தலைவர் பிரபாகரன் சிறீலங்கா அரசிற்கு எழுதிய கடிதம்.

In தமிழீழத் தேசியத்தலைவர்

மக்களின் இன்னல்கள் முதலில் தீர வேண்டும் தலைவர் பிரபாகரன் சிறீலங்கா அரசிற்கு கடிதம்.

( இக்கடிதம் 21. 12. 94 இல் எழுதப்பட்டது.)

அன்பின் கேணல் ரத்வத்தவிற்கு!

19. 12 94 திகதியிடப்பட்டுள்ள உங்கள் கடிதத்திற்கு மிகவும் நன்றி. உங்கள் கடிதம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக குறிப்பிட்ட திகதிக்கு மறுதினமே எமக்குக் கிடைத்தது. 08. 12 94, 15. 12. 94 ஆகிய தினங்களில் நாம் உங்களுக்கு அனுப்பி வைத்த கடிதங்களில் நீங்கள் எழுதிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை அளித்திருந்தோம். மோதல் நடவடிக்கையை இடை நிறுத்துவது சம்பந்தமான உங்கள் யோசனைக்கு நாம் சமாதான முறையில் இணக்கம் தெரிவித் தோம்.

அத்துடன், மோதல் இடை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி, பேச்சுக்கள் நடா த்த இணங்கினோம். சமாதானப் பேச்சுக்கள், சமாதானத் தீர்வு, உடனே நடைபெற வேண்டுமென்ற கருத்தையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். எமது கருத்தை வரவேற்றே, நடவடிக்கைகள் தொடரும் சூழ்நிலையில் அரசு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடாத்துவது உகந்ததல்ல எனவும் 13.12 94 இல் எழுதிய கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நாம் சமாதானத்தை விரும்புகின்றோம் என்றும் சமாதானப் பேச்சுக்கள் மூலம் இன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டுமெனவும் நாம் நம்புகின்றோம் என்றும் 18. 12 94 இல் எழுதியிருந்த கடிதத்தில் மிகத் தெளிவாக வலியுறுத்தி இருந்தோம். மோதல் நிலையை நிறுத்துவது சம்பந்தமான பேச்சுக்கள் ஆரம்பமாகும் என நாம் எதிர்பார்த் தோம்.

தமிழ் மக்களின் மிக அவசரமான அன்றாடப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென நாம் ஆரம்பகட்டப் பேச்சுக்களின் போது அழுத்திக் கூறியிருந்தது மாத்திரமின்றி, திரும்பத் திரும்ப வலியுறுத்தி இருந்தோம். உங்கள் ஞாபகத்தை புதுப்பித்து இந்த விடயத்தை மேலும் தெரியப்படுத்தும் நோக்கில் 08. 12. 94 இல் நாம் அனுப்பிய கடிதத்தில் சில பதில்களை மேற்கண்டவாறு தெரிவித்தோம். ஆரம்பக் கட்ட பேச்சுக்களில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். முதற் கட்டப் பேச்சுக்களின் போது எமது

குழு, இந்தப் பிரச்சினைகள் என்ன என்று தெரியப்படுத்தியது. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முந்திய அரசின் இராணுவவாத அணுகுமுறையால் சிருஸ்டிக்கப்பட்டவைகளாகும். தமிழ் மக்கள் சாதாரணமாக எதிர் நோக்கும் அவலங்கள் தீர்த்து வைக்கப்படும் என அரச தூதுக்குழுவினர் வாக்குறுதி அளித்தும், இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஒரு உண்மையான சமாதானக் கொள்கையும், இயல்பு நிலையும் தோற்றுவிக்கப்பட வேண்டுமாயின், எமது மக்கள் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட அவலமான பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும். எமது மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட வேன்டும் என்பதையும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே இனப்பிரச்சினைத் தீர்வின் அடிப்படைகள் பற்றி ஆராய வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். நாம் ஒரு விடயத்தை மிக ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றோம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன். அதாவது போரின் மூலவேர்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்னராக எமது மக்கள் மீது, ஏவிவிடப்பட்ட போர் நடவடிக்கைகளின் நேரடி விளைவாக உருவாகியுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். முதற் கட்டப் பேச்சுவார்த்தைகளில் இவ்விதமான பிரச்சினைகள் பற்றியே கவனம் செலுத்தப்பட்டது என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

மக்கள் நாளாந்தம் எதிர் கொள்ளும் அவலமான துன்பங்களை தீர்த்து வைக்குமாறு பிரதம மந்திரியால் எமக்கு ஆணை தரப்பட்டிருக்கிறது என அரச தூதுக் குழுவின் தலைவர் திரு. பலபத்த பெந்தி கூறியிருந்தார். தமிழ் மக்களின் நல்வாழ்வைப் பேணும் சகல தேவைகளையும் உடன்பாடுகளையும் மக்களுக்கு உவந்தளிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்த போதும் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி கருத்தளிக்கப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.

