வேகத்தில் வீரத்தை கும்மியடி…..!
கும்மியடி பெண்ணே கும்மியடி
குனிந்து நிமிர்ந்துமே கும்மியடி
மாண்ட வீரனை வாழ்த்தி எங்கள்
மண் புகழ் ஓங்கிட கும்மியடி
(கும்மியடி பெண்ணே கும்மியடி.)
வீரத்தை வாழ்த்திட வாருங்கடி
வெங்கள வேகத்தை கூறுங்கடி
எம் தமிழ் தாகத்தை போற்றுங்கடி
துயிலறை வீரத்தை வாழ்த்துங்கடி
(கும்மியடி பெண்ணே கும்மியடி..)
வேகத்தை கொண்ட எம் வீரம் ஒன்று
வேல் வழி நாடிய தாகம் ஒன்று
மோகத்தில் வீழா புயலும் ஒன்று
யாகத்தை செய்யும் தலையும் ஒன்று
(கும்மியடி பெண்ணே கும்மியடி..)
காந்தளே பூத்திடும் கார்த்திகையில்
கல்லறை விழித்திடும் கார்த்திகையில்
தேசமே அழுவதும் கார்த்திகையில்
வேகமே கொள்வதும் கார்த்திகையில்
(கும்மியடி பெண்ணே கும்மியடி..)
ஆயிரம் வேங்கையை வாழ்த்துங்கடி
மாண்ட எம் வீரத்தை பாடுங்கடி
ஆண்ட பரம்பரை நாங்களடி
மீண்டும் ஒரு முறை கூறுங்கடி
(கும்மியடி பெண்ணே கும்மியடி…)
கார்த்திகை மாதமே வாருங்கடி
கல்லறை தீபத்தை ஏற்றுங்கடி
காவிய கனவினை போற்றுங்கடி
அவர் கண்ட தேசத்தில் ஆடுங்கடி
(கும்மியடி பெண்ணே கும்மியடி..)
…கவிப்புயல் சரண்…