பிரிகேடியர் நடேசனும்! – இந்திய படைகளின் காலமும்!

In கார்த்திகை மாத சிறப்பு கட்டுரைகள்

பிரிகேடியர் நடேசனும்! – இந்திய படைகளின் காலமும்!

(கார்த்திகை திங்கள் பத்து)

அதி காலையிலையே கவி வரிகள் எழுதலாமா? இல்லை மறைந்துபோன இந்திய மற்றும் சிங்கள பயங்கரவாத அரசுகளுக்கு எராக சரித்திரம் படைத்த கார்த்திகை நாயகர்களின் வரலாற்றை மீட்கலாமா என்று சிந்தனை கவி வரிகளிலோ வேதைனையும் வலி, வேதனை, கோபம் போன்றவற்றை மாத்திரமே வெளிப்படுத்த முடியும் ஆனால் வரலாற்றை மீட்கும் போது நாம் எவ்வாறு போராடினோம் இப்போது எவ்வாறு வீழ்ந்தோம் இவற்றின் பின்னால் உள்ள சர்வதேச சதிகள் என்ன என்பதை அறிவதன் மூலம் வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய வேகமாக போராடலாம். இந்த சரித்திர பதிவுகளை நாம் அறிந்தால் மாத்திரமே இன்று இந்திய இலங்கை அரசுகள் முன்னெடுத்து வரும் சதிவலைகளை தகர்க்க முடியும்.

அந்த வரிசையில் விடுதலைப் புலிகளின் முக்கிய மளபதிகள் இந்தியப் படை ஆக்கிரமிப்பு காலத்தில் எதிர்கொண்ட கஷ்டங்கள், அவற்றை அவர்கள் முறியடித்த துனிவுகள், போராட்டத்தில் காண்பித்த உறுதி போன்றனவற்றை தொடர்ந்து வரும் நாட்களில் சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியப் படையினருக்கு எதிரான போராட்டத்தில், ஒரு தொகுதி போராளிகள் வன்னியில் தளம் அமைத்து சண்டையிட்டுக்கொண்டிருந்த அதேவேளை, மற்றொரு பிரிவினர் யாழ் குடாவில் மக்களுடன் மக்களாகத் தங்கியிருந்து இந்தியப் படையினருக்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் போராட்டத்திற்கு துணையாக பல மூத்த போராளிகளும், அமைப்பின் முக்கியஸ்தர்களும், களத்தில் நின்று செயற்பட்டார்கள். போராளிகளை மட்டும் களத்தில் விட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிடல்லை. அதற்கு உதாரணம் புலிகளின் மூத்த உறுப்பிரான நடேசன்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும், பின்னாட்களில் புலிகளின் காவல் துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவரும், 2007ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவருமான பிரிகேடியர் நடேசன் அவர்கள் இந்தியப் படை ஆக்கிரமிப்பு காலத்தில் மக்களுடன் மக்களாக நின்று பல கஷ்டங்களை அனுபவித்திருந்தார்.
ஆரம்பத்தில் அவர் தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையிலேயே தங்கியிருந்து போராட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை புரிந்துகொண்டிருந்தார். அவரது மனைவி, குழந்தைகள் போன்றோரும் வல்வெட்டித்துறையிலேயே தங்கியிருந்தார்கள். அவர் அவரது குடும்பத்தைப் பிரிந்து வேறு பல இடங்களில் மாறி மாறித் தங்கியிருக்கவேண்டி ஏற்பட்டது.

அவரைக் குறிவைத்து இந்தியப் படையினர் வீடு வீடாகத் தேடிக்கொண்டிருந்தபோது, வீட்டுச் சுவர்களில் அமைக்கப்பட்ட இரகசிய பலகை அறைகளில் பலமணிநேரம் பதுங்கியிருந்து இந்தியப் படைகளிடம் இருந்து தப்பியிருந்தார்.
ஆரம்பத்தில் வல்வெட்டித் துறையில் இருந்து போராட்டத்திற்கு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருந்தவர், இந்தியப் படையினரின் நெருக்குதல்கள் அதிகமாக, அதிகமாக அங்கிருந்து வெளியேறி கரவெட்டியில் அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். நெல்லியடியில் பொட்டம்மான் தங்கியிருந்த வீடு தாக்கப்பட்டபோது நடேசன் அவர்களும் பொட்டம்மானுடன் தங்கியிருந்து, மயிரிழையில் அங்கிருந்து உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

நாளை பொட்டு அம்மான் இந்திய படைகளுக்கு எதிராக மேற்கொண்ட போர் உத்திகள் பற்றி சற்று சுருக்கமாக பார்ப்போம்…

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.