கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியும் – மிரண்டுபோன சிங்கள படைகளும்!

In கார்த்திகை மாத சிறப்பு கட்டுரைகள்

தேசியத் தலைவரும்! – உளவியல் நடவடிக்கையும் | பாகம் 04

(கார்த்திகை திங்கள் வீரன்)

கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியும் – மிரண்டுபோன சிங்கள படைகளும்!

இன்றும் கூட இலங்கை அரசாக இருக்கட்டும் அல்லது இந்திய உட்பட்பட்ட வல்லாதிக்க சக்திகளாக இருக்கட்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை கேட்டவுடன் அவர்களின் ஈரக்குலை நடுங்க காரணமாக அமைவது கடந்த போராட்ட காலத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இன்றுவரை அச்சத்தை ஏற்படுத்துகின்றதும் அதேவேளை வியந்து பார்க்கின்றதுமான உளவியல் நடவடிக்கைதான் காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள் கூறிப்பிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றிதான் இந்த தொடரில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கம் முதற்கொண்டு, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட ஏராளமான உளவியல் நடவக்கைகள் பற்றி இந்த தொடரில் விரிவாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

4ம் கட்ட ஈழப் போரின் இடைநடுவே தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையானது, புலிகள் மேற்கொண்ட உளவியல் யுத்தத்தின் ஒரு பக்கத்தை வெளிப்படுத்தும் உதாரணமாக இருக்கின்றது.

மன்னார் தீவினுள் அமைந்துள்ள எருக்கலம்பிட்டி கூட்டுப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலை ஞபகப்படுத்த விரும்புகின்றேன். 11.06.2008 அன்று இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. மன்னார்தீவுள் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப்படைத்தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்கள். அந்த அதிரடித் தாக்குதலில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ராடார் உட்பட பெருமளவிலான போர்க்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் தம்மால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார்.

களமுனைத் தாக்குதல்கள் பற்றி சிறிலங்கா படையினர் தகவல்களை வெளியிடுவது போலல்லாமல், அந்தத் தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களிலேயே அந்த தாக்குதல் பற்றியும், அதன் பெறுபேறுகள் பற்றியும் புலிகள் துல்லியமாக உலகிற்கு அறிவித்திருந்ததார்கள். தமது தாக்குதல் வெற்றிக்கான ஆதாரங்களையும் புலிகள் வெளியிட்டிருந்ததார்கள். அத்துடன் தமது தாக்குதலின் நோக்கம் பற்றியும், தாக்குதலுக்கான காரணம் பற்றியும், புலிகளின் எந்தெந்தப் படை அணிகள் அந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தன என்றும், விலாவாரியாக அவர்கள் தகவல்களை வெளியிட்டிந்தார்கள். தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னய மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினரால் புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தாக்குதல் இடம்பெற்ற சில மணிநேரத்தில் புலிகள் உத்தியோபூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

தமது கடற்படை முகாம் தாக்கப்பட்டது பற்றி ஒன்றுக்கொண்று முரணான செய்திகளை சிங்களம் வெளியிட்டுக்கொண்டு இருந்த நேரத்ததில், துல்லியமாக அதிகாலை 2.08 மணிக்குத்தான் தாக்குதல் நடைபெற்றது என்று, நிமிடக் கணக்கில் புலிகள் தகவல் வெளியிட்டதானது, சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் காரணமாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட பல்வேறு செய்திகளல் காரணமாகவும், மேலும் பல அதிர்ச்சிகள் சிங்களப் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டிருந்தது.

