தமிழரின் கலங்கரை விளக்குகள் மாவீரர்கள்…!

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

தமிழரின் கலங்கரை விளக்குகள் மாவீரர்கள்…!

தாவி வந்த படைகளை ,
வேரறுத்த வீரவேங்கைகளே,
வெள்ளமென திரண்ட படைகளை,
சில்லறையாய் சிதற விட்டீர்களே,
தன்னின மானம் காக்க ,
இன்னுயிரை தியாகம் செய்தீர்களே,
தமிழர் தம் வீடுகளில் காவியம் ஆனீர்களே ,
மரித்தும் மலரான நம் மாவீரர்களே…!!!!!

மக்கள் மானம் காக்க மாவீரர் ஆனிர்களே,
தமிழரை தன்மான தமிழரென பறைசாற்றியது உங்கள் துணிச்சல்,
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்,
இதை உலகுக்கு உணர்த்தியவர்கள் நீங்களே,
மக்கள் நெஞ்சமதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்,
மறைந்தும் மறையாத நம் தெய்வங்கள்..!!!

காவிச்சென்றது கந்தகம் இல்லை ,
தமிழனின் தன்மானம்,
அடிபணியாத ஆதிக்கம்,
வணங்கா மண்ணின் பெருமை,
தமிழனின் வீரம்,
தமிழனின் விவேகம்,
அடி பணிய வைத்தீர்கள் அரக்கர்களை…!!!!

கப்பலில் வந்த காடையர்கள்,
நம்மை ஆள்வதா?
சிங்கத்தின் வழி வந்த சீர்கெட்டவர்களுக்கு,
தமிழின் பெருமை எப்படி தெரியும் ?
பஞ்சம் பிழைக்க படகில் வந்தவர்களுக்கு?
நாங்கள் பணிவதா?
வஞ்சகனுக்கு நீங்கள் நெருப்பு.. நமக்கு உம்மேல் ,
மாபெரும் விருப்பு வீரவேங்கைகளே ……..!!!!

மனித தர்மத்தை உலகுக்கு ,
அறிமுகம் செய்த மாவீரர்கள் நீங்கள்,
உங்கள் தியாகத்தில் இங்கு வாழும் ,
பலரில் நானும் ஒருவன்,
மெச்சுகிறேன் உங்கள் வீரத்தை,
உம்மை நினைக்கையிலே ,
குளமாகிறது எனது விழிகள்.

நெல்லியடி, கல்வியடி, மில்லரடி
அடித்தீர்கள்  நீங்கள் நெத்தியடி,
முதல் அடியிலேயே மூர்ச்சை ஆனார்கள்,
வந்த வல்லரசெல்லாம் ஒரு கணம் நடுங்கின,
சிறப்பு படைகளை சிதைத்த எம் மாவீரர்கள் நீங்கள்
உலக வரலாற்றில் முதன்மை விடுதலை இயக்கம்
என்ற பேரை தமிழுக்காக வாங்கி தந்தீர்கள்,
தமிழன் எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் என ,
உலகுக்கு காட்டிய காவல் தெய்வங்களே..!!!
கோடான கோடி வணக்கங்கள் …!!!!

தீபச்சுடர்களே ..
நீங்கள் யாருமே புதைக்க படவில்லை ,
மாறாக மக்கள் மனதில் விதைக்க பட்டுள்ளீர்கள் .
மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம்,
தளிர் விட்டு முளைக்கும் காலம் தொலைவில் இல்லை,
தலைவனின் சொல்லே தாரக மந்திரம் என ,
உங்கள் சிரம் மேல் கொண்டு நீங்கள் செய்த தியாகம்,
மாறாது உங்கள் மேல் நாம் கொண்ட மோகம் ,

தமிழரின் கலங்கரை விளக்கமான தமிழ் ஈழத்துக்காக ,
நீங்கள் ஆற்றிய தியாகம் அளப்பெரியது ,
அதை சொல்ல வார்த்தைகள் போதாது ,
இந்த மாவீரர் நாளில் உங்கள் நினைவுகளால் ,
தவிக்கும் தமிழ் அன்னை.

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.