தமிழீழ நீதித்துறை

In தமிழீழ கட்டமைப்புகள்

தமிழீழ நீதித்துறை…!

புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை , இந்த ஒகட்ஸ் மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கத் தொடங்குகின்றன. ( ஆடி 1993 எழுதப்பட்டது ) தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடிக் கடிக்கன்காணிப்பின் கீழ் இந்த நீதி – நிர்வாக அமைப்பு செயற்படும்.

முதலில் சுன்னாகத்தில் அமைக்கப்படும் நீதிமன்றுடன் ஆரம்பிக்கப்படும் நீதி பரிபாலனம் பருத்தித்துறை , சாவகச்சேரி , நல்லூர் என விரிவாக்கப்பட்டு பின்னர் வன்னி , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த நீதிமன்றங்களின் நடைமுறைகள் மற்றும் நீதி நிர்வாகத்தை பரிபாலனம் செய்யும் சட்டவிதிகளுக்குள்ப்பட்ட ஒரு நீதிமன்றச் சட்டக்கோவை தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ளதைப் போன்றே தமிழீழத்தின் நீதிபரிபாலனத்துக்குரிய சட்டவாக்கமும் அமைந்துள்ளது. ஆயினும் சமூக முன்னேற்றத்தையும் மனித சமத்துவத்தையும் நிராகரிக்கும் சாதியம் – பெண்ணொடுக்குமுறை சம்மந்தப்பட்ட பிற்போக்குத் தனமான சமூக மரபைக் களைந்து , பாரபட்சமற்ற உன்னத சமூக அமைப்பொன்றைக் கட்டி எழுப்பும் இலட்சியத்தில் இச்சடடவாக்கம் அதிக சிரத்தை காட்டியுள்ளது. அதேபோல ஊழல் , ஏமாற்று , மோசடி , போதைவஸ்து போன்ற சமூக விரோதச் செயல்களையும் கடுமையாகக் கையாளும் வகையில் இச்சட்டவாக்கம் அமைந்துள்ளது.

” பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விரைவாகவும் இலகுவாகவும். அதேவேளை அதைக் பொருட்செலவுக்களுமின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதால்தான் ” தமிழீழ நீதிமன்ற அமைப்பின் பிரதான நோக்கம் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரும்கூட சிங்கள இனவாத அரசின் நீதிபரிபாலனமானது அராஜகம் வாய்ந்ததும் , சமூக அநீதிகள் மலிந்தது , தமிழ் இன விரோதம் நிறைந்ததுமான ஒரு அமைப்பாகவே இருந்தது. விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியதும் தமிழ் இனப் படுகொலையை அங்கீகரித்து – நியாயப்படுத்தும் ஒரு நிறுவனமாகவே சிறீலங்காவின் நிதிபரிபாலனம் மாறியது.

அதேவேளை ஆயுதப்போராட்டம் தீவிரமடையத் தொடங்கியபின் விடுதலைக்கெனப் புறப்பட்ட பல ஆயுதக் குழுக்களின் அராஜகங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டது.

இந்த அராஜகக்கும்பல்களை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து , இவர்களால் தமிழ் மக்கள் சந்தித்துவந்த துன்பதுயரங்களுக்கு ஒரு முடிவுகண்டு , தமிழீழ விடுதலைப் போராடத்தில் ஒரு சாதாகமான சூழலை புலிகள் இயக்கம் உருவாக்கிக்கொண்டிருந்தபோதே , இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.

இந்திய ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் தமிழீழத்தில் ஒரு காட்டுத் தர்பாரே நடந்தது. இந்தியப் படைகளின் அட்டூழியங்கள் ஒருபுறம் ; அதன் கூலிப்படைகளாகச் செயற்ப்பட்ட தமில்க்குழுக்களின் அடாவடித் தனம் இன்னொருபுறம் ; சிங்களப்படைகளின் இனவெறி மருபுரமாக் தமிழீழ மக்கள் பெரும் இன்னல்களையும் – நெருக்கடிகளையும் சந்தித்தனர்.

