சத்தியாக்கிரகப் போராட்டம்..

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

சத்தியாக்கிரகப் போராட்டம்…!

1958இல் நிகழ்ந்த இனக்கலவர வெறியாட்டம் தமிழ் சிங்கள தேசிய இனங்கள் மத்தியிலான உறவில் ஆழமான பிளவை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசிய உணர்வு எழுச்சிப் பிரவாகம் எடுத்தது. தமிழ் அரசியல் களத்தில் மாபெரும் வெகுசனப் போராட்டங்களாக அது வடிவெடுத்தது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அரசாங்கச் செயலகங்கள் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டங்களை நிகழ்த்தி நேரடிநடவடிக்கையில் குதிக்க 1961 முற்பகுதியில் சமஷ்டிக் கட்சி தீர்மானித்தது.

தமிழரின் தாயக மண்ணில் அரச நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து, ஆட்சியைச் சீர்குலைத்துத் தமிழ் மக்களின் சமஷ்டித் தன்னாட்சிக்கான கோரிக்கையை அரசு ஏற்கும்படி செய்வதே இவ்வெகுசனப் போராட்டத்தின் குறிக்கோளாக இருந்தது.
1961 ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டமானது தமிழரின் தேசியப் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு என்றே கூறவேண்டும். மாபெரும் வெகுசனப் பொங்குணர்வாகவும், அரச ஒடுக்குமுறைக் கொள்கைக்கு எதிரான தேசியப் பேரெழுச்சியாகவும் இப்போராட்டம் அமையப்பெற்றது.

1961 பெப்ரவரி 20 ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஏறத்தாழ மூன்று மாத காலம் வரை நீடித்தது. அடக்கு முறை அரசுக்கு எதிராக தமது ஆத்திரத்தை வெளிக்காட்டும் வகையில் பல்லாயிரம் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் பங்குகொண்டனர். வடக்கு கிழக்கு மாநிலத்தில் இயங்கிய அரச நிர்வாக இயந்திரம் இரண்டு வாரங்களுக்குச் செயலிழந்து முடங்கியது. தமிழர் தாணுகத்தின் சகல பகுதிகளிலும் மத்திய அரசின் ஆணை ஆற்றலிழந்தது. வரலாறு கண்டிராத இம்மகத்தான போராட்ட நிகழ்வு தமிழ் மக்களிடையே மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைந்து போராட உறுதி பூண்டுள்ளார்கள் என்பதற்கும் இது கட்டியம் கூறியது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கப் பிரதான நிர்வாகப் பணிமனையின் முன், பெருந்திரளான மக்களின் குந்து மறியல் போராட்டம் முதலில் தொடங்கியது. விரைவில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய களங்களுக்கும் வேறு நகரங்களுக்கும் போராட்டம் வேகமாகப் பரவியது. தமிழ் பேசும் மக்களில் அனைத்துப் பிரிவினரும், சாதி சமய வேறுபாடின்றி இந்த அமைதிப் பொதுப்போராட்டத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளரும், ஆயிரமாயிரம் பேர் தங்கள் உரிமைப் போராட்டஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த வடக்கிலும் கிழக்கிலும் ஒன்று கூடினார்கள். இந்த மாபெரும் தேசிய எழுச்சி ஊட்டிய உற்சாகத்தில் 1961 ஏப்ரல் 14இல், அஞ்சல் சேவை ஒன்றைச் சமஷ்டிக்கட்சி தொடக்கியது. தமிழ்த் தேசிய அஞ்சல் தலைகள் ஆயிரமாயிரம் வெளியிடப்பட்டன. அரச அதிகாரத்தை மீறுவதாக இந்தச் செயல் அமைந்தது.

தமிழ்த் தேசிய வளர்ச்சியின் வேக அலையும் சட்ட மறுப்புப் போராட்டமும் அரசை ஆட்டம் காணச் செய்தது. அரசின் ஒடுக்குமுறை யந்திரம் துரிதமாக முடுக்கிவிடப்பட்டது. அடக்குமுறை நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அவசரகால அதிகாரங்களுக்கு அமைவான ‘சிறப்புப் பணிப்புரைகளோடு’ பெரும் படையணிகளாக ஆயுதப் படைகள் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணச் சத்தியாகிரகிகள்மீது 1961 ஏப்ரல் 18 வைகறைப் பொழுதில் அரசபடையினர் திடீரெனப் பாய்ந்தனர். துப்பாக்கி முனையாலும் குண்டாந் தடியாலும் குரூரமாகத் தாக்கினர்.

மண்டைகள் உடைந்தன. அவயங்கள் முறிந்தன. சாத்வீகப் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச இராணுவக் காடைத்தனத்தின் விளைவாக நூற்றுக்கணக்கானோருக்குக் கடுங்காயம் ஏற்பட்டது. அவசர காலச்சட்டம், ஊரடங்கு என்ற போர்வையில் தமிழர் தாயகம் முழுவதிலும் இராணுவ பயங்கரவாதம் ஏவப்பட்டது. கடுமையான வன்முறையால் அமைதிப் போராட்டம் அடக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சமஷ்டிக் கட்சிப் பணிமனைகள் அடித்து நொருக்கப்பட்டன.

