கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு

In தமிழீழ கட்டமைப்புகள்

நீரடி நீச்சல் படையணியின் சாதனை !

” 1995.04.19 அன்று , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் உள்ள கடற்படைத்  தளத்தில் ஊடுருவித்தாக்கி , சிறீலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு அதிவேகப் பீரங்கிப் படகுகளை கடற்கரும்புலிகள் தகர்த்தழித்துள்ளனர். இவ்வெற்றிகரமான தாக்குதலை , விசேட படையணிகளான ” சிலோஜன் ” –  ” அங்கையற்க்கண்ணி ” நீரடி நீச்சல் படையணிகள்தான் மேற்கொண்டுள்ளன. விடுதலைப்ப்புலிகளின் படைவளர்ட்சியில் , மேலே கூறப்பட்ட சம்பவத்தின் ‘ இராணுவப் பரிமாணத்தை ‘ எமது மக்களுக்கு எடுத்து விளக்குவதே , இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு இராணுவ நடவடிக்கையைப் பொருத்தவரையில் அது மேற்கொள்ளப்படும் இடம் , தாக்குதலை நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்த சர்ந்தப்பம் , நடவடிக்கையில் வெற்றியீட்டுவதன் பொருட்டு எம்மால் குறித்த நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் அல்லது பிரயோகிக்கப்படும்  இராணுவவளம் என்பன முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே இவ் வெற்றிகரமான நடவடிக்கையின் பரிமாணத்தை நோக்குவதற்கு , இவற்றைத் தனித்தனியே ஆராய்வதே பொருத்தமாகும்.

தாக்குதல் நடாத்தப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினைப் பொருத்தவரையில் , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையானது முற்றாகத் தமது கட்டுப்பாட்டிலேயே உள்ளதென எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்ற அதே வேளையில் , இங்கு அமைந்துள்ள துறைமுகமானது உலகிலே பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகும். 2 ஆம் உலகப் போர்காலகடடத்தில் , பிரித்தானியா பேரரசின் ‘ றோயல் கடற்படை ‘ யால் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ HMS  Highflyor ‘ எனும் இத்தளம் , 1957 ஒக்ரோபர் 15 ஆம் திகது சிறீலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது. தேவநம்பியதீச மன்னரின் நினைவாக இத்தலத்திற்க்கு சிறீலங்கா கடற்படை ‘ SLNS Tissa  ‘ எனும் பெயரிட்டு , அத்தளத்தை  கிழக்குக் கடற் பிராந்தியத் தலைமையகமாக்கியதுடன் , சிறீலங்கா கடற்படையின் கப்பல்கள் கட்டும் நிறுவனத்தையும் கடற்படையின் பயிற்சிக்கல்லூரியையும் திருகோணமலையில் நிறுவியது. இவ்வாறு அன்று நிறுவப்பட்டவை அனைத்தும் வளர்ச்சியுற்று , சிறீலங்காக் கடற்ப்படையின் நடவடிக்கைகளுக்கான தலைமையகமாக இன்று விளங்குகின்றன. இதனை வேலைத்திட்டங்களாக சிறுரக கடற்படைப் படகுகளைக் கட்டுதல் , சேவையில் ஈடுபடும் கலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல் , கிழக்குப் பிராந்திய கடற் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் , புதிதாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் – சிப்பாய்கள் ஆகியோருக்கான அடிப்படைப் பயிற்சிகள் , துறைசார்ப் பயிற்சிகள் என்பவற்றை வழங்குதல் ஆகியவற்றுடன் , அதிவேகப் பீரங்கிப் படகுகளின் அணி , மற்றும் அதிவேகத் தாக்குதற் படகுகளின் அணி என்பனவும் இங்குதான் நிலைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் இத்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மேலும் , இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது , விடுதலைப் புலிகளின் இராணுவ வரலாற்றில் முக்கிய நிகழ்வேன்றே கூறலாம். அதாவது , இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின்னர் , சந்திரிக்கா அரசுடன் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து , தமது கோரிக்கைகளை அரசு நிறைவேறாத நிலையில் , தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவையும் விதித்தனர். புலிகள் விதித்த காலக்கேடுவினைக் கணக்கெடுக்காமல் இருந்த சந்திரிக்கா அரசுக்கு முதலாவதும் , தெளிவுமானாதும் , வெற்றிகரமானதும் , கரும்புலிகளால் நடாத்தப்பட்டதுமான தாக்குதல் இதுவாகும். எனவே , இத்தாக்குதல்  நிகழ்த்தப்பட்ட சர்ந்தப்பமும் வரலாற்றுப் பதிவாகும்.

