தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 65)

1500 புலிகளை அழிக்க தமிழீழ மண்ணில் களமிறக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் இந்திய நரிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையிலான மிக மும்முரமான யுத்தம் 1987ஆம் வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமானது.

இந்திய -தமிழீழ யுத்தத்தின் பல விடயங்களை ஏற்கனவே நாங்கள் தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் என்ற இந்த தொடரின் முதல் 60 பாகங்களிலும் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம். யுத்த காலங்களில் இந்தியப் படையினராலும், இந்தியப் படையினரின் கைக்கூலிகளான தமிழ்துரோக குழுவினராலும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் நிறைவே பார்த்திருந்தோம். இந்திய இராணுவம் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் பற்றி ஆதாரங்களுடன் பார்த்திருந்தோம்.

ஈழத்தமிழர்களைக் காக்கவென தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்த அகதி முகாம்களையும், வைத்தியசாலைகளையும், பாடசாலைகளையும், மதஸ்தலங்களையும் எப்படி எப்படியெல்லாம் தாக்கியழித்து கோரதாண்டவம் ஆடியிருந்தது என்கின்ற வரலாறுகளைத் திகதிவாரியாக இந்தத் தொடரில்; பதிவிட்டிருந்தோம். மட்டக்களப்பில் இடம்பெற்ற சண்டைகள், கிழக்கில் முஸ்லிம்கள் மீது இந்தியப்படையினர் நிகழ்த்திய தாக்குதல்கள் என்றும் பல விடயங்களையும் முன்னய சில பாகங்களில் பார்த்திருந்தோம்.

இந்திய-தமிழீழ யுத்தத்தின் அந்த பாகங்களை பார்க்கத்தவறியவர்கள் கண்டிப்பாக அவற்றைப் படித்துவிட்டு இந்தத் தொடரின் இனிவரும் பாகங்களை பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன். இனி இந்திய -தமிழீழ யுத்தத்தின் மேலும் சில முக்கிய கட்டங்கள் பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்ப்போம்.

பாரிய இழப்புக்களின் மத்தியில் யாழ் குடாவையும், வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களையும் கைப்பற்றிய இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் மிகவும் திண்டாடினார்கள். புலிகளைச் சமாளிக்கவென சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தார்கள். யாழ் குடாவில் இந்தியப் படையின் 54வது காலாட் படைப் பிரிவும், திருகோணமலையில் 340வது காலாட் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தது. இவற்றிற்கு மேலும் பலம் சேர்க்குமாற்போன்று யுத்த தாங்கிகள் அணிகளும் இந்த காலாட் படைப் பிரிவுகளுடன் இணைக்கபட்டிருந்தன. இந்தியப் படை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சங்கர் பாதூரி மற்றும் மேஜர் ஜெனரல் அப்சார் கரீம் போன்றவர்கள் இந்தியப் படையினர் வசம் அப்பொழுது இருந்த கனரக ஆயுதங்கள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி,

1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி நிலவரப்படி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஆகக் குறைந்தது பின்வரும் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள்:
நான்கு ரீ-72 தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய அணியினர் யாழ்ப்பாணத்திலும், மூன்று ரீ-73 தாங்கிகளைக் கொண்ட மற்றொரு அணியினர் திருகோணமலையிலும் இந்தியப் படையில் இருந்தார்கள். கனரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பன்னிரெண்டு கவச வாகனங்கள் (BMPI) யாழ்ப்பாணத்திலும், ஆறு கவச வாகனங்கள் திருகோமலையிலும் இந்தியப் படையினர் வசம் இருந்தன. இதைவிட யாழ்ப்பாணத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு 120 மி.மீ. ஆட்டிலெறிகள் மற்றும் வேறு சில ஆட்டிலெறிகளும் இருந்தன.

இதேபோன்று அரை ஸ்குவாட்ரன் அளவில் கவச வாகணங்களும், யுத்த தாங்கிகளும், ஆட்டிலறிகளும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலதிகமாக நூற்றுக்கணக்கான சிறிய ரக மோட்டார்கள், பீ-40 ரன ஏவகளைச் செலுத்திகள் இந்தியப் படைவசம் இருந்தன. இவற்றைவிட இந்தியப் படையின் 36வது படையணியின் ஆட்டிலறி பிரிவொன்றும், 2வது இன்டிபெண்டன் ஆட்டிலறி ரெஜிமென் (2nd Independent Artillery Regiment) இனது ஒரு பிரிவும் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவை ஏற்பட்டால் மிக குறுகிய அறிவிப்பில் இலங்கைக்கு நகர்த்தக்கூடிய விதத்தில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று இந்தியப் படையின் 72வது படையணியின் ஆட்டிலறிப் பிரிவொன்றும் பெங்களூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இத்தனை ஆராவாரங்களும், சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளைச் சமாளிக்க என்பது இரண்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவை.

