தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 44

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 44)

-தமிழீழத்தில் வந்து இறங்கிய புதிய இந்திய படைகள்-

கடந்த பதிவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலால் படுகாயமடைந்த இந்திய படைகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி பாத்திருந்த அதேவேளை இன்றைய பதிவில் தமிழீழ மண்ணில் புதிதாக இறக்கப்பட்ட படைகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

யாழ் குடாவைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்தித்திருந்ததால், இந்திய படையினரின் இராணுவ நடவடிக்கைகளை முன்நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்த லெப்.ஜெனரல் ஹரிகிரத் சிங் அவசர அவசரமாக புது டில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைத்தரப்பில் ஏற்பட்டிருந்த அதிகளவிலான உயிரிழப்பிற்காக அவர் இராணுவ தலைமையின் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். (அவர் தனது ஆரம்பகட்டத் தோல்விகளுக்காகத் தெரிவித்த காரணங்கள் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.) கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் மீளவும் அவர் யாழ்குடாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

இதேவேளை, யாழ் குடாவில் இராணுவ நடவடிக்கையை முனைப்புடன் தொடர்வதற்கு இந்திய இராணுத்தில் கடமையாற்றும் முக்கிய படைத்துறை அதிகாரிகளை, அவர்களுடைய படையணிகளுடன் சேர்த்து அனுப்புவதற்கு இந்தியப் படைத்துறைத் தலைமை தீர்மாணம் எடுத்தது. விடுதலைப் புலிகளை எப்படியாவது தோற்கடித்து யாழ்பாணத்தை முற்றாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்தியப் படைத்துறை அவசரம் காண்பித்தது.
இந்தியாவின் அரசியல் தலைமை அந்த அளவிற்கு அழுத்தத்தை இந்தியப் படைத்துறை மீது பிரயோகித்திருந்தது. எந்த அதிகாரிகள் இலங்கைக்கு புதிதாக அனுப்பிவைக்கப்படவேண்டும் என்ற விவாதம் எழுந்த போது, “மிகவும் சிறந்த அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்” என்பது இந்தியப் பிரதமரின் உத்தரவாக இருந்தது.

இராணுவ உயரதிகாரிகள் தமது தெரிவுகளை முடித்து விட்டு, தாம் அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்ததற்கான காரணங்களையும் இந்தியப் பிரதமரிடம் அறிவித்திருந்தார்கள்.

இந்திய இராணுவத் தலைமை தெரிவுசெய்த உயரதிகாரிகள் இவர்கள்தான்:
1. பிரிகேடியர் குல்வந்த் சிங்
2. மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட்
3. பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலோன்
4. பிரிகேடியர் மஜித் சிங்
5. பிரிகேடியர் சாமி ராம்

இலங்கையின் வடக்கு-கிழக்கில் புலிகளை முற்றாகத் தோற்கடித்து இந்திய இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்திய படைத்துறைத் தலைமையால் தெரிவுசெய்யப்பட்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் இவர்கள்தான்.

இதில் பிரிகேடியர் குல்வந்த்சிங் இந்திய இராணுவத்தின் 54வது டிவிசனின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் (Deputy General Officer Commanding 54 division). இவர் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பத்தில் கவசவாகனப் பிரிவில் (Armoured Corps) ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து ராஜ்புத்தான ரைபிள் (Rajputana Rifles) படையணியிலும் நீண்ட காலம் உயரதிகாரியாகக் கடமையாற்றி நீண்ட அனுபவத்தைப் பெற்றிருந்தார். இந்தியப் படைத்துறையில் மிக நீண்ட அனுபவத்தைப் பெற்ற ஒருவர் என்பதுடன் படைத்துறை உயரதிகாரிகளிடையே மிகவும் மதிக்கப்பட்ட ஒருவரும் கூட. எதிர்காலத்தில் இந்திய இராணுவ பிரதம தளபதி பதவி இவருக்கே வழங்கப்படும் என்று அந்தக் காலகட்டத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டவர்.

மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் (Senior Staff Officer) இந்தியாவில் மிகவும் பிரபல்யமான இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய இராணுவத்தின் 8வது கூர்க்கா ரைபிள்ஸ் (Gorgha Rifles) படையணியில் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தவர். இங்கிலாந்தில் உள்ள Institute of Strategic Studies என்ற மிகவும் பிரபல்யமான இராணுவக் கல்லூரியில் உயர் கல்வியைப் பெற்ற ஒரே இந்தியர் இவர்தான். (பின்நாட்களில் ஹரிக்கிரத் சிங் இற்குப் பதிலாக இந்திய படையின் பொறுப்புக்களைக் கையேற்றிய இராணுவ அதிகாரி இவர்தான்)

பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலோன் இவரும் இராணுவத் துறையில் நிறையக் கற்ற ஒருவர். அமெரிக்காவிலுள்ள Fort Leavenworth அதிகாரிகள் கல்லூரியில் இராணுவத்துறை தொடர்பான உயர்கற்கையை மேற்கொண்டவர். இந்தியாவின் National Defence College இல் அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோதே, இவர் இலங்கையில் பணியாற்றுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்;தார்.

