தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 09

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.”
(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 09)

டெல்லியில் வைத்து மிரட்டிய பூனை படையும் – அடிபணியாத வரிப்புலித் தலைவனும்!.

கடந்த பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்கள் புதுடெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டதை பார்தோம் இந்த பதிவில் டெல்லியில் இந்திய அரசு நடந்து கொண்ட விதமும் தலைவர் பிரபாகரன் அவர்களின் அடிபனியாத தன்மை பற்றி பெரும்பாலும் எவரும் அறிந்திராத ஒரு சரித்திரத்தை பார்ப்போம்.

திடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்துக்கு 1987ஆம் ஆண்டு ஆடி 19 நாள் அன்று வருகை தந்தார். அவருடன் வேறு சிலரும் வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தலைவர் பிரபாகரன் அவர்களை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் அவசரமான சந்திப்பு எனவும் தெரிவித்தனர். உடனே தலுவர் பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு நடைபெற்றது.

சந்திப்பின்போது தலைவர் பிரபாகரன் அவர்கள்டன் யோகி கூட இருந்தார். பூரி, அவர்களிருவரிடமும், இந்தியா-இலங்கைக்கு இடையே ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கையெழுத்திடும் முன்பாக தலைவர் பிரபாகரனைச் சந்திக்க பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புகிறார் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மேலும் கேட்டதற்கு, அதுபற்றிய விவரங்களை பிரதமர் தெரிவிப்பார் என்றும், விவரம் குறித்து அவரிடம் விவாதிக்கலாமென்பதையும் பூரி தெரிவித்தார்.

தலைவர் பிரபாகரன் அவர்களும் யோகியும் இதுகுறித்து தங்களுக்குள்ளே யோசிக்கவும், “இதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். மிக முக்கியமான விஷயம். இதைத் தவறவிட வேண்டாம்’ என்று பூரி அவர்களைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார்.
தலைவர் பிரபாகரன் டெல்லிக்குச் செல்ல ஒத்துக்கொண்டார். அதே வேளையில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கமும் எங்களுடன் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பூரி டெல்லிக்குத் தொடர்புகொண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உடன் இருப்பதற்கான உறுதியைப் பெற்றார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை, காவலர்கள் குழு ஒன்று அழைத்துச் சென்றது. அங்கே அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தலைவர் பிரபாகரன் அவர்களும் மற்றவர்களும் சென்னை வருகிறார்கள் என்றும் அவர்களுடன் விமானநிலையத்தில் சேர்ந்துகொண்டு டெல்லி செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. (சுதந்திர வேட்கை நூலில் அடேல் பாலசிங்கம்-பக்.170)

அடுத்த நான்கு நாட்கள் கழிந்த பின்னர் ஆடி 23ஆம் நாள், யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் திடலில் இரு உலங்கு வானூர்திகள் வந்து தரையிறங்கின. உலங்கு வானூர்தியில் ஏறும் முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் தலைவர் பிரபாகரன் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டார். அந்த அறிக்கையில்,

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எழுந்துள்ள ஒப்பந்தத்தை முன்னிட்டு இந்தியா செல்கிறேன். அது ஒப்பந்தமோ அல்லது வேறு எதுவுமோ, எதுவாக இருந்தாலும் தமிழீழ மக்களின் நலன் காக்கப்படும் விதத்தில் அமைந்தால் மட்டுமே ஏற்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.”

அங்கு வந்திருந்த பூரியிடம், “எந்த நிலையில் எங்களது தலைவரையும் தளபதிகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறோமோ அதே நிலையில், அவர்களை இங்கே கொண்டுவந்து சேர்க்கவேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார்கள். அவரும் அவ்வாறே இந்தியா நடந்துகொள்ளும் என்று உறுதியளித்தார். தலைவர் பிரபாகரன், யோகி, யாழ்ப்பாணம் அரசியல் செயலாளர் திலீபன் ஆகியோரையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு உலங்கு வானூர்தி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் நோக்கிப் பறந்தது.

விமானநிலையத்தில் இவர்கள் வருவதற்கு முன்பாகவே அன்ரன் பாலசிங்கம் வந்திருந்தார். அங்கு பாலசிங்கத்தைச் சந்தித்ததும், “இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தவிருக்கும் ஒப்பந்தம் குறித்துத் தெரிவிக்கவும், ஆலோசிக்கவும் என்று வரச்சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் எதுவும் தெரியவில்லை. பூரியிடம் கேட்டால் அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வது டெல்லியில் இந்தியத் தூதர் உங்களுக்கு விளக்குவார் என்பதுதான்’ என்று தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் விமானத்தில் டெல்லி கிளம்பினர். சில மணி நேரங்களில் டெல்லி வந்ததும், அவர்கள் தங்குவதற்காக ஒரு தளமே நட்சத்திர விடுதியான “ விடுதி அசோகா’வில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 513 எண் கொண்ட அறைக்கு தலைவர் பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.
விடுதியின் வெளியே கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, “உங்களது பாதுகாப்புக்காகத்தான்’ என்றார்கள். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை இருந்த தளத்திலும் கருப்புப்பூனை அதிரடிப்படையினர் காவல் காத்தனர்.

அவர்கள் கைகளில் உயர்ரக ஆயுதங்கள். விடுதியின் அறையில் காலடி எடுத்துவைக்கும்போது, “உச்சகட்ட பாதுகாப்பில் இந்த அறையில் தங்குகிறீர்கள். அனுமதியின்றி இங்கிருந்து நீங்கள் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது. அறையிலுள்ள தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன’ என்று உடன் வந்த அதிகாரி தெரிவித்தார். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அடுத்தடுத்த சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலைக்குப் தலைவர் பிரபாகரனும் மற்றவர்களும் ஆளானார்கள்.