ஆனால் இந்தியப் படை வெளியேற்றப்பட்டது வடதமிழீழத்தின் பெரும்பகுதி புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட்டது. விடுவிக்கப்பட்ட இப்பகுதிகளில் சிவில் நிருவாகத்தை ஏற்படுத்த புலிகள் இயக்கம் முயன்றது.

பாராபட்சமற்ற – சமூக அநீதிகள் களையப்பட்ட – ஒரு நீதி நிருவாகம் மெதுவாகச் செயற்படத் தொடங்கியது.

ஆரம்பத்தில் புலிகளின் அரசியல் பிரிவினர் மக்களின் பிரசினைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிசெய்தனர்.

பின்னர் , தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்ப்பெரியவர்களின் சபையிடம் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கபட்டது.

அதன் பின் இணக்கமன்றுகள் உருவாக்கப்பட்டு பிரசினைகள் சமூகமான முறையில் தீர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் இந்த மக்கள் மன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு இல்லாததால் , வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் கூட கணிசமான அளவில் செயற்படாமல் கிடந்தன.

ஆனால் தமிழீழ காவற்துறையின் தோற்றத்தை அடுத்து , அது சட்டம் ஒழுங்கைப் பேணத்தொடங்கியவுடன் , நீதிநிருவாகமும் நடைமுறை வசதிகருதி தர்காலகமாக காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது தமிழீழத்தில் நீதிபரிபாலனத்திற்கென ஒரு சட்டக் கோவை வரையப்பட்டு , அதன் அடிப்படையில் தமிழீழ நீதிமன்றங்களும் செயற்பட இருக்கின்றன. தமிழீழ நீதிமன்றங்களின் உருவாக்கம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஆகும்.

இந்த வரலாற்றுச் சம்பவத்துடன் தமிழீழத்தின் நீதிபரிபாலனமானது ஒரு செம்மையான வடிவத்தைப் பெற்றுவிட்டது எனலாம். இனி இது வளர்ந்து ஒரு முழுமையான வடிவத்தில் நீதிபரிபாலனம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இனிமேல் நீதிமன்ற சட்டக்கோவையின் அடிப்படையில் , எந்தவித பாரபட்சமும் இல்லாமல் , கூடிய விரைவில் பாதிக்கபட்டவர்கள் நீதியைப் பெற இந்த நீதிமன்ற நடைமுறை வழிகோலியுள்ளது.

குற்றவியல் சம்மந்தப்பட்ட வழக்குகளை காவற்துறையிடம் முறையிட வேண்டும். காவற்துறை உரியமுறையில் அந்த வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யும். மற்றைய சாதாரண சிவில் வழக்குகளை நேரடியாகவே நீதிமன்றில் தொடர முடியும். அதேவேளை ஒரு குற்றச் செயல் தொடர்பாக ஒருவரை காவற்துறை கைதுசெய்தால் , அந்த சந்தேகநபர் 48 மணித்தியாலயத்திக்குள் நீதிமன்றில்ஆஜர்செய்யப்படுவார். மேல் விசாரணைக்காக அவரைத் தடுத்துவைக்கவேண்டும் எனக் காவற்துறை விரும்பினால் , அதற்குரிய அனுமதியை நீதிமன்றில் பெற வேண்டும்.

மனுகாரரோ அல்லது எதிர் மனுதாரரோ தனக்காகத் தானே ஆஜராகி வாதாட முடியும். அப்படி வாதாடமுடியாத ஒருவர் , தனக்காக ஒரு சட்டத்தரணியை அமர்த்திக்கொள்ளலாம் , அதேவேளை , சிறீலங்கா நீதிமன்ற நடைமுறைகளைப் போல சட்டத்தரணியை அமர்த்தும் ஒருவர் தனிப்பட்டமுரையிலோ , இரகசியமாகவோ பணக்கொடுப்பனவுகளைச் செய்ய முடியாது நீதிமன்ற நிருவாகத்தின் மூலமே சட்டத்தரணிக்குரிய பணத்தைச் செலுத்தமுடியும். பணத்தின் தொகை எவ்வளவு என்பதை நீதிமன்ற நிருவாகமே நிர்ணயிக்கும்.

