வரவேற்க வேண்டும் புலியை….!
நிலம் எங்கள் உரிமை என்று
நிமிர்ந்து நிற்க
களம் வந்து கானகத்தே
சுழன்றடிக்க
கொடுவிடம் கழுத்திலே
ஆடி நிற்க
வரிப்புலிஉடையது
கண்டு கொள்ள
புலிப்பலம் அறியாதோன்
பரிதவிக்க
ஈழத்தில் சிங்களம்
சிதறிப் போக
காலத்தை கொண்டு வா தம்பி
கந்தகம் சுமந்து வா தம்பி
அந்த ஈழத்தை வெல்லும்
காலத்தை கொண்டு வா தம்பி
வந்தது புதியதோர் ஆண்டு
வருகுது புலிகள் மீண்டு
கருகுது பார் பகை நிலைகள்
அங்கே கதறி வீழுமே சிங்கள தலைகள்.
இந்த ஓர் ஆண்டு போதும்
இனி வரும் ஆண்டிலே புலிகள் பாயும்
வந்திடும் நல்லதோர் செய்தி
வாசலை பெருக்கி வை
வரவேற்க வேண்டும் புலியை
பாயிலே படுப்பதை விட்டு
புதுப் பரணியை படித்திடு நலமே
வரிப் புலி ஆண்டிட மண்ணில்
வந்ததே நல்லதோர் ஆண்டு
வாழ்த்துவோம் வாருங்கள்
மொழியை
வரவேற்க வாருங்கள்
புலியை
வருவது வெற்றியின் ஆண்டு
வரலாற்று வீரத்தின் ஆண்டு
கவிப்புயல் சரண்