அடுத்ததாக , இவ்வெற்றிகரமான தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட இராணுவ வளமானது வியக்கத்தக்க தொன்றாகும். அதாவது 1984 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறுதொகை உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ” கடற்புலிகள் ” எனும் சிறு பிரிவானது வளர்ச்சியுற்று , 1991 இல் , ” விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ” எனப் பெயர் சூட்டப்பட்டு , நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்ட பின்னர் , விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையெல்லாம் கடற்புலிகளின் பங்கு இன்றியமையாதது. அது மட்டுமன்றி , கடற்புலிகள் செயற்படத் தொடங்கி ஓரிரு வருடங்களிலேயே பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு , தமிழீழத்தின் குறிப்பிடக்கூடியளவு கடற் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் ; இதனை எதிரிகளின் இராணுவ ஆய்வாளர்கள் கூட இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் , உலகிலேயே பாரிய கடற்படைகளைக் கொண்டிருக்கும் நாடுகளைத் தவிர , கடர்படையென்ற ஒன்றைக் கொண்டிருக்கும் அனைத்தூச் சின்னஞ்சிறு நாடும்கூட – அவை அளவிலும் ஆற்றலிலும் மட்டுப்படுத்திருந்தபோதும் – ஏதாவதொரு வகையில் தமக்க்கெனவோர் விசேடபடையணிகளை , கடலில் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக உருவாக்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவைகளாக…

* அமெரிக்கக் கடற்படையின் விசேட நடவடிக்கை குழுவான  – ‘ சீல் ‘ ( Seal )

* சோவியத் கடற்படியின் சிறப்புக் குழுவான – ‘ ஸ்பெற்நாஸ் ‘ ( Septsnaz )

* பிரித்தானியக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் – ‘ றோயல் மரீன்கள் ‘ ( Royal Marines )

* கிழக்கு யேர்மனியின் கடற்படை மற்றும் காலாட்படைச்  சிறப்பணியின் – ‘ ஏண்ஸ் மொறிற்ஸ் ஆண்ற் ‘ ( Ernts Moritz Arnd )

* போலந்து நாட்டுக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவான – ‘ லுசிக்கா ‘ ( Luzycka )

* இத்தாலி நாட்டுக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவான – ‘ கம்மா ‘ (கம்மா )

* சுவீடன் நாட்டுக் கடற்படையின் விசேட இடுபணிக் குழுவான – ‘ றேஞ்சர்ஸ் ‘ ( Rangers )

போன்றவை உள்ளன.

இவை யாவும் வல்லரசு நாட்டு கடற்படையணிகளின் சிறப்புநடவடிக்கைக் குழுக்கலாகவுள்ள போதும் , இவர்களனைவரும் சாதாரண நீராடிச் சுழியோடிகளாகவும் செயற்படுகின்றனர். இவ்வாறான விசேட படையணியிலுள்ள உறுப்பினர்களை  ‘ தவளை மனிதர்கள் ‘ ( Frogmen ) என அழைப்பார்கள். மேலே கூறப்பட்ட இவ்விசேட படையணிகளது செயற்பாடானது , 2 ஆம் உலக மகாயுத்தத்தின் வெற்றியினைத் தீர்மானித்ததும் இதுவரை உலகில் இடம்பெற்றவ்றில் பாரிய கடல்தரையிறக்க நடவடிக்கையுமான ‘ நோர்மண்டி தரையிறக்கத்தில் ‘ நேசநாட்டுப் படையணிகளாலும் ; அதன் பின்னர் இடம்பெற்ற பனிப்போர்க் காலத்திலும் ; 1980 இன் ஆரம்பங்களில் இடம்பெற்ற வளைகுடா யுத்தம் , போக்லண்ட் யுத்தம் ஆகியவற்றில் ; 1990 களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ‘ பாலைவனபுயல் ‘ நடவடிக்கைகளிலும் மாபெரும் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தன. இப்பிரிவனர் தமது பிரதான இடுபணியை நிறைவேற்றுவதன் பொருட்டு நீரடி தகர்ப்புக் குழுக்களை ( Underwater Demolition Teams – UDT ) எனும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவர்களது மேலதிக பணிகளாக – எதிரிகளால் தமது பிரதேசத்தினுள் மேற்கொள்ளப்படும் தரையிறக்க நடவடிககிகளின் போது , அவற்றை முறியடிக்க கரையோரப் பிரதேசங்களில் ஊடுருவிப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல் ; எதிரிகளின் கப்பலணிகளின் பின்னால் தொடர்ந்து சென்று எதிரியின் நகர்வுப்பாதைகள் , கப்பல்களின் தொழினுட்பம் பற்றிய வேவுகள் அறிதல் ; தமது பிரதான கடற்கலங்கள் , கடற்தளங்கள் என்பவர்ரியா எதிரியிடமிருந்து பாதுகாத்தல் ; தம்மால் மேற்கொள்ளப்படும் தரையிறக்கம் ஒன்றின்போது தமது துருப்புக்களுக்குப் பாதுகாப்பு வழங்கல் ; எதிரியின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம்  வாய்ந்த பிரதேசத்தினுள் ஊடுருவி , பிரதான இலக்குகள் மீது தீடிர் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் போன்றவையும் அடங்கும். இவ்வாறான தமது பணிகளுக்காக , இவர்கள் நீரடி நீச்சளுக்கான ‘ ஸ்குபா ‘ உபகரணம் , ( Scuba – Single Cylinder Underwater breathing Aparataus ) மற்றும் கடலினுள் பயன்படுத்தப்படும் ‘ ஸ்கூட்டர் ‘ ( Sea Scooter ) மற்றும் காற்றடிக்கும் படகுகள்  ( Baloon Boats ) சிறுரக நீர்முழ்கிகள் ( Midgt Submarines )  நீரடி வாகனங்கள் ( underwater Vehicles ) நீரடியில் பயன்படுத்தப்படும் கைத்துப்பாக்கிகள் ( underwater  Pistol ) என்பவற்றையே பயன்படுத்துகின்றனர்.

இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன்  நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் ”  தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து , இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு , இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும் !

– விடுதலைப்புலிகள் (சித்திரை, 1995) இதழிலிருந்து

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.