விலை பேச முடியாத தமிழன் பூமி….!
தமிழுக்காய் எரிகின்ற தீபம் எல்லாம்
தனக்கென வாழ்ந்தது சில காலம் தான்
தமிழினாய்ப் புகழ் பெறும் நொடிகள் எல்லாம்
மொழியெனும் உணர்வின் பரிணாமம் தான்
நிறுத்தாது எழுதிடும் எழுத்து எல்லாம்
நிலையாகி மண்ணில் எழுவது தான்
விலை போகா தமிழின் கருத்தில் எல்லாம்
கலையாது விடுதலை உணர்வேற்றம் தான்
அலை மோதும் திசை எல்லாம் எழுவானமே
தலை போகும் நிலை வந்தும் தமிழ் வாழுமே
நிலை மாறா மொழி தந்த பெரு வீரமே
விலை போகா வரலாறு தினம் காணுமே
மலைத் தோளில் வெறி சேரு மகிழ்வுடனே
அலை அடித்தாலும் அசையாது தமிழுடனே
குலையாத உணர்வோடும் அறிவுடனே
விலை போகா தமிழ் பூணும் போர்க்கோலமே
வெற்றியின் புகழ் சேரும் உன் ஆயுதம்
சூரியப் பகை நீக்கும் எம் தாயகம்
ஆரியம் குலைவது எம் பெருவீரியம்
காரியம் முடிவோடு எம் சூரியோதயம்
…….கவிப்புயல் சரண்…….