தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 30

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.”
(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 30)

யாழில் வைத்து தலைவர் பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்ட இந்தியா!

இச் சிறப்பு தொடரில் அண்மைய பாகங்களில் இந்திய தமிழீழப் போர் பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றோம் அந்த வகையில் இந்த தொடரில் இந்திய படைகள் தலைவர் பிரபாகரனை கொலை செய்யும் நோக்கோடு யாழில் முன்னெடுக்கப்பட்ட பாரிய இராணு நடவடிக்கை பற்றியும் விடுதலைப்புலிகளின் பதிலடியில் நிலைகுலைந்த இந்தியா அடுத்த நகர்வை எவ்வாறு மேற்கொண்டது பற்றியும் வரிவாக பார்ப்போம்.

இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கென அவர்கள் வகுத்திருந்த திட்டம் யதார்த்தமானது. மிகுந்த புத்திசாலித்தனமானதுடன், நடைமுறைச் சாத்தியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. அனைத்து இந்தியப்படை அதிகாரிகளும் இந்த திட்டத்தை இட்டு திருப்தி தெரிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவென இந்திய இராணுவத் தலைமை வகுத்திருந்த திட்டத்தை ஆராய்ந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, அத்திட்டத்தில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்தவிதச் சந்தேகமும் இன்றி இந்திய இராணுவ நடவடிக்கை வெற்றி அளிக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள்.

முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மன உறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கனித்திருந்தார்கள்.
முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் நினைத்தார்கள்.

இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.

தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்; கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரம்படி வீதி இல்லத்தை, இந்தியப்படையினர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருந்தார்கள். இந்தியப்படை உயரதிகாரிகள் அந்த இடத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். அந்த இருப்பிடம் பற்றிய வரைபடத் தகவல்களை துரோகக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றிருந்தார்கள்.
போதாததற்கு, கடந்த 9ம் திகதி நள்ளிரவு கால்நடையாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்த சீக்கிய காலட்படையினரும், பரா கமோண்டோப் படைப்பிரிவில் சிலரும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் பாதை வழியாக நகர்வினை மேற்கொண்டு, பின்னர் பிரம்படி வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரயில் பாதை வழியாக திரும்பிச் சென்றிருந்தார்கள். பொதுமக்களது வளவுகளுக்குள்ளாகவும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரம்படி வீதியைப் பரிட்சயப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நகர்வென்றே இந்த இரகசிய நகர்வு பற்றிக் கூறப்பட்டது. அதேவேளை, சந்தர்ப்பம் கிடைத்தால் தலைவரை கைப்பற்றிவிடும் நகர்வாகவும் அந்த 9ம் திகதிய நகர்வு அமைந்திருந்தது.
இவ்வாறு பிரம்படி சுற்றாடல் பற்றிய அறிவினைக் கொண்டிருந்த இந்தியப்படை பரா கொமாண்டோக்கள் முன்நகர, தலைவரது இல்லத்தை நெருங்கி நடவடிக்கை மேற்கொள்ளுவதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.

அதேவேளை, இந்தப் பிரதான திட்டத்திற்குச் சமாந்தரமாக, மேலும் ஐந்து அடிப்படைத் திட்டங்களையும் இந்தியப்படை உயரதிகாரிகள் வகுத்திருந்தார்கள்.
1. ஒரே நேரத்தில் தரை, கடல், மற்றும் ஆகாய மார்க்கமாக தரையிறக்கங்களை மேற்கொண்டு யாழ் குடாவை மிக விரைவாகக் கைப்பற்றிவிடுவது.

2. குறைந்தது ஒரு வினியோக பாதையையாவது திறந்து, யாழ் நகருக்குள் நகர்வினை மேற்கொள்ளும் துருப்பினருக்கு வினியோகங்களை மேற்கொள்ளுவது.

3. பாதுகாப்பான வினியோகப் பாதையை அமைத்துக்கொள்ளும்வரை, யாழ் நகருக்குள் நுழைந்துள்ள படையினருக்கு வான் வழியாக வழங்கல்களை மேற்கொள்ளுவது.

4. நகருக்குள் நுளையும் துருப்பினருக்கு உதவும் முகமாக, அவர்களால் குறிப்பிடப்படும் இடங்களுக்கு, விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், ஆட்டிலறிகள் மூலமும் சூட்டாதரவை வழங்குவது.

5. யாழ் குடாவிற்கான அனைத்து கடல்வழிப் பாதைகளையும் முற்றுகையிடுவது.
இவையே, யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக இந்தியப்படையினர் வகுத்திருந்த அடிப்படைத் திட்டங்களாக இருந்தன.

ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று கூறப்படுகின்ற யாழ்பாணத்தைக் கைப்பற்றி நிலைகொண்டுவிட்டால், மற்றைய பிரதேசங்களை இலகுவாக கைப்பற்றிவிடமுடியும் என்பது இந்தியப்படை அதிகாரிகளினது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இந்தியப் படையினரது ஆட்பலம், ஆயுத மேலான்மை, போர் அணுபவம், கேந்திர அனுகூலம் போன்றனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒரு திட்டம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

உண்மையிலேயே தமிழீழ புலிகளை அழிக்கவென வகுக்கப்பட்டிருந்த திட்டம் சிறந்த ஒரு திட்டம் என்றே தற்பொழுதும் போரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எந்த ஒரு போரியல் வல்லுனராலும், அதைவிடச் சிறந்த ஒரு நகர்வுத் திட்டத்தை வகுத்திருக்கமுடியாது என்றே அவர்கள் தமது ஆய்வுகளின் போது தெரிவிக்கின்றார்கள்.
ஆனாலும், விடுதலைப் புலிகளை மடக்கவென மிகவும் கவனமாகவும், நுனுக்கத்துடனும் அந்தத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், அந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கவணத்தில் எடுக்காது விட்டிருந்ததுதான், இந்தியப் படையினரின் மிகப் பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது.
அதாவது, தமது பலம் பற்றியும், தமது நகர்வுகள் பற்றியும் சிந்தித்து திட்டம் வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், தாம் இம்முறை மோத இருப்பது, ‘விடுதலைப் புலிகளுடன் என்ற விடயத்தை மறந்துவிட்டிருந்ததுதான் அவர்களது திட்டம் படுதோல்வியடையக் காரமாக இருந்தது.

தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடும் வழக்கத்தைக் கொண்ட ஒரு அமைப்பை களமுனையில் தாம் சந்திக்கவேண்டி வரும் என்ற உண்மையை இந்தியப்படை அதிகாரிகள் உணர்ந்துகொண்டிருக்கவில்லை. ஒரு நிதர்சனத் தலைவனையரம், அவரால் வளர்த்தெடுக்கப்பட்டு, வழிநடத்தப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தாம் களத்தில் சந்திக்கவேண்டி வரும் என்பதையும் இந்தியப்படை அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தார்கள். தாம் வகுந்தெடுத்த எதிரிக்குப் பக்கபலமாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமும் களமிறங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் இந்தியப்படையினர் உணர்ந்துகொள்ளத் தலைப்படவில்லை.
இவ்வாறு சில அடிப்படைகளைக் கவணத்தில் கொள்ளாது, புலிகளுக்கு எதிராக திட்டங்களை இந்தியப்படையினர் வகுத்திருந்த காரணத்தினாலே, ஈழ மண்ணில் பல வரலாற்றுத் தோல்விகளையும், அவலங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
இந்திய படைகளின் தோல்விகள் தொடரும்..

✍️ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.