ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 15

In ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்

ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்

எனது அனுபவம் 1982-1989 .

தாயக விடுதலை நோக்கிய பயணத்தின் (பகுதி 15)

மரத்தில் காவல் (OP) நின்ற போராளி எம்மைப் பார்த்து கையை அசைத்து வரவேற்றார். சந்தோசத்துடன் உள்ளே போனேன் அங்கு 25க்கும் மேற்பட்ட போராளிகள் இருந்தனர். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். எல்லோரும் சரமும் சேட் மற்றும் டீ.சேட்டும் அணிந்திருந்தனர். எல்லோரும் பெரிய மீசை மற்றும் தாடிகளுடன் இருந்தனர். ஒருவர் கூட நீளக்காற்சட்டை (ஜீன்ஸ்) அணிந்திருக்கவில்லை.

பின் அந்த முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த லெப்,கோணல் வரதன் அண்ணன் என்னை அழைத்து என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்துவிட்டு அந்த முகாமிற்கு மருத்துவப் பொறுப்பாளராக இருந்த மூர்த்தி அண்ணனை அழைத்து என்னையும் என்னுடன் வந்த மற்றவரையும் மருத்துவப் பரிசோதனை செய்யச் சொன்னார். அதன்படி மூர்த்தி அண்ணன் எங்களை பரிசோதனை செய்தார். பின்னர் குளித்துவிட்டு வரும்படி கூறினார்கள். அந்த முகாமிற்கு அருகில் ஒரு சிறிய அருவி இருந்தது அந்த அருவிக்குள் சிறிய கிணறு தோண்டியிருந்தார்கள் அது ஒரு சிறட்டை வடிவில் இருந்தது அதனால் அந்த முகாமிற்குப் பெயர் சிறட்டைக் கிணறு (வேஸ்) முகாம் என்று பெயர் வைத்திருந்தனர். எங்களைக் கூட்டிவந்த போராளிகள் குளித்துவிட்டதால் தண்ணீர் முழுவதும் வற்றியிருந்தது 10 நிமிடம் கழித்துக் குளிக்கச்சொன்னார்கள் நானும் 10 நிமிடம் கழித்துப் பார்த்தேன் கிணறு நிறம்பியிருந்தது. பின் குளித்துவிட்டு உணவுக்காக சமையல் செய்யும் இடத்திற்குப் போனேன் அங்கே எங்களைக் கூட்டிவந்தவர்கள்
சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் நானும் சாப்பிடத் தயாரானேன் அப்போது அன்றைய சமையல் போராளி எனக்கு ஒரு பிளாஸ்டிக் தட்டில் கொஞ்சம் அரிசிக் கஞ்சி தந்தார். எனக்கு அதைப்பார்த்தவுடன் மனதிற்குள் வேதனையுடன் கவலையுமாக இருந்தது. அப்போது அன்றைய சமைக்கும் போராளி என்னிடம் கூறினார் இது காலை மற்றும் மதியத்திற்கும் சேர்த்து உணவு, இனி இரவு உணவுதான் என்றார். நானும் சரியென்று சாப்பிட்டுவிட்டு அந்த முகாமில் ஏற்கனவே உரிலே பழக்கமான 4 போராளிகள் அங்கு இருந்ததால் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவர்களிடம் முகாம் நடைமுறைகள் பற்றி தெரிந்துகொண்டேன். பொறுப்பாளர் உற்பட சகலரும் சென்ரி பார்க்க வேண்டும் மற்றும் சமைக்க வேண்டும் சாமான்கள் தூக்கிவர வேண்டும் என்று கூறினர்கள்.

அந்த முகாமில் 8 கொட்டில்கள் இருந்தது 4 கொட்டில்கள் சுற்றியும், நடுவில் 3 கொட்டில்கள் இருந்தது 1,பொறுப்பாளர் 2,மருத்துவம் 3,களஞ்ச்சியம் 4,சமையல் இந்த வடிவில் அந்த முகாம் அமைந்திருந்தது. கொட்டில்கள் அனைத்தும் கறுப்புப் பொலித்தீன் சீற்றினால் அமைக்கப் பட்டிருந்தது.

பின் மாலை 3 மணியளவில் கந்தளாய் பகுதியிலிருந்து வந்த போராளிகள் 4 புதியவர்களைக் கூட்டிவந்து எங்களுடன் விட்டனர். எங்களுக்கென்று ஒரு புதிய கொட்டில் உடனடியாக அமைத்துத் தந்தனர் புதியவர்களுக்காக. மாலை 6.30 மணிக்கு இரவுச்சாப்பாட்டிற்கு ஒவ்வொருவராக வந்து சாப்பிடும்படி அழைத்தனர். ஓர் இடத்தில் 3 பேருக்கு மேல் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளது. ஏன் எனில் எதிரிகள் எம்மீது தாக்கினால் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு,. இரவுச்சாப்பாடு கோதுமை மாவு பிட்டும் பருப்புக் கறியும் பருப்புக்குள் மான் இறைச்சி வற்றல்போட்டு சமைத்திருந்தார்கள் ஆஹா அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் எங்களுக்குத் தந்த கொட்டிலில் இருந்தோம்.

