விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் – பாகம் 1

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

எழுபதுகளின் ஆரம்ப காலத்தில், சிங்கள இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராகத் தமிழ்த் தீவிரவாத இளைஞர்கள் முன்னெடுத்த வன்முறையானது செம்மையாகத் திட்டமிடப்படாத, ஒன்றோடொன்று தொடர்பற்ற, ஒழுங்கமைவற்ற வன்செயல்களாக அங்குமிங்கும் வெடித்தன. இத்தகைய வன்முறைப் போராட்டத்தில் அதிருப்தியடைந்த இளைஞர்கள், புரட்சிகரமான அரசியல் கோட்பாட்டையும் செயற்பாட்டையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு விடுதலை அமைப்பைத் தேடி அலைந்தார்கள். போராட்ட உணர்வால் குமுறி நிற்கும் தீவரவாதத் தமிழ் இளைஞர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு வெளிப்பாடுகாணும் வகையில் உருப்படியான, புரட்சிகரமான திட்டம் எதுவும் தமிழர் ஐக்கிய முன்னணியிடமோ அன்றி இடதுசாரி இயக்கங்களிடமோ இருக்கவில்லை.

தமிழர் ஐக்கிய முன்னணியைப் பொறுத்தவரையில், அதன் அரசியல் கட்டமைப்பு, பழமைவாதக் கருத்தியலைத் தளமாகக் கொண்டது. எனவே, புரட்சிகர அரசியல் செயற்படுவதற்கான தளத்தை வழங்க அதனால் இயலவில்லை . தமிழ் தேசியத் தலைவர்கள் தமிழரின் இலட்சியத்திற்காக பாடுபடுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தபோதிலும், ஒடுக்கப்படும் தமிழினம் விடுதலை பெறுவதற்காக உருப்படியான அரசியல் திட்டம் எதையும் வகுக்கத் தவறிவிட்டார்கள். இந்த உண்மையை தமிழ் மக்கள், குறிப்பாக போராட்ட உணர்வுடைய தீவிரவாத தமிழ் இளைஞர் ஐயந்திரிபறக் கண்டுகொண்டனர். முடிவடைந்த மூன்று தசாப்தங்களாக, தமிழ் அரசியல்வாதிகள் தாம் அறிந்த அனைத்து வெகுசனப் போராட்ட வடிவங்களை நடத்திப் பார்த்து சலித்துப் போனார்கள். சிங்கள அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்தும் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.

அப்படியிருந்தும் அவர்கள் நாடாளுமன்ற நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருந்து அவ்வப் போது தமது குமைச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பாலைவனத்தில் ஒலித்த சப்தமாக அவர்களது குரலுக்கு எவரும் செவிமடுக்கவில்லை. வெற்றுச் சுவருக்கு வேதாந்தம் ஓதும் நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் அரசியல் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றிக்கொண்டார்கள். அவர்களது அரசியல் சிந்தனை ஆளும் வர்க்கத்தின் கருத்தியலால், அதாவது சிங்கள – பெளத்த பேரினவாதத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. கூட்டுச் சேர்ந்து விட்டுக்கொடுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத் தழுவிக் கொண்ட இடதுசாரிகள், தமிழர்களுக்கு எதிராக அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்தபோது அக்கொடுமையான மெய்நிலையைக் கண்டும் காணாததுபோல பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ்த் தேசியப் போராட்டத்தினது புரட்சிகரமான வரலாற்றுப் புறநிலையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்த் தீவிரவாத இளைஞர்களது அரசியல் அபிலாசைகளின் தார்ப்பரியத்தையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
தமிழ் மாணவர் பேரவை, 1970இல் உருவாகியது. புரட்சிகர அரசியலை அது பரிந்துரைத்தது. மாணவத் தலைவர்கள் போராட்ட வழியைக் கடைப் பிடிக்க வேண்டும் என விதந்துரைத்தது.

அரசின் “தரப்படுத்தல்” என்ற பிரித்து ஒதுக்கும் கல்விக்கொள்கைக்கு எதிராக, மாணவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைப் பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்தது. கருத்தரங்குகள், மாநாடுகளை ஒழுங்கு செய்து; எதிர்ப்புக் குரல்களுக்கான மேடைகளை வழங்கியது. அரச ஒடுக்கு முறைக்கு எதிராக, நடைமுறைச் சாத்தியமானதும் புரட்சிகரமானதுமான ஆயுத எதிர்ப்புப் போராட்ட வடிவத்தையே மாணவர் பேரவைத் தலைவர்கள் மறைமுகமாகத் தூடினார்கள். தாயக விடுதலை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் மாணவர் பேரவையின் வழிகாட்டலையும் தலைமையையும் நாடினார்கள்.

மாணவ பேரவையின் தலைவர்கள் வெறும் வார்த்தை வழிகாட்டலுக்கே லாயக்கானவர்களாக இருந்தார்கள். காரிய சாத்தியமான செயற்திட்டம் ஒன்றைச் செயலளவில் நடைமுறைப்படுத்து வதற்கான தலைமையையோ வழிகாட்டலையோ வழங்க அவர்கள் தயாராக இல்லை. அடக்குமுறை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி வழி நடத்துவதற்கு வேண்டிய அறிவோ துணிச்சலோ அவர்களிடம் இருக்கவில்லை. மாணவர் பேரவைத் தலைமைப் பீடத்தின் கையாலாகாத தன்மையால் ஏமாற்றமடைந்த தீவிரவாத இளைஞர்கள் வன்முறைப் போராட்டங்களைத் தனித்தும் குழுக்களாகவும் தாமே தொடுக்கத் தீர்மானம் பூண்டார்கள்.

