நவாலி படுகொலை….!

In ஈழப்படுகொலைகள்

இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை

1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்த னர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன் னேற முயன்ற பகுதிகளில் விமானப் படை யினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலி ருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங் களுக்கு நகரத் தொடங்கினர்.

அந்த விதத்தில் தமது சொந்த இடங் களை விட்டு வெளியேறிய மக்களில் ஒரு பெரும் தொகையினர் நவாலி சென்.பீற் றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். அன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்தத் தேவாலயத்தை இலக்கு வைத்து விமானப் படையினரின் புக்காறா விமானங் கள் மேற்கொண்ட விமானக்குண்டுத் தாக்கு தலில் அங்கு தங்கியிருந்த 65 பொதுமக் கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் (09.07.2018) இன்றாகும். வரலாற் றில் அந்த இரத்தக்கறை படிந்த நாளின் துன்ப, துயரங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றைய வேளையில் (09.07.1995) ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆட்சியாளர் களாலும் பாதுகாப்புப் பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை இதுவா கும். மூன்று குண்டு வீச்சு விமானங்கள் ஒரே நேரத்தில் இந்த கோர தாக்குதலை மேற்கெண்டன.

குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலையி லிருந்து பலாலி இராணுவ முகாமிலிருந் தும் அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளி லிருந்தும் ஊர்மனை நோக்கி நாலாபுற மும் ஷெல் பீரங்கி தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன.

திடீரென வலிகாமம் தென்மேற்கு, வலி. மேற்கு, வலி.தெற்கு பகுதிகளில் உள்ள மக் கள் குடியிருப்புகளை நோக்கி காலை 5.40 மணியளவில் இருந்து மும் முனைத் தாக்கு தல் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதி யில் உள்ள மக்கள் உடுத்த உடைகளு டனும் கையில் அகப்பட்ட உடைகளுட னும் கண்ணீரும் கம்பலையுமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

மாட்டுவண்டிகளிலும் சைக்கிள்களி லும் கால்நடையாகவும் லான்ட் மாஸ்ரர் களிலும் வட்டுக்கோட்டை, சங்கரத்தை, வளுக்கையாற்றுவெளி, நவாலி வீதி, நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி, சங்குவேலி, கட்டுடை மானிப்பாய் பிர தான வீதி வழியாக அவர்கள் சென்றனர். அவ்வேளையில் சகல வீதிகளிலும் எறி கணை தாக்குதல், ஹெலி தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. வீதிக்கு வீதி சடலங்கள், காயமடைந்த வர்களை எடுத்துச்செல்லக்கூடிய அள விற்கு வாகன வசதிகளோ, மருந்தகங்களோ, வைத்தியசாலைகளோ இருக்கவில்லை. யாவும் செயலிழந்துவிட்ட அவலநிலை.

காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி, முதலுதவிச்சிகிச்சையின்றி, இரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்த அந்த நாளைய நிலைமையை இலேசில் மறந்து விடமுடியாது.

அன்றைய தினம் தமது சொந்த இடங் களைவிட்டு வெளியேறி குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக மக்கள் திரள் திரளாக நவாலி சென்.பீற்றர் தேவாலயத் திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் களைப்படைந்த நிலையில் தஞ்சமடைந்தனர்.

அவ்வேளையில் விமானம் மூலம் 13 குண்டுகள் தொடர்ச்சியாக மக்கள் குவிந்தி ருந்த இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. சில கணங்களில் எங்கும் “ஐயோ’ என்ற அவலக் குரல்கள் அப்பகுதியை அதிர வைத்தன. விமானக் குண்டு வீச்சுக் கார ணமாக 65 பேர் உடல் சிதறி கையிழந்து கால் இழந்து தலையிழந்து குற்றுயிராக கிடந்த கொடூரக்காட்சி இன்றும் மறக்க முடியாததாகும். இந்தக் கொடூர சம்பவத்தில் 65 பேர் உடல் சிதறி பலியானதுடன் பெரும் எண்ணிக்கையானோர் ஊனமானார்கள்.

இத்தாக்குதல் சம்பவத்தின் நினைவாக நவாலி வடக்கு புலவர் வீதியிலும், நவாலி புனித பேதுறுவானவர் வீதியிலும் நினைவு சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.