இதேவேளை , தனது கட்சிக்காரர் உண்மையிலேயே குற்றவாளிதான் என உறுதியாகத் தெரிந்த பின்பும் அவருக்காக நீதிமன்றில் ஆஜராகி குற்றவாளியைப் பாதுகாக்க ஒரு சட்டத்தரணி முயல்வது குற்றமாகும். அத்தகைய சட்டத்தரணி மீது ஒழுந்து நடவத்க்கை எடுக்க சட்டம் அனுமதித்துள்ளது.

வெறுமனே ஒரு சட்டத்தரணியின் விவாதத்திறமையால் ஒரு குற்றவாளி தப்பிக்கவோ அல்லது ஒரு நிரபராது தண்டிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே , மேற்குறித்த கட்டுப்பாட்டை சட்டம் போட்டுள்ளது.

ஒரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு 6 மாதத்திற்க்குள் அதற்குரிய தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வழங்கப்படும் தீர்ப்பில் அதிருப்தி உறும் மனுதாரர் மேன்முறையீடு செய்ய முடியும். அந்த மேன்முறையீடு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் , ஒரு மேல் விசாரணைக்குழு அந்த வழக்கை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் தரப்பை வழங்கும்.

தமிழீழ நீது மன்றங்களுக்குரிய நீதிபதிகள் புலிகள் இயக்கத்தின் நீதி நிருவாகப் பிரிவினரால் நடாத்தப்படும் தமிழீழ சட்டக் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நீதிபதிகள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருப்பார்.

நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசியத்தலைவரின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொள்வர்.

தமிழீழ நீதிமன்றில் நீதிபதிகள் முநிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்த சட்டத்தரணிகள் மட்டுமே , நீதிமன்ற வழக்குகளை மற்றும் சட்டவியல்களில் பங்குபெற சட்டம் அனுமதிக்கும். இந்த சட்டத்தரநிகளில் விரும்பியவர்கள் அரச சட்டத்தரணியாக பதிவுசெய்து கொள்ளலாம். இவர்களுக்கு மாதாந்தம் வேதனம் வழங்கப்படும். பணவசதி அற்றவர்களும் ஆதரவற்றவர்களும் இந்த அரச சட்டத்தரணிகளின் மூலம் தமக்குரிய நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நீதிமன்ற விசாரண நடைமுறைகளைப் பொறுத்தவரை குடும்ப வழக்குகள் – பாலியல் சம்மந்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகள் சம்மந்தப்பட்ட வழக்கின் விசாரணைகள் – பகிரங்கமாக நடைபெறமாட்டாது. மற்ற வழக்குகள் பகிரங்கமாக நடைபெறும். நீதிமன்ற கட்டுப்பாடுகள் – சட்டதிட்டங்களுக்கு அமைய , பார்வையாளர்களாக பொதுமக்கள் அனுமதிக்கபடுவர்.

எந்த ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாகவும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தண்டம் அல்லது ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றவர்கள் , தவறுக்கு மன்னிப்புக்கோரி , தண்டனையைக் குறைக்கும்படி தேசியத்தலைவருக்கு கருணைமனு அனுப்பவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை ஒவ்வொரு மாவீரர் தினத்தையொட்டி  , தேசியத்தலைவரின் ஆணையின் பேரில் , சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவர்.

குற்றங்களுக்குரிய தண்டனையாக அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும். கடுங்காவல் கைதிகளைத் தவிர ஏனையோர் சமூகநலத் திட்டங்களுக்கும் தேச புனர்நிர்மாண வேலைகளுக்கும் கட்டாய உடல் உழைப்பு நல்கும்படி பணிக்க்கப்படுவர்.

தமிழீழ நீதிமன்றங்கள் வெறுமனே மக்கள் மத்தியில் நீதி பரிபாலனம் செய்வதோடு மட்டுமல்லாது , ஒரு ஜனநாயக அரசின் மிகமுக்கிய தூணாகவும் அரசின் சக்திமிக்க ஒரு அழகாகவும் செயற்பட இருக்கின்றன.தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்.

1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்” என்றார்.

– விடுதலைப்புலிகள் இதழ் (ஆடி 1993)

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.