தமது ஒரு சிறிய காவல்நிலையையே புலிகள் தாக்கியதாக சிறிலங்காப் படைத்துறை அறிவித்திருந்தது அந்த நேரத்தில்.
நவீன ராடர், 81மி.மீ. மோட்டார்கள், 60 மி.மீ. மோட்டார்கள், 50 கலிபர் துப்பாக்கிகள், ஏராளமான வெடி மருந்துகள் என்பனவற்றை வெறும் காவல் நிலைகளுக்குள் வைக்கும் அளவிற்கு சிறிலங்காப் படைகள் அந்த நேரத்தில் இருந்திருக்கவில்லை என்பதை புலிகள் தாம் வெளியிட்ட புகைப்படங்கள் ஊடாக உலகிற்கு வெளியிட்டிருந்தார்கள்.
பாதுகாப்பான ஒரு தளத்தில்தான் இவை போன்ற பெறுமதிவாய்ந்த ஆயுத தளபாடங்களை வைப்பது வளக்கம். அத்தோடு இவை போன்ற ஆயுதங்கள் இருந்தால் அவற்றிற்கு பாதுகாப்பாகவும் ஏராளமான படையினர் நின்றேயாகவேண்டும். யுத்த முனையில் அமைக்கப்பட்டுள்ள சாதாரண ஒரு சென்றிக்கு கூட குறைந்தது 12 படையினரையாவது நிறுத்தி வரும் சிறிலங்காப் படையினர், இத்தனை ஆயுதங்களை நிலைப்படுத்தியுள்ள ஒரு இடத்தை நிச்சயம் ஒரு காவல்நிலையாக வைத்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை.
எனவே எருக்கலம்பிட்டி என்பது நிச்சயம் ஒரு தளமே என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தார்கள் புலிகள்.

மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இருந்த எருக்கலம்பிட்டி கடற்படைத்தளத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் ஏ கொம்பனி அணியினரே நிiலைகொண்டிருந்தார்கள். மன்னாரை பாதுகாப்பதிலும், மன்னார், பூநகரி- சங்குப்பிட்டிப் பாதையான ஏ-32 பாதை வழியான நகர்வை மேற்கொண்டு வரும் படைப்பிரிவகளில் இவர்களும் அடங்கியிருந்தார்கள்: புலிகள் மேற்கொண்டி வெற்றிகரமான இந்த அதிரடித் தாக்குதலும், தாக்குதலைத் தொடர்ந்து புலிகள் வெளியிட்ட அதிர்சிகரமான தகவல்களும், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு சிறிலங்காப் படையினருக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது அந்த நேரத்தில்.

மன்னார் வழியான வன்னி நோக்கிய நகர்வுகளில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தின் படை அணிகளை அவசர அவசரமாக மாற்றிக்கொண்டு புதிய படை அணிகளைக் களம் இறக்கி தொடர்ந்து பயணிக்கும் அளவிற்கு இந்தத் தாக்குதல் களமுனை வீரர்களுக்கு பாரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தயியிருந்தது. சிறிலங்கா இரராணுவத்தின் இத்தத் தளம் 10 நிமிடங்களுக்குள் கடற்புலிகளின் சிறப்புக் கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது என்று விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள்: சுமார் இரண்டு மணி நேரம் புலிகளின் அணிகள் அங்கு நிலைகொண்டிருந்தன. நிதானமாக அங்கிருந்த ஆயுதங்களைச் சேகரித்து, தமது படகுகளில் ஏற்றி கொண்டு சென்றிருக்கின்றார்கள். இராணுவத்தின் தங்குமிடங்களை எரியூட்டி, புகைப்படம் எடுத்து, பின்னர் அங்கியிருந்து பாதுகாப்பாக வெளியேறும் அளவிற்கு, அந்த இடத்தில் புலிகள் பலமான நின்றிருக்கின்றார்கள்.

