லெப். கேணல் பொன்னம்மான்

In வீரத்தளபதிகள்

லெப். கேணல் பொன்னம்மான்

1983ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எம்முடைய இயக்கத்தில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை நல்வழிப்படுத்தி, சாதாரண சராசரி இளைஞர்களுக்கே உரிய இளமைத்தனத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை புரட்சியாளர்களாக்கி, உலகமே வியக்கக்கூடிய கெரில்லா வீரர்களாக உருவாக்கிய பெருமையின் பெரும் பகுதிக்கு உரியவன் பொன்னம்மான் என்றால் மிகையாகாது.

ஏறத்தாழ மூவாயிரம் வீரர்களை உருவாக்கினான். அதாவது மூவாயிரம் வீரர்களுக்கு பயிற்சியளித்தான் என்றும் சொல்லலாம் பயிற்சியளிப்பதை விட புரட்சி வீரனை உருவாக்குவது என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. வெறுமனே ஆயுதப் பயிற்சி மட்டும் நல்ல புரட்சியாளனை உருவாக்கப் போதுமானது அல்ல என்பதை பொன்னம்மான் அடிக்கடி எடுத்துச் சொல்வான்.

வெறுமனே பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளனாக மட்டுமல்லாமல் அனைத்துத் தோழர்களுக்கும் ‘தாயாகி நல்ல உறவாகி வாழ்ந்தான், எனவேதான் எல்லோராலும் ‘அம்மான்’ என்று அழைக்கப்பட்டான்.

எமது பயிற்சிக் குழுவுக்கு பொறுப்பாளராக இருந்த வேளையிலேயே, எமக்கு வேண்டிய ஆயுதங்களை நாமே செய்துகொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட்டு அதற்கென்று ஓர் தனிப்பிரிவை உருவாக்கி, கைகுண்டுகளை ஏராளமாகத் தயாரித்தான்.

அம்மானுடைய அந்த கைக்குண்டுகள் தயாரிக்கும் முயற்சியில் அவனடைந்த அனுபவங்கள் எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் நவீன கைக்குண்டுகளுக்கு நிகராக அவனுடைய தயாரிப்புக்கள் இருந்தன. அதைவிடவும் தானாகவே ஓர் புதிய வடிவத்தையும் உருவாக்கினான். அம்மான் வெடிமருந்துத்துறையிலும் சிறந்து விளங்கினான். என்றால் மிகையாகாது. தமிழர்களை சிங்களவர்கள் பொதுவாக ‘பனங்கொட்டை’ என்று கேலி செய்வது பல காலத்து வழக்கம். எனவே பனங்கொட்டையைப் போன்ற அமைப்பிலேயே தன்னுடைய கைக்குண்டுகளை தயாரித்தான். என்னிடம் பல தடவைகள் கூறி இருக்கின்றான். “மச்சான் பனங்கொட்டை என்று எம்மை இழிவு செய்தவர்கள் பனங்கொட்டையைக் கண்டாலே பயப்படவேண்டும் எனவேதான் இந்த வடிவத்தை உருவாக்கினேன்” என்றான்.

நான் இயக்கத்தில் சேர்ந்து சில மாதங்களில் அம்மானும் சேர்ந்தான். நான் இயக்கத்தில் சேர்ந்தவுடன், இயக்கத்தால் நடத்தப்படும் விவசாய பண்ணைக்கு அனுப்பப்பட்டேன். அங்கிருக்கும் போதுதான் அம்மான் இயக்கத்தில் சேர்ந்தான். அம்மான் எப்போதும் கலகலப்புடன் காணப்படுவான். அது அவனுடைய தனி இயல்பு என்றே கூறலாம்.

சில சமயங்களில் சினிமாக்களில் தோன்றும் நகைச்சுவை பாத்திரம் போன்று விளங்குவான். தான் மட்டும்மல்ல தன்னை சூழ உள்ளவர்களையும், எப்போதும் சிரிக்கவைத்து கொண்டிருப்பதே அவனுடைய பொழுதுபோக்கு, சத்தியமாகச் சொல்கின்றேன் அவன் இருக்கும் இடத்தில் எப்போதும், எப்படியோ ஓர் சிரிப்புடனான சூழ்நிலையயே உருவாக்கி வந்தான்.

