தேசத்தின் பன்முக ஆளுமை…
அண்ணனின் விஞ்ஞானி!
தேசத்தின் செயல்ஞானி!
விடுதலையின் உயிர்ஞானி!
எதையும் முடிக்கும் அஞ்ஞானி!
சற்றும் ஓய்ந்திடாத புயல்!
அறிவில் இவன் ஓர் கடல்!
ஈழத்துக்கே இவன் தேடல்!
படைத்திடுவான் புது சரிதம் !
தலைவனுக்கே இவன் புகழ்!
ஆளுமையில் இவன் ஓர் வீரம்!
முடியாது என்பதே கிடையாது!
முடிக்காமல் தூக்கமும் கிடையாது!
தமிழீழத்தில் ஓர் தனித்துவம்!
நிர்வாகத்தில் சிறந்த ஆற்றல்!
படையிலும் இவனது ஆக்கம்!
கடலிலும் இருக்கும் இவன் சீற்றம்!
கரியபுலிகளின் தொழில் நுட்பம்!
உலகத்தையே மீறிய மதிநுட்பம்!
வெளியே தெரியாத பெரும் வீரம்!
தானை தலைவனே இவன் சுவாசம்!
தமிழீழம் மீட்பதே இவன் எண்ணம்!
பெண்கள் புரட்சியும் இவனின் ஆக்கம்!
கடுமையாகுமே இவன் உருவாக்கும்!
பகை கலங்குமே இவன் செயல் கண்டு!
ஜொனி வெடியிலும் இவனின் ஊக்கம்!
பசீலன் குண்டிலும் இவனது ஆக்கம்!
எக்குண்டிலும் இவன் உருவாக்கம்!
கிட்டு பீரங்கியும் பெரும் தோற்றம்!
எத்திட்டத்திலும் கூடவே இருப்பான்!
மதியால் வெல்ல மாற்று வழியமைப்பான்!
இரகசியமாய் காயும் நகர்த்துவான்!
பகை வென்றிட வழியும் சமைப்பான்!
சிந்தையில் புது களம் அமைப்பான்!
உறங்கையிலும் விழித்தே இருப்பான்!
தனித்துவமாய் திட்டம் வகுப்பான்!
தயக்கம் இன்றி பகை அழிப்பான்!
வரலாற்று வரிகள்,
ஈழம் வாகீசன்.