இதன் விளைவாக, அங்கிங்கென, தாறுமாறான வன்தாக்குதல்கள் இடம் பெற்றன. அரசியல் படுகொலைகள், குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு, அரச சொத்துடமைகளுக்கு தீ வைத்தல், அரச வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அரச ஆயுதப் படையினர், குறிப்பாக காவல்துறையினர் பதிலடியாகத் தமிழ் இளைஞர்கள் மீது எல்லையற்ற

வன்முறையைப் பிரயோகித்தார்கள். பெரும் அளவில் கைது, வழக்கின்றிச் சிறை, சித்திரவதை, கொலை ஆகியவை நாள்தோறும் நடந்தேறின. தீவிரவாத இளைஞர்களுக்கு உற்சாகமும் தார்மீக ஆதரவும் வழங்கியவர்கள் தமிழ் மாணவர் பேரவையினர் என்பது தெரிந்ததும், பேரவைப் பணிமனைமீது காவல்துறையினர் சோதனை நடத்தி, அதன் தலைவர் சத்தியசீலன் உட்பட ஏனைய தலைவர்களையும் கைது செய்தனர். தாங்கவொணாச் சித்திரவதைக்கு உள்ளான பேரவைத் தலைவர்கள், அரசியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களில் eமுதன்மையானவர்களின் வெகளை ஒப்புவித்திருக்கிறார்கள் காவல் துறையினரின் வேட்டைக்குத் தாம் ஆளாகலாம் என்பது கண்டு, முதல்நிலைத் தீவிரவாதிகளில் முக்கியமானவர்கள் தலைமறைவானார்கள்.

அன்று தலைமறைவாகிய இளம் தீவரவாதப் போராளிகளில் ஒரு அற்புதமான இளைஞரும் இருந்தார். இவர், தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்த ஒரு இளம் மாவீரன். காவல் துறையினரின் தீவிர வேட்டைக்கு இலக்காயிருந்த அந்த இளம் புரட்சிவாதிக்கு அப்பொழுது வயது பதினாறு. அன்றைய காலத்து விடுதலைப் போராளிகளின் வரிசையில் இவரே வயதில் மிக இளையவராவார். இவரே வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழரின் தேச சுதந்திர இயக்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப்போரில் பாதைக்கு அத்திரவாரமிட்ட வரலாற்று நாயகன்.
யாழ்ப்பாண தீபகற்பத்தின் வடகடலோரப் பட்டினமாகிய வல்வெட்டித்துறையில் 1954 நவம்பர் 26ஆம் நாள் பிரபாகரன் பிறந்தார். வரலாற்றின்படி பார்த்தால், தீரமிகு கப்பலோட்டிகளும், துணிச்சல் மிகுந்த கடத்தல் வேட்டைக்காரரும் வாழ்ந்த இடமாக வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. சிங்கள இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராக தீவிரவாத எதிர்ப்புணர்வைக் காட்டுவதிலும் வல்வெட்டித்துறை புகழ்பெற்றது. தாயகப் பற்றும் தேசிய விடுதலை உணர்வும் மிக்க நிகரற்ற சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த புனித மண்ணாக இது விளங்குகிறது.

திருவேங்கடம் வேலுப்பிள்ளை, வல்லிபுரம் பார்வதி தம்பதியாரின் கடைசிப்பிள்ளை பிரபாகரன். இவருக்கு இரண்டு சகோதரிகள். ஒரு சகோதரன். அப்பா ஓர் அரசாங்க ஊழியர். மாவட்ட காணி அதிகாரி. அப்பழுக்கற்ற நடத்தை. இனிமையான சுபாவம். மென்மையான போக்கு, அவதிப்பட்டோருக்கு ஓடிச் சென்று உதவும் பாங்கு, ஊரிலும் உலகிலும் பிரபாகரனின் அப்பாவுக்கு நல்ல மதிப்பு.
இளம்பிராயத்தில் மிகுந்த நுண்ணறிவும் விழிப்புணர்வும் கொண்டிருந்த பிரபாகரன், தனது மக்கள் வாழ்ந்த அடக்குமுறையான சூழ்நிலையையும் அவர்கள் அனுபவித்துவந்த ஆழமான துன்ப துயரங்களையும் உணர்ந்து கொண்டார்.

இன ஒடுக்குமுறையின் கோரமான தன்மையையும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மிருகத்தனமான தன்மையையும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மிருகத்தனமான அட்டூழியங்களையும் சிறுபிராயத்திலிருந்தே பல வழிகளில் – தனது குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கிராமத்து முதியவர்கள் ஆகியோரிடமிருந்து அறிந்து கொண்டார். அப்பாவித் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வதைகளையும் கொடுமைகளையும் கேட்டறிந்தபோது இளம் பிரபாகரனின் இதயத்தில் வெஞ்சினம் பொங்கியது. ஒடுக்கப்பட்ட தனது மக்கள் வாய் மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இக்கொடுமைகளை அனுபவிக்காது, அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடவேண்டுமென்று பிரபாகரன் எண்ணினார்.

அடுத்து வரும் பதிவு : விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பாகம் 2

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.