இந்தியப் படையினர் மிகப் பெரிய பலத்துடன் வடக்கு கிழக்கை ஓரளவு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். சந்திக்கு சந்தி முகாம் அமைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தார்கள். சாதாரன மக்கள் புலிகளுக்கு உதவிவிட்டு இலகுவில் தப்பித்துவிட் முடியாத அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டிருந்தார்கள். மக்கள் மீது இந்தியப் படையினர் நிகழ்த்தியிருந்த கொடூரங்களின் வெளிப்பாடாக அது அமைந்திருந்தது. தேசியத் தலைவர் உட்பட புலிகளின் முக்கிய அணிகள் வன்னிக்கு தமது தளங்களை இடம்மாற்றிக்கொண்டன. வன்னிக் காடுகளில் மறைந்திருந்து தமது போராட்டத்தைத் நெறிப்படுத்துவதே அப்போதைக்கு சிறந்த ஒரு ராஜதந்திரமாக இருந்தது.

இதேநேரத்தில் யாழ்குடாவில் சிறுசிறு அணிகளாகப் பிரிந்து நின்ற விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருக்கு எதிராக கெரில்லாத் தாக்குதல்களைத் தொடர்ந்தபடி இருந்தார்கள். வன்னியில் இருந்து அவர்களுக்கு உத்தரவுகளும், வழங்கல்களும் கிடைத்தபடி இருந்தன.
இந்த கால கட்டம் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மிகவும் இக்கட்டானதும், கஷ்டமானதுமான காலகட்டம் என்றுதான் கூறவேண்டும். யாழ் குடா முழுவதும் விதைக்கப்பட்டிருந்த இந்தியப் படையினர், வரிந்து கட்டிக்கொண்டு அவர்களுக்கு உதவ ஓடித்திரிந்த தமிழ் கூலிப் படைகள், அச்சத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள், இவைகளுக்கு நடுவில் விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் மிகவும் கஷ்டத்துடன்தான் மேற்கொண்டு வந்தார்கள்.

இப்படியான கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். துரத்தி வரும் இந்தியப் படையினரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வது, அவ்வாறு பாதுகாத்தபடி எதிரியைத் திருப்பித் தாக்குவது என்பன அக்காலகட்டத்தில் மிகமிக கஷ்டமாக இருந்தது. பிற் காலத்தில் உலகிற்கு நன்கு அறிமுகமான விடுதலைப் புலிகளின் தளபதிகள் இந்தியப் படை காலத்தில் எப்படியான சங்கடங்களை எதிர்கொண்டார்கள், எப்படியான ஆபத்துக்களைச் சந்தித்தார்கள், அவற்றில் இருந்து எப்படித் தப்பித்தார்கள் என்று அடுத்த சில அத்தியாயங்களில் மேலேராட்டமாகப் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காயம் அடைந்து, அந்தக் காயம் சீழ் பிடித்த நிலையில் இந்தியப் படையினரிடம் இருந்து அவரைக் காப்பாற்ற போராளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்: விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் இந்தியப் படையினரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக கரவெட்டி, நவின்டில், நெல்லியடி என்று தப்பி ஓடிய கதை: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன்; அக்காலத்தில் தென்மாராட்சியின் பிராந்தியத் தளபதியாக கடமையாற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள்: புலிகளின் மூத்த உறுப்பினரான பாலகுமார், காவல்துறைப் பொறுப்பாளர் (பின்னர் அரசியல்துறைப் பொறுப்பாளர்)நடேசன், நிதிப் பொறுப்பாளர் புகழேந்தி, கடற்புலிகளின் தளபதி சூசை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கேணல் ரமேஷ், போன்றவர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான கஷ்டங்களை அனுபவித்தார்கள், எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள் என்பன பற்றி எதிர்வரும் வாரங்களில் பார்க்க இருக்கின்றோம்.

அதேவேளை தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னி அலம்பில் காடுகளில் அனுபவித்த கஷ்டங்கள், தலைவர் பிரபாகரனைக் குறிவைத்து இந்தியப்படையினர் ஆப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul’ ) ஆப்பரேசன் வீரத் (Operation ‘Viraat’) ஆப்பரேசன் செக்மேட். (Operation Check-mate) என்ற பெயர்களில்; மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றியும், அந்த இராணுவ நடவடிக்கையில் இருந்து தலைவர் எவ்வாறு தன்னையும் தன்னுடன் இருந்த போராளிகளையும் காப்பாற்றினார் என்ற வீர வரலாற்றையும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

தொடரும்…
ஈழம் புகழ் மாறன்.

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.