ஈழத்தின் இராஜபறவை….

In தாயக கவிதைகள்

ஈழத்தின் இராஜபறவை….

உலகத் தத்துவமுரைத்த
எம் ஈழவித்தகமே…..

காலநதியிடை கலந்தொரு
மதியுரைத்த முழுமதியே. ….

ஈழதேசம்தனை
உலக உருண்டையெல்லாம்
உலாவரச் செய்த காலச்சக்கரமே…..

அன்று
தாயக மண்ணில்-நீங்கள்
கால்பதிக்கும் நாள் பார்த்து வழிநெடுக
காத்திருக்கும் ஈழவிழிகளெல்லாம்…..

“நாளை அரசியல் ஆலோசகர்
வன்னி வருகிறார்”……
பத்திரிகையின்
முதன்மைப் பதிப்பு….

காலையானதும் செய்தித்தாள்தேடி
கால்கள் ஓடும்
கண்கள் ஆவலோடு செய்தியதைத்தேடும்..

கரிகாலன் கைலாகு கொடுக்க
ஈழக்காவியத்தின் தத்துவாசிரியனின் நிழலுரு
மக்கள் கண்குளிரக் காட்சிதரும்….

தாயகத்தலைவனுடன்,தானைத் தளபதிகள் புடைசூழ
ஆங்காங்கே தொடர் பேச்சுக்கள்,
வெகுஜன சந்திப்புக்கள்,
போராளிகள் மனம்நிறை கருத்தாடல்கள்,
மக்களோடு மக்களாகப் பயணங்கள்…..

புதினத்தாள்கள் பலராலும்
அதிகம் புரட்டப்படும் புதுச்செய்திகள் அறிய…..

சொற்ப நாட்கள் கழிய…

வன்னிப்பெருநிலப்பரப்பின் புழுதிக்காற்றோடு
உலங்குவானூர்தி-முத்தவெளியை சிலநிமிடம் முத்தமிடும்..

மறுகணமே ஆகாயப் பரப்பின்
மேல்க்காற்றைக் கிழித்தபடி
“தாயகத்தின் இராஜபறவை” உயரப்பறக்கும்….
பார்த்திருந்து மகிழ்ந்த தருணம்
இன்று
கடற்கரையோர மணல்கும்பியானது காண்…

எப்படி மறக்க
உலகத் தமிழரின் மனம்நிறைந்த
அரசியல் ஆலோசகர்….

மேடைப்பேச்சுக்களில்
புன்னகை புனையும் புலவன்…..

அரசியல் பேச்சில் வெல்லமுடியாத
“இராஜ கிரீடம்”…..

மரணத்தின் முன்பே ஓய்வுதேடிய புனிதன்….

நோயின் தாக்கம் ஏக்கம் கொடுத்தாலும்
இறுதிவரை ஈழப்பணியாற்றிய தேசபக்தன்….

கொடியநோயின்
அதியுச்ச பிரயத்தனத்தால் இறுதிவிடைபெற்ற
ஈழக்குடும்பத்தின் இமயம் “தேசத்தின் குரல் ”
அன்ரன் பாலசிங்கம்
அண்ணர் அவர்களின்
நினைவு நாளில்
எமது
இதயபூர்வமான வணக்கம். …

அகம்நிறைந்த நினைவுகளுடன்
சிரம்தாழ்த்தி வணங்குகிறோம். ….

து.திலக்(கிரி ),
14.12.2020,
19:40.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.