இவர்கள்தான் தேவதைகள்
அழகாய்ப்பிறந்தவர்கள்தான் தேவதைகளல்ல
அறிவில் சிறந்தவர்கள்தான்
தேவதைகளல்ல
இவர்கள்
வித்தியாசமான தேவதைகள்.
நீங்கள் எதிர்பார்க்கின்ற
தேவதைகளைவிட
எடுப்பானவர்கள்
நீங்கள் விரும்புகின்ற
தேவதைகளைவிட
மிடுக்கானவர்கள்
உலகின் எங்கெங்கும்
பெண்கள்
பல தேவைகளுக்காக
போராடினார்கள்,
ஈழதேசத்தில்தான்
பெண் தேவதைகள்
மான ரோசத்திற்காக
போராடினார்கள்
மண்ணிண் விடுதலைக்காக போராடினார்கள்
தம் தேவைகளை
மறைத்த தேவதைகள்
தாய் தேசத்திற்காய்
உயிர்கொடுத்த தேவதைகள்
தேவதைகள்
தினம் என்றால் அது
என் தேசப்பெண்களுக்கே
உரித்தாகும் என்பேன்
நான் என்தேசத்திற்காக
போராடிய பெண்களையே
என் தேவதைகள் என்பேன்.
த.யாளன்