கலியுகம் புகழும் முத்தமிழ் சங்க தலைமகன்….!
உலக புரட்சியை படித்தவன்
உலக வரலாறுகளே புகழும் புலிவீரன்
பெண்மையை மதிப்பவன்
பேராண்மை கொண்டவன்
சத்தியம் காப்பவன்
அநீதிகளை வெல்பவன்
வீரம் கொண்டவன்
எதிரிகளையும் மதிப்பவன்
உண்மை மொழிபவன்
பொய்யர்களை தூர் வாருபவன்
மன திண்மை கொண்டவன்
தமிழ் மானம் காப்பவன்
மன ஈரம் உள்ளவன்
தமிழின் ஈரத்தை களைபவன்
வலியை தாங்குபவன்
வலிமை கொண்டவன்
தமிழின் பிதாமகன் இவன்
கலியுகம் புகழும்
முத்தமிழ் சங்க தலைமகனும் இவன்
தமிழ் சந்ததியின் வலிமை பெருக்குபவன்
தமிழின் சந்ததி காப்பவன் இவன்
இவன் இன்றி ஓர் அணுவும் அசையாது
இவன் இன்றி ஒரு கையும் ஓசை எழுப்பாது
ஈழம் புகழ் மாறன்