ஈழத்தை தாங்கும் இணையத்து பறவை…!
ஈழத்தின் வரலாறு எழுந்தோங்க எண்ணி
இதயத்தில் நேசிக்கும் ஈழத்தின் பறவை
இமயத்து திசை யாவும் பறந்திங்கு சென்றே
இயங்கிடும் ஈழப்பறவைகள் இணையம்
வாழ்த்துக்கள் கூறி வளர்ந்தோங்க வைப்போம்
வையத்தில் ஈழம் நிமிர்ந்தோங்க செய்வோம்
வருங்காலம் நம் வீரம் புரிந்தோங்க
செய்தே
வளர்ப்போம் வீரத்தை கருவினில் இருந்தே
திசை யாவும் பறக்கட்டும் ஈழத்தின் பறவை
விசை கொண்டு தட்டட்டும் குருவி தன் சிறகை
தாங்கியே உயரட்டும் ஈழத்தின் திறவை
தமிழீழம் வாங்கவே இணைக்கட்டும் உறவை
வாழ்த்திப் போதாது கதை நூறு எழுது
தாழ்த்தியும் சாகாது வரலாற்றை உழுது
வையத்தில் மாவீரம் பதம் தனைதொழுது
வாழட்டும் ஈழப்பறவை இணையத்து விழுது..
. .கவிப்புயல் சரண்..