அரசின் பார்வையில் ‘நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது’. இவ்வாறு ஒடுக்குமுறையாளரின் வன்முறை ஒடுக்கப்பட்டவரின் சாத்வீகத்தை அடக்கி ஒடுக்கியது. சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத பலம் நிதி வேண்டிய தமிழ் மக்களின் ‘அகிம்சையை’ நொருக்கியது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழ்த் தேசியப் போராட்டத்தின் அரசியல் அனுபவத்துக்கு ஒரு தோற்றுவாயாகப் படிந்தது. மனிதநேயப் பண்புகளினதும் நாகரிக நடைமுறைகளினதும் ஒழுக்க சீலங்கள் அனைத்தையும் நிராகரித்து, இனக் காழ்ப்புணர்வில் ஊறிப்போயிருக்கும் கொடிய ஒடுக்குமுறையாளரின் இராணுவ அதிகாரத்தின் முன்னே, தமிழ் மக்கள் வெறுமே சாத்வீக அணுகுமுறையின் தார்மீக

எதிர்த்து நிற்க முடியாது என்ற பாடத்தைக் கற்பித்தது. ஒடுக்குமுறையாளரைப் பொறுத்த வரையிலே இந்த நிகழ்வு அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது. தமிழரின் அரசியல் போராட்டத்துக்கு இராணுவ பயங்கரவாதமே ஒற்றைப் பதிலாகும் என்று அவர்கள் கருதினார்கள். துப்பாக்கி முனையின் முன்னே, தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்தின் சாத்வீக அடித்தளம் பலமற்றது என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) 1965இல் ஆட்சிக்கு வந்தது. பெயரளவில் தேசிய அரசு என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அரசுடன் கூட்டுச்சேர சமஷ்டிக் கட்சி தீர்மானித்தது. சில சலுகைகளைத் தமிழ் மக்களுக்காகப் பெற்று எடுக்க முடியும் என்று அது எதிர்பார்த்தது. தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காண இந்தக் கூட்டுச்சேரல் வழிகோலும் என்று தமிழ்த் தலைமை வீணாக நம்பியது. தமிழ்த் தேசியவாதிகளைக் குளிர்மைப்படுத்தற் பொருட்டுச் சமஷ்டிக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை அமைச்சரவையில் கபடத்தனமாக நியமித்த ஐ.தே.க. அடுத்த ஆண்டில் குறித்த சில அரச அலுவல்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் சில ஒழுங்குப் பிரமாணங்களை நிறைவேற்றியது. மாவட்ட மன்றங்களை நிறுவும் ஏற்பாடுகள் தொடர்பாகச் சமஷ்டிக் கட்சித் தலைவர் எஸ். ஜே.வீ. செல்வநாயகம் அவர்களுக்கும் ஐ.தே.க. தலைவர் டட்லி சேனநாயக்க அவர்களுக்கும் இடையே ஓர் இரகசிய ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

தமிழ் மொழி அமுலாக்கத்திற்கான ஒழுங்குப் பிரமாணங்களோ, பிரதேச மன்றங்களுக்கான அரசியலதிகாரப் பரவலாக்கமோ நிறைவு செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணும் வழிமுறைக்குச் சிங்கள அரசியல் தலைவர்களின் இனவெறிப் போக்குடைய அரசியல் அணுகுமுறை இடமளிக்கவில்லை. சிங்கள தேசத்தின் இனவாத அரசியல் அணுகுமுறையில் மாறி மாறி நிகழும் ஒரு வரலாற்றுப் பாங்காக, மாற்றமுடியாத ஒரு நடைமுறையாக ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். அதாவது, ஆட்சிபீடம் ஏறும் கட்சி, தமிழர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முற்படும் பொழுது, எதிர்க்கட்சியாக விளங்கும் கட்சி
அம்முயற்சியை முறியடிக்கும் வகையில் தமிழ் விரோத உணர்வைத் தூண்டிவிடும்.

இதன்படி, சிங்கள தேசப்பற்றாளர்களாகத் தம்மை இனம்காட்டி, எதிராளிக் கட்சிக்காரரைக் காட்டிலும் தாம் கெட்டிக்காரர் என உயர்த்திக் காட்டி அரசியல் லாபம் தேடும் ஒரு கீழ்த்தரமான அரசியல் நடைமுறையைச் சிங்கள அரசியல் கட்சிகள் மாறி மாறி கடைப்பிடிப்பது ஒரு வரலாற்று நியதியாகிவிட்டது. இத்தகைய அரசியல் பம்மாத்தில் சிக்குண்ட ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்து உடன்படிக்கையைக் கைவிட்டது. ஒத்துழைத்து உரிமை பெறலாம் என்ற சமஷ்டிக் கட்சியின் முயற்சி மீண்டும் ஏமாற்றுப் படலத்தைச் சந்தித்தது. தலைகுனிவோடு சமஷ்டிக் கட்சி அரசுக்கு வழங்கிய ஆதரவை 1968இல் நிறுத்திக்கொண்டது.

அடுத்து வரும் பதிவு : ஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.