விவசாயப் பண்ணையில் ஏறத்தாழ ஒருவருட காலம் சேர்ந்து பணியாற்றினோம். வுpவசாயம் செய்துதான் நாம் எம்முடைய தேவைகளைப் பெறவேண்டியிருந்தது. விவசாய பண்ணைகளில் எப்போதும் கடுமையாக உழைப்போம். உழைத்து சோர்ந்த மாலை வேளைகளில் பொன் அம்மான் தினமும் பாட்டுப்பாடுவான். அம்மானின் தாயார் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். அம்மான் சங்கீதம் கற்றிராவிட்டாலும் நல்லாகவே பாடுவான். பாடல் மட்டுமல்ல பாடிக்கொண்டே நடித்துக்காட்டி சிரிப்புக்காட்டி ஒரு அட்டகாசமே செய்துவிடுவான்.

நானும் அம்மானும் தனித்திருக்கும் வேளைகளில் எம்முடைய விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தைப்பற்றி விவாதிப்போம். கற்பனைகள் கூட செய்வோம். அதுமட்டுமல்ல எமது எதிர்கால நடவடிக்கையிட்டு, சச்சரவு கூட பட்டுக்கொள்வோம். நாம் எமக்குத் தேவையான ஆயுதங்களை நாமாகவே தயாரிக்க வேண்டும் என்பதை பல காலம் சிந்தித்துவந்தோம். 1976ம் ஆண்டு அப்பையா அண்ணன், பொன் அம்மான், அன்ரன், ஆகியோருடன் நானும் சேர்ந்து கைக்குண்டுகள் தயாரிக்கத் தொடங்கினோம். பலத்த இராணுவக் கெடுபிடிகளுக்கு நடுவில் ஓர் மறைவிடத்தில் எமது தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இரும்பை உருக்கி வார்க்கக்கூடிய வசதி அச்சமயம் எம்மிடம் இல்லை. எனவே அலுமினியத்தினாலான கைக்குண்டுகளை உருவாக்கி வார்த்தோம்.

நால்வரும் மிகவும் பெருத்த சிரமத்தின் மத்தியில், முன் அனுபவம் எதுவுமில்லாமலேயே ஓரளவு எமது தேவையை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் கைக்குண்டுகளை உற்பத்தி செய்தோம். பின்பு பல இடைஞ்சல்களால் அந்த வேலைத்தளம் மூடப்பட வேண்டி வந்துவிட்டது. ஆனால் அன்றைய அந்த முயற்சியே நாம் பின்பு உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது உற்பத்திகளை உருவாக்குவதற்கு வழிகோலியது எனலாம். பிற்காலத்தில் பொன் அம்மான் ர்நு – 36 போன்ற கைக் குண்டுகளை மிகவும் நேர்த்தியாக மிகப் பெரிய தொகையில் உருவாக்;கினான். அன்ரன், கிளைமோர், பண்டிக்குட்டி போன்ற நவீன வெடிகளை உருவாக்கினார்.

நானும் அப்பையா அண்ணாவும், மிகவும் சக்திவாய்ந்த பெரிய மோட்டார்களையும், குண்டுகளையும் தயாரித்தோம். இப்படியாக ஆரம்ப காலத்தில் இருந்தே எமது போராட்ட பணிகளை உறுதியாக முன்னெடுத்து வந்தோம்.

1983ம் ஆண்டுக்கு பின் பொன்னம்மான், இயக்கத்தின் பயிற்சி குழுவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபின், நான் யாழ். மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றியதால் இருவருக்கும் உறவாடக்கூடிய சூழ்நிலை ஏற்;படவில்லை. சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான எமது வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதணை படைத்தவன் பொன்னம்மான்.

1986ம் ஆண்;டின் பிற்பகுதியில் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டோம். அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவமுகாம் மீது தாக்குதலை நடத்த நானும் என்னுடைய தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். இராணுவ முகாம் மிகவும் பலம்பொருந்திய வெளிஅமைப்பைக் கொண்டிருந்தது. இராணுவ முகாமில் ஒருபக்கம் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அது கடல்நீர் உள்வாங்கிய பகுதி, சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப்பிரதேசம் வெட்டைவெளி. நாம் அப்பகுதியை கடந்து இராணுவமுகாமை அணுகுவது மிகவும் கடினம். அதைவிடவும், இராணுவ முகாமைச்சுற்றி நன்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக்கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டும் அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாக திட்டத்தை உருவாக்கினோம்.

தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப்போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து. அதன் (கீழ்) அரைவாசிப் பகுதிக்கு வெடிமருந்தை நிரப்பி, மேலே அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, நாம் திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து, நாம் உட்புகுவது என்பது எமது திட்டம்.

பழயை வண்டியைப் போல் ஓர புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்ரமான விடயம். அதிலும் அந்த மதிகெட்ட பவுசர் எங்கோ ஓரு இடத்தில் விபத்துக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. எனவே நாம் செய்யும் வண்டியும் வாயில் காவல்களைத் தாண்டிச்செல்ல வேண்டி இருந்ததால் அதே போல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் எமது வண்டியை மிக சிரமத்திற்குப் பின் உருவாக்கினோம். புதிதாக மை பூசிய எமது பவுசரை பழைய பவுசரைப்போல் உருமாற்றம் செய்ய வேண்டும். ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதி கூட எமது பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல்பகுதியில் தண்ணீர் நிரப்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தோம். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக்கொண்டார். இம் முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் என் அருமைத் தோழன் கேடில்ஸ்தான். அவன் சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பாளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவு பகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்கு துணையாக ரஞ்சன் எனும் பொறியிலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட மிகுந்த மதி நுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை எம்முடனேயே இணைத்துக்கொண்டவர்.

14.02.1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் எமக்கு மிகவும் உசிதமானவை ஏன் என்றால் தாக்குதல் தொடங்கியதும் இராணுவ ஹெலிகொப்ரர்களும், குண்டுவீச்சு விமானங்களும் தகவல் கிடைத்து எம்மைத் தாக்கத் தொடங்கும். பகல் வேளையானால் மேலிருந்து கண்டு பிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பி.ப 6.30 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசிச் சர்ந்தப்பத்தை தேர்ந்தெடுத்தோம். 6.30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் எமக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். முதல் நாள் இரவு, இரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். “ஜெல்டினின்” நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. நான் பார்க்கும்போது மூவரும் சோர்ந்து காணப்பட்டனர். விடியும்போது பவுசர் வெடிமருந்து இணைக்கப்பட்டு தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கிவிட்டான். வாசுவும் நானும் வந்து தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை இணைத்துக்கொண்டிருந்தோம். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக்கொண்டே உட்புகுவார்கள். லொறியின் முன் புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பான் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல் அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகல் நெருங்கிக்கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத்தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான் தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வோக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடத்தை தெரிந்தெடுத்து அதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

நான் ஜந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்துகொண்டிருந்தேன். நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக்கொண்டிருக்கையில், மிகப்பெரிய சத்தத்தை தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு சற்றும் புரியவில்லை. நேரத்தை பார்த்தேன், சரியாக 5.30 ஆனால் நாம் 6.30க்கு தான் வெடிக்க வைப்பதாக இருந்தது. எனவே பொன்னம்மானை பல தடைவ வோக்கியில் கூப்பிட்டேன், கேடில்ஸ்சைக் கூப்பிட்டேன், வாசுவைக் கூப்பிட்டேன் பதில் இல்லை, பல தடவைகள் அழைத்தேன். பதில் இல்லை, ஜொனியை அழைத்தேன் பதில் வந்தது. என்னிடம் அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினேன்.

ஜொனி என்னை அழைத்தான், அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். ஒரு பெரிய குழி, அதற்கருகில் கேடில்ஸ்சினுடைய கார் நொருங்கிபோய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஜந்து தோழர்கள் இறந்துகிடந்தார்கள். ஆம் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதை பொன்னம்மான் கேடில்ஸ்சுக்கும் வாசுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். இன்னும் சிலர் தந்த தகவல்படி அவர்கள் அந்தத் துவாரத்தை ஒட்டுவதற்கு மின்சார இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது. ஆனால் அங்கு நடந்தது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அந்தக்கடைசி சர்ந்தப்பத்தில் அங்கிருந்த எவரும் உயிருடன் இல்லை. எல்லோரையும் தேடினோம். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடிய வகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்துவிட்டார். அந்தத் தவறு எப்படி நேர்ந்தது, விடை கிடைக்கவில்லை. இன்றும் கிடைக்கவில்லை இனி எப்போதும் கிடைக்கப்போவதுமில்லை.

நினைவுப்பகிர்வு: மூத்த தளபதி கேணல் கிட்டு.
நன்றி – சூரியப்புதல்வர்கள் 2004

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.