தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 66

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 66)

பொட்டு அம்மானை கொலை செய்ய திட்டமிட்ட இந்திய படைகள்!

தமிழீழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த முக்கிய தளபதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. பின்னய நாட்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் உலக அரங்கிலும் அதிகம் பிரசித்தி பெற்றுத்திகழ்ந்த சிலர், இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படியான துன்பங்களை, சவால்களை அனுபவிக்க நோந்தது என்று இத்தொடரில் மீட்டு பார்ப்பது நல்லதென்றே நினைக்கின்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து களத்தில் முதலாவது காயமடைந்த போராளி பொட்டு அம்மான் என்று கூறலாம். ஒக்டோபர் 10ம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் இந்தியப் படையினர் விமானங்களில் இருந்த தரையிறங்கமுயன்றபோது, அவர்களது தரையிறக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைக்கு பொட்டுஅம்மான் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். தரையிறங்க ஆரம்பித்த இந்தியப் படையினருக்கும், மைதாணத்தைச் சுற்றிவழைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானபோது முதன்முதலில் காயமடைந்தவர் பொட்டுஅம்மான் அவர்களே. வயிற்றிலும், கமர்கட்டிலும் பாரிய காயங்களுக்கு உள்ளானார். துப்பாக்கி சூடு பட்டு முட்புரித் தசைநார்கள் கிழிந்து போயிருந்தன. காலிலும்

பாதங்களிலும் கூட பயங்கரக் காயம். நிறைய இரத்தம் வெளியேறிவிட்டிருந்தது. காயமடைந்த பொட்டம்மாணை மற்றய போராளிகள் உடனடியாகவே களத்தைவிட்டு நகர்த்தி சிகிட்சைக்காக போராளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்றார்கள். உயிர் பிரிந்துவிடும் நிலையில் ஒரு ஆபத்தான கட்டத்தில் பொட்டம்மான் இருந்தார்.

யாழ் குடாவை இந்தியப் படையினர் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொட்டு அம்மானையும், அவருடன் காயமடைந்து சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த மற்றைய சில போராளிகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவேண்டி ஏற்பட்டது. இந்தியப் படையினர் சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டபடி இருந்தார்கள். வல்வெட்டித்துறையில் புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான கிட்டுவின் தாயார் காயமடைந்த போராளிகளுக்கு அபயம் அளிக்கும் ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார். பொதுவாகவே அக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறைப் பிரதேசம் புலிகளின் ஒரு கோட்டையாகவே இருந்தது. தமிழ் தேசியத்தின் வாஞ்சையை அப்பகுதி மக்கள் மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்தி வந்தார்கள். இந்தியப் படையினருடன் யுத்தம் மூண்டதைத் தொடர்ந்து காயமடைந்த போராளிகளுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரனாகவும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் அமைந்திருந்தது. ‘கிட்டு அம்மா’ என்று போராளிகளால் மிகவும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மூதாட்டியின் கவணிப்பில் பொட்டு அம்மான் ஒப்படைக்கப்பட்டார்.

‘கிட்டு அம்மாவின்’ வீடு ஒரு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. காயமடைந்த பல போராளிகளுக்கு அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டுவந்தது. புலிகளின் மருத்துவக் குழு போராளிகளுக்கு மும்முரமாகச் சிகிட்சை அளித்துக்கொண்டிருந்தது. ஆப்பிரதேசவாசிகள் சந்தர்ப்பவசத்தால் வைத்தியர்களாகவும், தாதிகளாகவும் மாறி போராளிகளின் சிகிட்சைகளுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். தமிழீழத்தின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் அவர்கள் பொட்டம்மானுக்கு சிகிட்சை அளிக்கும் பொறுப்பை ஏற்று சிறிது காலம் செயற்பட்டார்.

பொட்டம்மானுக்கு தான் சிகிட்சை அளித்தது பற்றி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், தான் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ என்னும் நூலில் இவ்வாறு விபரித்திருந்தார்:
“நான் ஒரு மருத்துவத் தாதியாக இருந்த காரணத்தால் எனது உதவி மருத்துவப் போராளிகளின் சுமையை ஓரளவு குறைத்தது. பொட்டுஅம்மாணையும் வேறு சில போராளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். பொட்டு அம்மானின் வயிற்றுப்புண் நன்றாகக் குணமடைந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயம் மட்டும் மாறுவதாக இல்லை. பெரிய கட்டுப் போடவேண்டி இருந்தது. ஆனால் ஊணீர் கசிந்துகொண்டிருந்தது. பெரிய புண்: பயங்கர வலி. உள்ளூர் மருத்துவமனையில் மயக்க மருந்து எடுத்து, அதன் பின்னரே காயங்களைத் துப்பரவுசெய்யவேண்டி இருந்தது. பொட்டு அம்மான் உட்பட கடுங்காயம் அடைந்த போராளிகளை பருத்தித்துறை மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, நானும் உடன் சென்றுவந்தேன்.