இது, இரண்டு விடயங்களை வெளிப்படுத்துவதாக இருந்தன அந்த நேரத்தில். முதலாவது புலிகளது தாக்குதலின் வேகம், துல்லியம், வீரம் என்பன இந்த தாக்குதலில் வெளிப்பட்டு நின்றது. இது சிங்களத்தின் பொய்பிரச்சாரத்தினால் துவண்டு போயிருந்த தமிழ் மக்களுக்கு நல்லதொரு உளவியல் தெம்பினைஊட்டுவதாக இருந்தது. இரண்டாவது, புலிகளின் தாக்குதலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சிறிலங்காப் படையினர் அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றார்கள் என்கின்ற உண்மையை சிங்களத்திற்கு வெளிப்படுத்தி, சிங்களத்திற்கு எதிரான உளவியல் நாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்: சிங்களப் படையினரின் மனோநிலை என்பதன் உண்மையான பரிமாணம் இதுதான் என்பதை சிங்களத்திற்கு சொல்லுவதாக புலிகளின் அந்த அறிவிப்பு அமைந்திருந்தது.

தமது வெற்றி, எதிரியை அழிப்பது, தமது நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பது, தமது ஆயுதங்கள் எதிரிpயின் கைகளில் விழாமல் தடுப்பது போன்ற, ஒரு போர் வீரனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை போரியல் மனோநிலைகூட இல்லாமல்தான் சிங்களப் படைகள் வன்னியில் புலி(?) பிடித்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை சிங்கள மக்களுக்கு அறிவிப்பதில் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கை வெற்றியைக் கொடுத்திருக்கின்றது.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்த எருக்கலம்பிட்டித் தாக்குதல் நடைபெற்ற விதமும், தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்த தகவல்களும், மற்றொருவகையில் பாரிய உளவியல் தாக்குதலை சிங்களப் படைத்துறைத் தலைமைக்கு ஏற்படுத்துவதாக இருந்தது. முதலாவது விடுதலைப் புலிகள் தம்மிடம் ஏற்கனவே உள்ள போர் அணிகளுக்கு மேலதிகமாக, மேலும் பல தாக்குதல் படை அணிகளை உருவாக்கியுள்ளார்கள் என்கின்ற செய்தி சிங்களத்திற்கு உளவியல் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அந்தத் தாக்குதலில் கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினர் கடற்படைத்தள அழிப்புத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், வழிமறிப்புத் தாக்குதலை கடற்புலிகளின் லெப். கேணல் புனிதா படையணி, லெப். கேணல் எழில்கண்ணன் படையணிஆகியன மேற்கொண்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

சிங்களப் படைத்துறையைப்; பொறுத்தவரையில், கடற்புலிகள் புலிகள் அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய படை அணிகளின் அறிமுகம் என்பது, உளவியல் ரீதியாகப் பாரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. புலிகள் பெயர் வெளியிட்டது போன்று இன்னும் எத்தனை படை அணிகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன, அவை எப்பொழுது எங்கே களமிறங்க இருக்கின்றன – என்பதான உளவியல் அச்சங்கள்; சிங்களத் தலைமைகள் மத்தியல் காணப்படவே செய்தது. அடுத்ததாக, குறிப்பிட்ட அந்த தாக்குதலில் கடற் புலிகளினது இரண்டு கட்டளைத் தளபதிகளின் பெயர்கள் வெளிவந்திருந்தன. அந்தத் தாக்குதலில் ஈருடக அணியை(Marines) முழுமையாக கடற்புலிகளின் கட்டளைத் தளபதி விடுதலை வழிநடத்த, கடல் தாக்குதலை கட்டளைத்தளபதி இளங்கோ வழி நடத்தியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள். 3ம் கட்ட ஈழ யுத்த காலங்களில் கடற்புலிகளின் சிறப்பத் தளபதி சூசை அவர்களே அனேகமான கடற் சண்டைகளுக்கு கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்தார்.

