புள்ளடி…..
ஏட்டிக்குப் போட்டியாய் கூட்டணிகள்….
எட்டமுடியாத தூரத்தில்
எம்மினத்தின் தீர்வுப்பொதி….
பிரதான எதிரியோடு எம்மவர்க்கு
நிகழ்காலத்தில் போரில்லை…..
எமக்குள் நாமே போடுகிறோம்
சொல்வீச்சுப்போராட்டம்…..
சரமாரியாக செல்வீசி கொன்றவன்
சமகாலத்தில் வேடிக்கை பார்க்கும் நிலையாச்சு…..
சின்னங்கள் பலவாச்சு…
கூட்டணிகள் பெருகியாச்சு…..
எம் இனத்துக்குள்ளே பிளவுகள் வலுத்தாச்சு…..
காலப்போக்கில்
எம்
இனத்தின் அடிப்படை எண்ணங்கள்
வெறும் கனவாகி…?
எம் தேசமெங்கும்
எதிரியின் நயவஞ்சகம் நிலைத்திடுமோ…??
அட கடவுளே…!
நின்று நிதானமாய்
சிந்திக்க முடியவில்லையே….!
தேர்தல் களத்தில் யாருக்கு புள்ளடியென்று…..
து.திலக்(கிரி),
சுவிஸ்சர்லாந்து
10.03.2020.