பிரிகேடியர் மஜித் சிங் மராத்திய ரெஜிமென்டில் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்னர் இந்தியாவின் ஜம்மு மற்றும் கஷ்மீரில் அந்த பிரிகேட்டை தலைமை தாங்கி பல களம் கண்டவர். இந்திய இராணுவத்தின் 41வது காலட் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை இவர்; ஏற்று சில மாதங்களே ஆகியிருந்தக. நீண்டகாலமாக பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்துவந்த இவர் இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெறுவதற்கு சில மாதங்கள் முன்னரே அமெரிக்காவிலுள்ள இந்தியப் பெண்மணி ஒருவரை மணம் புரிந்திருந்தார்.

பிரிகேடியர் சாமி ராம் -இந்திய இராணுவத்தின் Grenadiers என்ற பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி எதிர்-கெரில்லாப் போரியலில் (Counter Insurgency) நீண்ட அனுபவத்தைப் பெற்றவர்.

இந்த ஐந்து இராணுவ உயரதிகாரிகளும் தமது பிரத்தியோப் படையணிகளுடன் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளது தொடர் தாக்குதல்களை கட்டுப்படுத்தி வடக்கு-கிழக்கை இந்திய இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவர்களது நோக்கமாக இருந்தது. புதிய படை அணிகள் AN-32, IL-76, AN-12B ரக விமானங்கள் மூலம் பலாலி இராணுவத் தளத்தில் தரையிறக்கப்பட்டன. கடல் மூலம் கனரக ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

புதிய படை அணிகளைக் களமிறக்கிய புலிகளை முற்றாகவே அழித்தொழிக்கும் ஒரு புதிய வியூகத்தை உருவாக்கியது இந்திய இராணுவம். யாழ்குடா மாத்திரமல்ல வடக்கு கிழக்கு முழுவதிலும், அங்கு புலிகள் பதுங்கிவிடக்கூடும் என்று எதிர்பார்கப்பட்ட காடுகளிலும் கூட விடுதலைப் புலிகளை தேடிச் சென்று அழிக்கும் நோக்கத்துடன் இந்தியப் படை புதிய வியூகங்களை வகுத்தது. தேசியத் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் முக்கிய தளபதிகள் போன்றோரை கொலைசெய்யும் திட்டமும் இந்தியப்படையினரின் அந்தப் புதிய வியூகத்தில் அடங்கியிருந்தது.

இந்திய இராணுவம் உருவாக்கிய அந்தப் புதிய வியூகம் பற்றியும், அந்தப் புதிய வியூகத்தில் இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்ட சவால்கள் பற்றியும்;, புதிதாகக் களமிறக்கப்பட்ட இந்தியப் படையணிகளினால் தமிழ் மக்கள் சந்தித்த நெருக்கடிகள் பற்றியும் தொடர்ந்துவரும் வாரங்களில் சற்று விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியப் படையினரால் யாழ் நகரம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்திய இராணுவம் மேற்கொண்ட நகர்வுகள், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மேற்கொண்ட புலனாய்வு மற்றும் உளவியல் நடவடிக்கைகள், அந்தக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தின் சில பிரிவுகள் ஈழ மண்ணில் மிக மிக இரகசியமாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பற்றியும்கூட நாம் சற்று ஆழமாகப் பார்க்க இருக்கின்றோம்.

இந்திய இராணுவ நடவடிக்கைகளின் பொழுது ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட சொல்லமுடியாத அவலங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகள், இந்தியப் படையினர் தமது கைக்கூலிகளை வைத்து மேற்கொண்ட படுகொலைகள் இவைகள் பற்றியும் கூட நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

இன்றைக்குத் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு, ஈழத் தமிழர்களுக்காகப் பச்சாத்தாபப்பட்டுக்கொண்டு தமிழர்களின் பிரதிநிதிகளாக வலம் வந்துகொண்டிருக்கும் பல பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் இந்தியப் படையினரின் கைக்கூலிகளாக எப்படி எப்படியெல்லாம் செயற்பட்டார்கள் என்றும், அவர்கள் என்னென்னவகையிலான அவலங்களையெல்லாம் ஈழத்தமிழருக்கு விளைவித்தார்கள் என்றும் நாம் இந்தத் தொடரில் ஆதாரங்களுடன் விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழீழ மக்களும் விடுதலைப் புலிகளும் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்களின் தூரநோக்கு பார்வையும் அவரின் வியூகங்கள் எவ்வாறு அமைந்திருந்தன மற்றும் தமிழீழ இராணுவமாகவும் தமிழீழ நிழல் அரசை எவ்வாறு கட்டி எழுப்பி பொற்கால ஆட்சை நடந்தினார் என்பது பற்றியும் விரிவாக இத்தொடரில் ஆராய இருக்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற இந்தத் தொடரில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதற்கான திருத்தங்களையும், இந்தத் தொடர் பற்றிய விமர்சனங்களையும் தயவுசெய்து எங்களுக்கு அனுப்பிவைத்தால்
( eelapparavai@gmail.com)
இந்தத் தொடரை மேலும் சிறப்பாக்க உதவியாக இருக்கும்.

தொடரும்…

ஈழம் புகழ் மாறன்

 

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.