ஜனனமும் மரணமும் விடுதலைக்காக…!

In தமிழீழ போராட்ட வரலாறு

ஜனனமும் மரணமும் விடுதலைக்காக!

கார்த்திகை 27 மாவீரர் நாள்

எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள்.

அடக்கி வைத்து, எம்மை இனியும் ஆள முடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள்.

ஊயிர் கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற் சாவு மூலம் முரசறைந்த நாள்.

ஆம்! மாவீரர் நாள்
தமிழீழத்தின் தேசிய நாள்.

சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற் சாவை இன்றுதான் சந்தித்தான்.

ஓரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், காலுக்கு முத்தமிட்டுக் கிடந்துத எங்கள் இனம்.

காலிமுகத் திடலிலும், கச்சேரி வாசலிலும் ஆயுதமற்று அறப்போர் செய்த எங்கள் இனத்தை குண்டாத் தடியாலும், துப்பாக்கிப் பிடியாலும் தாக்கித் தூக்கியெறிந்தது சிங்களப் பேரினவாதம்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் புறப்பட்டால் பத்து இடத்திலாவது தமிழரை இறக்கி ‘நீங்கள் யார்?’ என்று கேட்புத போல அடையாள அட்டை பார்ப்பார்கள். வுரிசையில் நிற்கவைத்து கேள்விகள் கேட்பார்கள். எங்கள் தங்கைகளைத் தடுத்து வைத்து, ‘குண்டு கொண்டு போகின்றாயா?’ என்று இரட்டை அர்த்தத்தில் பரிகசிப்பார்கள்.

இத்தனையையும் கூனிக்குறுகிப் பொறுத்துக் கொண்டு என்ன செய்வது என்று வழி தெரியாது இருளில் கிடந்துத எங்கள் இனம்.

கார்த்திகை 26ம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமல் செய்யும் வழி காட்டவென்று வல்வைக் கடற்கரையில் ஒரு பிள்ளை விழி திறந்தது. கார்த்திகை 27ம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்ய இரத்தம் சிந்தாமல், உயிரை விலைகொடுக்காமல் விடிவில்லை என்பதைக்கூறி ஒரு பிள்ளை விழி முடியது.

இங்கு ஜனனமும், மரணமும் விடுதலைக்கான விளைபொருட்களாயின.

இன்று பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தமிழீழ விடுதலையென்னும் தங்கள் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில், சுதந்திரம் பெறும் நாளில் எங்கள் தலைவன் ஏற்றப் போகும் தேசியக் கொடி காற்றில் அசையும் காட்சியைக் காண்பதற்காக கல்லறைக்குள்ளே கண்மூடிக் காத்திருக்கின்றார்கள்.

ஓவ்வொரு மாவீரர் நாட்களிலும், மாலைப் பொழுதில் கேட்கும் நாதமணிச் சத்தம், ‘விடுதலை பெற்றுது தமிழீழம்’ என்பதை தங்களுக்கு வந்து சொல்லுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், தங்கள் கல்லறையில் நாங்கள் ஏற்றும் நெய்விளக்குச் சுடரில் தமிழீழத்தின் வரைபடத்தையே கண்டு களிப்படைந்து கொண்டுமிருக்கின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்கள் புதைத்த இடங்களாக நாம் எண்ணக்கூடாது. தமிழீழம் என்று கிடைக்குமென்று ஏங்குபவர்கள் தூங்குமிடங்களாகக் கொள்ளுவோம்.

அந்தப் புனித இடத்தில் பூக்களை வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன், விழி சொரிவது மட்டும்தான் எங்கள் பணியாகக் கொள்ளல் ஆகாது.

தமிழீழத்தைப் பெற்று, மாவீரர்களின் தாளடியில் வைப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

அலங்கார வளைவுகள், அந்த பொழுதில் நெய்விளக்குகள், கண்ணீர் மாலைகள் எல்லாம் சம்பிரதாயச் சடங்குகளாக மாறக்கூடாது.

அடுத்த மாவீரர்நாள் விடுதலை பெற்ற மண்ணில் என்று நாங்கள் ஒவ்வொருவரும் சபதமேற்றுக் கொள்ளவேண்டும். இதையே இலக்காகக் கொண்டு நாங்கள் நகரத் தொடங்க வேண்டும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி: சூரியப் புதல்வர்கள் 1995.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.