ஒரு மாவீரரின் இறுதி கணங்கள்….!

In சிறப்பு கட்டுரைகள்

ஒரு மாவீரரின் இறுதி கணங்கள்….!

(தமிழீழ மாவீரர் எழுச்சி  நாள் கட்டுரை)

தம்ப் தம்ப் தம்ப்.தூரத்தே இருக்கும் கிராமங்களிலிருந்து வரும் அலறல் ஒலிகளுக்கு மேலாக, என் இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது.என் பற்களுக்கிடையே அதிக பலத்துடன் இருந்த சயநைட் குப்பியை மட்டுமே என்னால் உணர முடிந்தது.என்னைப் போலவே என் தோழிகளும் உயரமான புற்படுக்கை மேல் குப்புறப் படுத்துக் கொள்கிறார்கள்,செந்நிறமான கண்களில் தெளிவான பார்வை.இத‌ற்காகவே பயிற்சியை பெற்றோம். எம் மக்களின் விடுதலைக்காக நாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் மனதால் இணைந்தோம்.ஒருநாள் எம் மக்களின் மேல் சூரிய ஒளி பிரகாசிக்கும்,துன்பத்தின் ஒலியைவிட சிரிப்பொலிகளுடன் தென்றல் காற்று தளுவிச் செல்லும்.

ஒரு நாள், இனிமேலும் எங்கள் வீதிகள் எங்கும் செந்நிறமாகவோ,அல்லது சடலங்களின் புதை குழிகளாகவோ இருக்காது என நம்பிக்கை கொள்கின்றோம்.

நாங்கள் நிலைகொண்ட இடத்தில், ஒரு கணம் என் மனம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.போருக்கு முன் என்னுடைய வாழ்க்கை, எதிரிப் படைகளால் கருமைநிறம் தீட்டப்பட முன்பிருந்த ஆகாயம் மற்றும் ஊழல் அரசினால் சூறையாடப்பட்ட சூரியன் போன்றவை பற்றிய என் கட‌ந்த‌ காலத்தை நினைவு கூர்ந்தேன்… காலை வேளை என் அம்மா பள்ளிக்கு தயாராவதற்கு என்னை எப்படி எழுப்புவார், எங்கள் தந்தை எங்கள் குடும்பக் கடையில் எப்படி வேலை செய்திப்பார், என் மூத்த சகோதரி காலை உணவு தயாரிப்பதில் என் பாட்டிக்கு எப்படி உதவுவார்கள் என்பதைப் பற்றி ஒரு கணம் நான் நினைத்துப் பார்க்கிறேன். இரவும் பகலும் துப்பாக்கிக் குண்டுகள் எங்கள்மேல் மழைபோல் பொழியுமுன், எனக்கொரு சாதாரண வாழ்க்கை இருந்தது.என் மனதில் எழும் எண்ணங்களையிட்டு மறைக்காமல் பயமின்றி சிரிக்க முடிந்தது.என் தோழிகளுடன் நடந்து போகும்போது எம் கிராமித்தின் மீது பொழியும் குண்டுகளுக்குப் பயந்து ஓடி ஒழியவில்லை.எனக்குரிய வாழ்க்கையை என்னால் வாழ முடிந்தது.

ஆனால், எங்களால் வாழமுடியவில்லை. எங்கள் சுதந்திரத்திற்காக நான் போராடிய போது எனது கிராமம் சூறையாடப்பட்டது.எல்லோரும் இறந்து விட்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் எனக்குத் தெரியும், அவர்கள் அனைவரும் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். எங்கள் தந்தையின் தலை எங்கள் கடையின் சுவரில் அடித்து நொறுக்கப்பட்டது.அவரின் இரத்தம் தோய்ந்த‌ முகம் சிதைக்கப் பட்டதோடு மரண ஓலம் வெளிவராமல் கொலைகாறரின் கையினால் அவரின் வாய் அமைதி ஆக்கப் பட்டது. எறிகுண்டு தாக்கியதினால் கை கால்கள் நீட்டியப‌டி கிடந்த, பத்து மாதங்களாக என்னை சுமந்த என் அன்னையின் பல உடற் பாகங்களைக் காணவில்லை. சாய்மனைக் கட்டிலில் கிடந்த என் பாட்டியை தலை மயிரில் பிடித்து இழுத்துச் சென்று தீயில் வீசியபோது தசைகள் தீயின் சுவாலைபட்டு எரியும் சத்தத்தினால் அவளின் வலியின் ஓசை அடங்கிப் போனது. என் மூத்த சகோதரி… என் அன்பான மூத்த சகோதரி. இறுதியில் அவளை கொலைகாரப் படையினர் காப்பாற்றினர்…அவளது முடியை பிய்த்து எறிந்தனர், அவளது ஆடைகள்,அவளது தோலையும் உள்ளேயுள்ள தசையையும். அவளுடைய உடலை சின்னபின்னமாக்கினர். தலையற்ற‌ முண்டமாக உடலை சிதைந்துபோக விட்டனர். இதுதான் உண்மை…என்னைத் தவிர வேறு யாரும் அறியாத உண்மை.