வடமாராட்சிப் பிரதேசத்தில் வரவர விமானப்படை நடவடிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. வடமாராட்சி எல்லைகளில் இந்திய காலாட் படையினரின் காவல் உலா அணிகளும், வேவு முயற்சிகளில் ஈடுபட்டுவருவதை அவதாணிக்கமுடிந்தது. இந்திய இராணுவத் தலைமைப்பீடம் தனது கவனத்தை விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் மீது திருப்ப ஆரம்பித்துவிட்டன என்பதையே அவை உணர்த்திற்று. விரைவில் அந்தப் பகுதியில் இந்தியப் படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்போகின்றது என்பது தெளிவாகியது. யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதான வீதி வழியாக இந்தியக் காவல் உலாப் பிரிவு மெதுவாக நகர ஆரம்பித்திருப்பதாக எமது போராளிகள் மோப்பம் பிடித்து அறிவித்திருந்தார்கள். நாம் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அந்தப் பிரதேசத்தை விட்டு நகரவேண்டிய வேளையும், தேவையும் உருவாகிவிட்டதாக உணர்ந்தோம்.”– இவ்வாறு திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் விபரித்திருந்தார்.

வல்வெட்டீத்துறை இந்தியப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து காயமடைந்த போராளிகளையும், படுகாயம் அடைந்திருந்த பொட்டம்மானையும் கரவெட்டிக்குக் கொண்டு சென்றார்கள். வடமாராட்சியின் இதயப் புகுதியான கரவெட்டிக்கு அப்பொழுது இந்தியப் படையினர் வந்து சேரவில்லை. விடுதலைப் புலிகளின் கரவெட்டிப் பிரதேசப் பொறுப்பாளரான மூத்த உறுப்பினர் சுக்ளா கரவெட்டியின் கலட்டி பகுதியில் ஒரு பெரிய வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். பொட்டு அம்மான் உட்பட காயமடைந்த பல போராளிகளை இந்த விட்டில் தங்கவைத்து சிகிட்சை அளித்தார்கள்.
வல்வெட்டித்துறையில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இந்த இடம் அமைந்திருந்தது. அக்காலகட்டத்தில் இந்தியப் படையினரின் நடமாட்டம் பெரும்பாலும் பிரதான வீதிகள் வழியாகவே இருந்ததால், கலட்டி பகுதியில் பொட்டம்மானின் இருப்பிடம் அமைந்திருந்த பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான பிரதேசமாகவே இருந்தது. மருத்துவ சிகிட்சைக்காக பொட்டம்மான் அடிக்கடி மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கரவெட்டியில் இவர்கள் தங்கவைக்கப்பட்ட இடத்திலிருந்து உள் வீதி வழியாக மந்திகைக்கு சென்றுவருவது ஓரளவு பாதுகாப்பானதாக இருந்தது.

படிப்படியான பொட்டம்மானின் காயங்கள் குணமடைய ஆரம்பித்த வேளையில் மற்றொரு ஆபத்து அவரை நோக்கி நகர ஆரம்பித்தது.
பொட்டம்மானும், மற்றய போராளிகளும், புலிகளின் முக்கியஸ்தர்களும் கரவெட்டியில் மறைந்திருக்கும் செய்தி இந்தியப் படையினரின் காதுகளை எட்டியது. அவர்கள் மறைந்திருக்கும் வீடும் வரைபடங்களுடன் இந்தியப் படை அதிகாரிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. ஆந்த வீட்டில் தங்கியிருக்கும் அத்தனை பேரையும் பூண்டோடு அழித்தொழிக்கும் நோக்கத்தில் இந்தியப் படை ஹெலிக்காப்டர்கள் இரண்டு அவசரஅவசரமாகப் புறப்பட்டன. இந்தியக் காலாட் படைப்பிரிவொன்றும் கரவெட்டியைக் குறிவைத்து மிக மூர்க்கமாக முன்னேற ஆரம்பித்தது…

தொடரும்…
ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.