பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்கும்..!
பொத்துவில் தொடங்கி
பொலிகண்டி வரைக்கும்
கத்தி கத்தி சொல்லுவோம்
கைதிகளை விடுவி
கொட்டிடும் மழைகண்டு
குளிர்ந்து நடுங்குவாரா
குண்டுமழை கண்டவர்கள்
பயந்து ஒதுங்குவாரா
குட்ட குட்ட குனிவது
கோளைகளின் செயலல்லவா
முட்டி உடை தடைகளை
முடியாத காரியமா
சக்தியை காட்டுவோம்-தமிழர்
சத்தியத்திற்காய் கூடுவோம்
புத்தியோடு சேருவோம்-புது
யுக்திகொண்டு-இந்த
யுத்தத்தை வெல்லுவோம்.
த.யாளன்