எமது கருத்துக்களையும் எமது அக்கறைகளையும் ஏற்றுக்கொண்டிருப்பது போல் நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள். 13. 12.94 இல் நீங்கள் எழுதிய கடிதத்தில், “தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சி னைகள் குறித்து நாம் மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றோம் என்பதையும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவதோடு எமது சக்திக்கு ஏற்ப முழுமையாக உதவி தருகின்றோம் என்றும் உங்களுக்கு உறுதி அளிக்கி ன்றோம்” எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். எமது நிலைப்பாடு பற்றி தெளிவான விளக்கங்களை தெரிந்து கொண்டது மட்டுமின்றி எமது மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு டனடியாகப் பரிகாரம் காணப்படும் என உறுதியளித்துவிட்டு 19. 12. 94 இல் நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் சமாதானப் பேச்சுக்கள், போர் நிறுத்தம் மற்றும் போர் நெருக்கடியைத் தீர்க்கும் பேச்சுக்கு மட்டும் முடிவு தரவேண்டுமென நீங்கள் குறிப்பிட்டிருப்பது எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதிலிருந்து உங்கள் நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிட்டாற்றத்தை நாம் கவனிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது, எமது

மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை ஓரம் கட்டி விடும் திட்டமிட்ட நோக்கமுடன் இந்த மாற்று வழியை நீங்கள் கடைப்பிடிப்பதாக எமக்குப் புலப்படுகின்றது. போர் நெருக்கடியின் தோற்றுவாய்களை ஆராய்ந்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சமாதான வழிமுறைக்கு ஒட்டு மொத்தமான நோக்கமாக அமைய வேண்டும் என்பதை நாம் தெளிவான பாதையாக எண்ணுகின்றோம்.

இந்த அடிப்படை விசயத்தில் எமக்கு கருத்து முரண்பாடு இல்லை. ஆயினும், நாம் உங்களுக்கு எதை வலியுறுத்த விரும்புகின்றோம் என்றால்… பேச்சுவார்த்தைக்கான வழிமுறை கட்டம் கட்டமாக முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதேயாகும். ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் எமது மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் அன்றாடப் பிரச்சினைகளையும் தீர்ப்பதாக அமைய வேண்டும்.
இயல்பு நிலையையும் சமாதான சூழ்நிலையையும் தோற்றுவிப்பதற்கு இது அத்தியாவசியமானதாகும். இதுதான் தமிழீழ மக்களின் ஒட்டுமொத்தமான அபிலாசையாகும். தம்மை அழுத்தும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதையே மக்கள் விரும்புகின்றனர்.

முதற்கட்ட பேச்சுக்கள் இந்தக் குறிக்கோள்களில் அமையப்பட்டிருந்தாலும், அவசரமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப்போவதாக அரசியல் வாக்குறுதி அளித்திருந்தாலும், இன்றைய அரசு தனது வாக்குறுதி களை நிறைவு செய்யும் என எமது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அன்றாடப் பிரச்சினைகளை முடி மறைக்கவோ அல்லது ஓரங்கட்டி விடவோ அரசு முயற்சிக்குமானால், அதை ஒரு அரசியல் ஏமாற்ற நிலையாகவே எமது மக்கள் கருத இடமுண்டு. எமது நிலைப்பாட்டை நாம் போதுமான அளவு விளக்கியிருக்கின்றோம்.

எமது நிலைப்பாடு நேர்மையானதும் நியாயமானதும் ஆகும். நடைமுறை சாத்தியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின் றோம். நாம் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதிலும் எமது சமாதானக் கதவுகள் திறந்திருக்கின்றன என்பதையும் நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அரச தூதுக் குழுவை நீங்கள் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கலாம். அவர்களை வரவேற்கத் தயாராகவே இருக்கின்றோம்.

வே. பிரபாகரன் தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.