“பாலா அண்ணே, இந்த தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்பது நமக்கு வைக்கப்பட்ட பொறி’ என்று தலைவர் பிரபாகரன் சொன்னார்.
சற்று நேரத்தில் இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் இறுகின நிலையில் இருந்தது. சோபாவில் அமர்ந்தார். தனது சட்டை பையிலிருந்து “பைப்’பை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு புகையிலைத் துகள்போட்டு பற்றவைத்துக்கொண்டார். இரண்டு மூன்று தடவை புகையை இழுத்து வெளியேவிட்டார்.

தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் இவரது செயலையே பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் பேசவில்லை. அவர் சொல்லப்போகும் செய்தியை அறிந்துகொள்வதில் அவர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அவர் வாய்திறந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படப்போவதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு செல்லவிருப்பதாகவும், அவ்வொப்பந்தம் தமிழர்களுக்கு நியாயமான தீர்வாக இருக்கும் என்றும், தெரிவித்துக்கொண்டே வந்தவர், “”நீங்கள் இந்த ஒப்பந்தத்தை கட்டாயம் ஆதரிக்கவேண்டும்” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, “”இதோ அவ்வொப்பந்தத்தின் ஆங்கிலப் பிரதி” என்று பாலசிங்கத்திடம் நீட்டி, “”இதனைப் தலைவர் பிரபாகரனுக்குத் தமிழ்ப்படுத்திச் சொல்லுங்கள். நான் இன்னும் இரண்டுமணி நேரத்தில் திரும்பி வருவேன். வரும்போது நீங்கள் இதன்மீது சாதகமான முடிவொன்றைத் தெரிவிக்கவேண்டும்” என்று கூறிவிட்டு, அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

1. ஒப்பந்தத்தில் இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு வலியுறுத்தலும்,

2. தமிழ் பேசும் மக்களுக்கான மாகாண சுயாட்சி,

3. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகள்,

4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்,

5. வடக்கு-கிழக்குப் பகுதிகள் இணைப்புக்கு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு.

போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டிருந்தது அந்த ஒப்பந்தம். சாதகமான அம்சம் என்னவென்றால் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு ஏற்றுக்கொண்டமைதான்.
மற்றொன்று போராளி இயக்கங்களை அங்கீகரித்ததும் அதன் உறுப்பினர்களைப் “போராளிகள்’ என்றழைத்தது ஆகும். மத்திய அரசின் அதிகாரங்களை வலியுறுத்தும்போது வெளிப்படையாகவும், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு -விஷயத்தில் பூடகமாகவும் செய்திகள் உள்புகுந்திருந்தன. மொழி விஷயத்தில் சிங்களம் மட்டும்- ஆனால் தமிழும் ஆங்கிலமும் கூட இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறப்படவில்லை.

“எஞ்சிய விஷயங்கள்’ பேசித் தீர்க்கப்படும் என்பதிலும் பல உட்பொருள்கள் இருந்தன. இவையெல்லாவற்றையும்விட ஒப்பந்தம் கையொப்பமான 72 மணிநேரத்தில் போராளி அமைப்புகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்ததைக் கண்ட தலைவர் பிரபாகரன் அவர்களின் கண்கள் சிவந்தன.
அவர், “இல்லை-முடியாது-இந்த ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது’ என்று கொதித்தெழுந்து சொன்னார்.
தீட்சித் இரண்டுமணி நேரம் அவகாசம் கொடுத்தார். அந்த அளவுக்கு நேரம் தேவைப்படவில்லை. மேற்கொண்டு படிக்கத் தேவையில்லாத ஒப்பந்த வரைவாக அது அமைந்துவிட்டது.
இரண்டு மணிநேரம் கழித்து, அந்த அறைக்கு தீட்சித் வந்தார். வந்ததுமே, “தீர்மானத்துக்கு வந்தாகிவிட்டதா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள், “நாங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதற்கில்லை’ என்றார்.
“ஏன், என்ன காரணம்?’ கேட்டார் தீட்சித்.
“சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களின் விருப்பத்தை ஒப்பந்தம் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஆயுதம் ஒப்படைப்பு என்பதை ஏற்பதாக இல்லை. உறுதியான தீர்வும், தமிழ்மக்களுக்கு உரிய பாதுகாப்பும் ஏற்படும் வரை நாங்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா எவ்வாறு கேட்கக்கூடும்.
இந்த ஆயுதங்களை நாங்கள் எந்த அரச பயங்கரவாதிகளிடம் இருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பறித்தோமோ, அதே அமைப்பிடம் இவை திரும்பப் போய்ச்சேரும். நாங்கள் ஆயுதங்களைக் கையளிப்பது என்பது நடக்கவே நடக்காது’ என்று சொன்னார்.

தீட்சித் இந்த வாதத்தை ஏற்கவில்லை. “இது ஒரு அருமையான திட்டம். இதை நிறைவேற்றியே தீருவோம். இந்திய அமைதிப்படை இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஆயுதம் எதற்கு? எங்களை நம்புங்கள். யோசியுங்கள்’ என்றார். தலைவர் பிரபாகரன் தரப்பினர் பதிலளிக்காமல் இருக்கவும், “நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி. இது இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்’ என்றார். பிறகு மறுபடியும் தீட்சித்தே பேசினார், “நீங்கள் இதை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்.’
“அப்படியா, என்னமாதிரியான விளைவு?’ என்று யோகி கேட்டார்.
“நீங்கள் இந்த அறையிலேயே சிறை வைக்கப்படுவீர்கள்-ஒப்பந்தத்தை ஏற்கும்வரை’ என்றார் தீட்சித்.

தொடரும்

ஈழம் புகழ் மாறன்

1 தொடக்கம் 8 வரையான தொடர்கள்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.