஸ்ரர் நானும் அந்த தவறுக்கு உரியவன் நானும் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

வேண்டாம் தம்பி…. சொன்னா கேளுங்கள் என்றார் விமல் மாஸ்ரர்

அப்போது சாள்ஸ் அப்படியானால் அவர்களுக்கும் ஏன் தண்டனை வழங்கப்படுகிறது…?

மெளனமாக இருந்தார் விமல் மாஸ்ரர்….

(நண்பர்கள் போல் பழகி கூட வந்த ஏனைய போராளிகள் ”தம்பி” என்று தான் செல்லமாக அழைப்பர் சாள்ஸை காரணம் அவர்களை விட ஓரிரு வயது குறைந்தவர் சாள்ஸ்.)

தம்பி நீ இரு…, நாங்கள் செய்கிறோம் என்றனர்.

நான் தண்டனை செய்யாமல் இருந்தால் அப்பா இதை அறிந்தால் என்னை மன்னிக்கமாட்டார். நிச்சயம் கண்டிப்பார்… ஆகவே எனக்கும் தண்டனையில் ஒரு பங்கு இருக்கு ஆதலால் நானும் சென்று தண்டனையைப் பெறுவேன் என வழங்கபட்ட தண்டனையை தம்பியும் ஒருவனாய் ஏற்றார்.

பின் தண்டனை முடிந்து இயந்திரத்தை சுத்திகரித்து கையளித்தார்கள் அனைவரும்.

மீண்டும் ஒரு நாள் கழித்து வந்த போராளிகளுடன் தன் பாசறை நோக்கி பறந்து சென்றான்.

இவர் தான் தேசியத் தலைவர் புதல்வன் சாள்ஸ் என கடற்புலிகள் போராளிகள் அனைவர் மத்தியில் பேச்சுக்கள் உலாவந்தன.

தந்தைக்கேற்ற தனயன் எங்கள் தம்பி சாள்ஸ்.

நினைவுகளுடன் என்றும் அ.ம.இசைவழுதி.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.