ஆனால் 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் கடற் புலிகள் அணிகளில் மேலும் பல கட்டளைத் தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானதானது, 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் கடல் சண்டைகளில் புலிகள் அதிக கவனம் எடுத்துள்ளது, மற்றும் தமது கடல் பலத்தை பலமடங்கு அதிகரித்துள்ளதான உளவியல் அச்சத்தை சிங்களத்திற்கு ஏற்படுத்துவதாக இருந்தது. அடுத்தாக, புலிகளின் அந்தக் காலகட்டத்; தாக்குதல்கள் ராடர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதும் பலவிதமான உளவியல் தாக்கத்தை சிங்களத்திற்கு ஏற்படுத்தியிருந்தது. 28.05.2008 அன்று யாழ்பாணத்தின் சிறுத்தீவில் புலிகளின் கடற் கொமாண்டோ அணியினர் அங்கிருந்த ராடர் கருவையைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தி ராடரை மீட்டு வந்ததாகப் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

24.05.2007 அன்று நெடுந்தீவிவு மீது கடற்புலிகளின் கொமாண்டோ அணியினர் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலிலும், அங்கிருந்த நவீன ராடர் நிலை தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அந்த ராடரை புலிகள் பத்திரமாகக் களட்டிச் சென்றிருந்ததாகப் பின்னர் புலிகள் செய்திகள் வெளியிட்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து 11.06.2008 அன்று இடம்பெற்ற எருக்கலம்பிட்டித் தாக்குதலிலும் ஒரு ராடர் கருவி புலிகளின் கடல்கொமாண்டோக்களினால் கைப்பட்றப்பட்டிருந்ததாகப் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

சிறிலங்காப் படைத்துறைத் தலைமையைப் பொறத்த வரையில் அந்த நேரத்தில் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பிய ஒரு விடயமாகவே இந்த விடயம்; அமைந்திருந்தது. வடக்கில் உள்ள ராடர்கள் எதற்காகப் புலிகளால் குறிவைக்கப்படுகின்றன? வடக்கில் வான் புலிகள் புதிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகின்றார்களா? ராடர்கள் மீதான பாய்சல்கள் எதற்காக கடற் புலிகளால் மேற்கொள்ளப்படுகின்றன? தரையில் எத்தனையோ ராடர் நிலைகள் அமைக்கப்பட்டிருக்கையில் கடற் புலிகள் எதற்காக ராடர்களை கைப்பற்றும் நோக்குடன் களமிறங்குகின்றன? கடற் புலிகளின் கட்டமைப்பில், கடற் புலிகளுக்கு என்று பிரத்தியோகமாக அரசியல் பிரிவு, புலனாய்வப் பிரிவு, தரைத்தாக்குதல் பிரிவு போன்றன உருவாக்கப்பட்டிருந்தது போன்று, கடற்புலிகளுக்கென்று விமானப் படைப்பிரிவு என்று ஏதாவது உருவாக்கப்பட்டுள்ளதா என்கின்றதான உளவியல் அச்சம் சிங்களத்திற்கு ஏற்பட்டிருந்தது.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பிரதான பங்கு வகிக்கின்றது. தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான அந்த முக்கிய உளவியல் நடவடிக்கையை மேற்கொள்ளுவதில் விடுதலைப் புலிகள் பெருமளவில் வெற்றியையே பெற்றிருந்தார்கள்.

வன்னி மீதான சிங்களத்தின் நகர்வுகளின் ஒவ்வொரு நிமிடமும், புலிகள் பதில் தாக்குதல் நடாத்திவிடுவார்களோ, பொறி ஏதாவது வைக்கின்றார்களோ, என்கின்ற அச்சத்துடன்தான் படையினர் நகர்ந்துகொண்டிருந்தார்கள். யாழ் செல்லும் படை அணி ஒன்றை புலிகள் உருவாக்கி, அதற்கு கடுமையான பயிற்சிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று புலிகள் தரப்பில் இருந்து வெளியான செய்திகள், ஆணையிறவு கைப்பற்றப்படும் வரைக்கும் சுமார் 40,000 படையினரை யாழ்குடாவில் நிறுத்திவைக்கும்படியான அச்சத்தை சிங்களத்திற்கு ஏற்படுத்தியிருந்தது…

தொடரும்…
ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.