புதியவர்கள் நாங்கள் மொத்தம் 6 பேர் அன்றிரவு எமக்கு ஒரு கொப்பியும் பேனாவும் தந்து சென்ரி எழுதிப் பார்ப்பது தொடர்பாக பொறுப்பாளர் விளக்கி எதிரிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விபரமாக விளக்கிவிட்டுப் போனார். இரவு 9 மணியிலிருந்து காலை 4.45 மணிவரை சென்ரி பார்க்க வேண்டும். 4.45 மணிக்கு எல்லோரும் எழுந்து (பொசிசனுக்கு) நிலையெடுப்பிற்குப் போக வேண்டும். நிலையெடுப்பு என்பது முகாமைச் சுற்றி எதிரிகள் ஊடுருவாமல் மறைந்திருந்து காவல்காப்பது. காலை 6.30 மணிவரை நாங்களும் அவர்களுடன் சேர்ந்து நிலையெடுப்பில் இருந்தோம். ஏன் என்றால் ஏதிரி அந்த நேரத்தில்தான் எமது முகாமைத் தாக்குவது வழக்கமாம்.
பின் 3 பேர்களாக வந்து முகம் கழுவி அன்றைய சமையல் போராளியிடம் டீ வாங்கி குடித்து விட்டு எமது கொட்டில்களுக்குப் போய் இருந்தோம்.

எங்களுக்கு வந்த முதல்நாளே 2சரம், 1பல்விளக்கும் தூரிகை, பற்பசை, 2சேட், 2உள்ளாடை, 1சோடி பாதணி, 1லைவ்வோய் சவர்க்காரம், என்பன தந்திருந்தார்கள். (வேக்) பை தரவில்லை இல்லாததால் உரப்பையில் எமது உடைமைகளைப் போட்டு வைத்திருந்தோம். ஒருவருக்குத் தந்த பொருட்டளைத் தொலைத்தாலோ அல்லது மற்றவர்கள் மாறி எடுத்தாலோ (பனிஸ்மென்ட்) அதாவது தண்டனை கிடைக்கும்.

7மணியளவில் 2 துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டது ஒரு போராளி வந்து எங்களிடம் நீங்கள் பயப்பட வேண்டாம் எமது போராளிகள் வேட்டைக்குச் சென்றுள்ளனர் அவர்கள்தான் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பின் ஒரு மணிநேரம் கழித்து 80 கிலோ எடையுடைய பெரிய மரை ஒன்றைச் சுட்டு கொண்டு வந்தார்கள். அன்று காலை உணவு இல்லை மதியம்தான் சோறும் மரை இறைச்சிக் கறியும் நன்றாக இருந்தது. எங்கு சமைக்கப் பழகினார்களோ தெரியவில்லை சகல போராளிகளும் மிகவும் அருமையாகச் சமைப்பார்கள். நான் வீட்டில் இருக்கும் போது சமையல் செய்வேன் ஆனால் அவர்களைப்போல் பிட்டு அவிக்க என்னால் முடியாது. பெண்கள் அவர்களிடம் கற்க வேண்டும். அவ்வளவு மெதுமையாக பஞ்சு போன்று பிட்டு அவிப்பார்கள். நீங்கள் நினைப்பதுபோல் குழல் அல்லது நீத்துப் பெட்டியோ இல்லை. பெரிய அன்டாவில் சாக்கை அகலமாக அறுத்து அன்டாவின் வாயில் கட்டி அவிப்பார்கள். ஒரே தடவையில் 10ப் பேருக்கு போதுமான பிட்டு அவிப்பார்கள்.

பகலிலும் ஒருவர் மாறி ஒருவராகக் காவல் சென்ரி பார்க்க வேண்டும். மாலை 6.30க்கு இரவுச்சாப்பாடு பிட்டும் இறைச்சிக் கறியும் சாப்பிட்டோம். போராளிகளில் 10 பேர் உணவுப் பொருட்கள் எடுத்துவர ஏரியாவிற்குப் புறப்பட்டார்கள்..

தொடரும்……
நன்றி.
வே.சுபாஸ் தமிழீழம்

பாகம் 01 பார்வையிட

பாகம் 02 பார்வையிட    

பாகம் 03 பார்வையிட

பாகம் 04 பார்வையிட

பாகம் 05 பார்வையிட

பாகம் 06 பார்வையிட

பாகம் 07 பார்வையிட

பாகம் 08 பார்வையிட

பாகம் 09 பார்வையிட

பாகம் 10 பார்வையிட

பாகம் 11 பார்வையிட

பாகம் 12 பார்வையிட

பாகம் 13 பார்வையிட

பாகம் 14 பார்வையிட

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.