போர் என்பது ஒரு சாதாரண‌ நிகழ்வு என்று கருதிய அனைவரிடமிருந்தும் இது மறைந்திருந்தது. எங்கள் அன்புக்குரியவர்களை இரையாக்கிய‌ பிறகும், அது விட்டுச்செல்லும் வடுக்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

எனவே, இங்கே நான் பதிவு செய்கிறேன் – உயரமான புல்லில், பெருமையுடன் என் சீருடையை நம்பிக்கையின் அடையாளமாக அணிந்தேன். துப்பாக்கி என் கைகளில் கனமானது, ஆனால் நான் பயன்படுத்தக்கூடிய ஒரே நீதி வழி இது. இது ஒரு முடிவை எட்டுவதற்கான‌ எனது வழிமுறையாகும் – இது எனது மக்களின் சுதந்திரத்திற்கான நம்பிக்கையை தருகின்றது.

முதல் சிப்பாய் பார்வைக்கு வருகிறான், எங்கள் முதுகில் எரியும் வெயிலில் காத்திருக்கும் மணிநேரங்கள் இறுதியாக மதிப்புக்குரியவை. எனது ஏ.கே .47 துப்பாக்கியை நான் குறிவைக்கிறேன். நான் என் முதல் மற்றும் கடைசி மூச்சை எடுத்துக்கொள்கிறேன்.

நான் சுட்ட பிறகு இரண்டாவது  சூட்டுச் சத்தம் என் காதுகளில் ஒலிக்கும். . . நான் என் குப்பியைக் கடித்தேன், என் உடலில் நுழையும் விஷத்தை வீரத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்.

இது இனிமையானது. நமது தமிழீழம் ஒரு நாள் நம் தியாகத்தின் மூலம்  சுதந்திர தாகத்தை தீர்க்கும்.

எழுதியவர்: ஷாரூதி ரமேஷ்  
மாவீரர் நாள் நவம்பர் 27, 2019இன் அணையா தீப வெளிச்சத்தில்.

Last Breath.

Thump Thump Thump.
I could hear my heart pounding in my ears, over the sound of screams that filled the village in the distance. All that could be felt was the cyanide pill in my mouth, the heavy weight of it resting between my teeth. Just like me, my comrades lie on their stomachs in the tall grass, red-rimmed eyes clear with clarity. We were trained for this — we had all joined with the same purpose in mind: to free our people. To one day see the sun shine down on our people, to have the wind carry laughter rather than shouts of agony.
We hoped that one day, our streets would no longer be stained red or buried under the corpses of Tamils.
Staying where we were stationed, my thoughts wandered for a moment. I recall the past . . . my life before the war, before the soldiers painted the sky black and the corrupt government stole the sun. I think about how in the mornings, my mother would wake me up to get ready for school, how my father would already be outside working at our family shop, and how my older sister would help my grandmother with preparing breakfast. I had a normal life, a happy one before the bullets rained down on us day and night. I was able to smile without fear tainting my expression. I was able to walk with my friends by my side without having to duck to avoid the onset of bombs hailing onto our village from above. I was able to live, as we all deserved to.
But, not all of us got to live. While I fought for our freedom, my village had been ransacked. We were told everyone was dead, but I know the truth: they were all killed. My father’s head was smashed against our shop’s wall, until his face was a bloody pulp and his screams were silenced by death’s hand over his mouth. My mother, who carried me within her for nine months, was missing several body parts when the grenade hit her body and strewn her limbs to become buried beneath the remnants of our bombed home. My grandmother had been dragged by her hair out of her old rocking chair — before being tossed into the fire pit. Her shrill cries of pain were covered by the sound of the fire burning at her flesh, scorching her to death. And my older sister . . . my loving older sister. The soldiers saved her for last — tearing at her hair, her

clothes, her skin and the flesh beneath. They defiled her sacred body and left her corpse to rot without a head. This was the truth . . . the truth that no one but I would know.
This was what was hidden from everyone who assumed that war was a simple event that could just come and go. They were not aware of the scars it would leave behind, even after consuming our loved ones.
So, here I lay — in the tall grass, proudly wearing my uniform as a sign of hope. The gun is heavy in my arms, but it’s the only means of justice that I can utilize. It’s my means to an end — one that would hopefully result in the freedom of my people.
The first soldier comes into sight, and the hours spent waiting with the scorching sun at our backs are finally made to be worth it. I aim my AK-47 rifle. I take in my first and my last breath.
And the second after I fire the shot that rings in my ears . . . I bite down on my capsule, and accept the poison seeping into my body.
It’s sweet. Like the justice that our Tamil Eelam would one day drink up through our sacrifice.

—Written by: Sharuthie Ramesh, in light of Maaveerar Naal 2019.

Eelam Pugal Maran

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.